சிறுநீரக செயலிழப்பு
- முகப்பு
- >
- சிறுநீரக செயலிழப்பு
- >
- நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD)
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD)
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) (CKD) என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாதளவுக்கு பழுதடைந்துவிட்டன என்றும் இது நாளாக ஆக மோசமாகிக்கொண்டே போகும் என்றும் அர்த்தம். நாள்பட்ட சிறுநீரக நோயில் ஐந்து கட்டங்கள் உள்ளன. இதன் கட்டம் 5, கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) ஆகும், சிறுநீரக செயலிழப்பு என்றும் இது அழைக்கப்படுகிறது.
கட்டம் 1 eGFR 90+ |
கட்டம் 2 eGFR 60-89 |
கட்டம் 3 3A eGFR 45-59 3B eGFR 30-44 |
கட்டம் 4 eGFR 15-29 |
கட்டம் 5 eGFR < 15 அல்லது டையாலிஸிஸ் |
---|---|---|---|---|
சிறுநீரக செயல்பாட்டுத் திறன் இயல்பாக இருந்தாலும் சிறுநீரக ஆய்வும் அதன் கட்டமைப்பில் உள்ள மாற்றங்களும் சிறுநீரக நோய் இருப்பதைக் குறிக்கலாம் | சிறுநீரக செயல்பாட்டுத் திறன் சிறிதளவு குறைவது மற்றும் மற்ற பரிசோதனைகள் (கட்டம் 1-க்கானது) சிறுநீரக நோய் இருப்பதைக் காட்டுகிறது | சிறுநீரக செயல்பாட்டுத் திறன் பகுதியாகக் குறைவது | சிறுநீரக செயல்பாட்டுத் திறன் மிக மோசமாகக் குறைவது | மிக மோசமான அல்லது கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) |
சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதக் கணக்கீடு (Glomerular Filtration Rate) (eGFR) என்ற பதம் சிறுநீரக செயல்பாட்டுத் திறனை அளப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் நோயாளி டையாலிஸிஸ் செய்யவோ சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யவோ வேண்டியதாகிறது.
அறிகுறிகளும் அடையாளங்களும்
ஆரம்ப கட்டம்
- தெளிவான அறிகுறிகள் இல்லாதிருக்கலாம், சிறுநீரில் குமிழ்கள்/இரத்தம் வருவதற்கு சாத்தியமுள்ளது.
இடை கட்டம்
- பசியின்மை
- வீக்கம்
- கடும் சோர்வு
கடைசி கட்டம்
- வாயில் அம்மோனியா நாற்றம்
- பசியின்மை/வயிற்றுப்போக்கு
- சுவாசிக்க கஷ்டப்படுவது
- வீக்கம்
- குமட்டல்/வாந்தி
- நினைவு இழப்பது
- இரத்த சோகை
எனக்கு சிறுநீரக நோய் இருக்கிறதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?
சிறுநீரக நோயைக் கண்டறிய 2 சோதனைகள் உள்ளன.
சிறுநீர் பரிசோதனை
(சிறுநீர் அல்புமின் கிரியேட்டினின் விகிதம் அல்லது சிறுநீர் புரதம் கிரியேட்டினின் விகிதம் என்று அழைக்கப்படுகிறது)
சிறுநீர் பரிசோதனை சிறுநீரில் புரதம் கசிவு உள்ளதா என சரிபார்க்கிறது. அசாதாரண புரத கசிவு அளவு சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இரத்தப் பரிசோதனை
இரத்தப் பரிசோதனையானது இரத்தத்தில் உள்ள சீரம் கிரியேட்டினின் அளவை அளவிடுகிறது, இது உங்கள் உடலில் இருந்து இந்த கழிவுகளை அகற்ற உங்கள் சிறுநீரகங்கள் எவ்வளவு நன்றாக வேலை செய்கின்றன என்பதைக் கூறுகிறது. இது உங்கள் வயது, பாலினம் மற்றும் உடல் பரப்பு ஆகியவற்றின் அடிப்படையில் eGFR ஐக் கணக்கிடப் பயன்படுகிறது.
இந்தச் சோதனைகளைப் பற்றி மேலும் அறிய உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் அல்லது எங்கள் சிறுநீரகப் பரிசோதனைத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய NKF இன் CKD கிளினிக்கு வருகை புரியவும்.