எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்
- முகப்பு
- >
- ஆதரவு கொடுங்கள்
- >
- நன்கொடை திட்டங்கள்
- >
- லைப் ட்ராப்ஸ்
லைப் ட்ராப்ஸ்
எங்களுக்கு நன்கொடை வருகிற முக்கிய வழி லைப் ட்ராப்ஸ (LifeDrops) ஆகும். பணம் மாதந்தோறும் தானாகவே கழிக்கப்படுகிறது. இந்த முறையில் நன்கொடையாளர்கள் நிதி வழங்குகிறார்கள். இதனால், நிதியை உயர்த்துவதற்கான செலவுகளைக் குறைக்கவும், எங்களது சேமிப்புகளை வசதிவாய்ப்பற்ற நோயாளிகளுக்குப் பயன்படுத்தவும் எங்களால் முடிகிறது.

SGD $40 மூலம் ஒரு நோயாளிக்கு அன்றாட சாமான்களை வாங்குவதற்கான மளிகை சாமான் பற்றுசீட்டு வழங்க முடியும்.
SGD $25 மூலம் ஒரு நோயாளிக்கு டயலைசர் (Artificial Kidney) (A.K.) கிடைக்க உதவ முடியும், அதை வைத்து உடலிலுள்ள கழிவுகளையும் அதீத திரவங்களையும் அவரால் 1 வாரத்துக்கு வடிகட்ட முடியும்.
SGD $10 மூலம் ஊட்டச்சத்துக் குறைவுள்ள நோயாளிக்கு 1 வாரத்துக்குத் தேவையான சத்துள்ள சப்ளிமெண்டுகள் வழங்க முடியும்.
லைப் ட்ராப்ஸுக்கு நான் எப்படி நன்கொடை அளிக்கலாம்?
GIRO அல்லது கிரெடிட் கார்ட் வழியாக நன்கொடை அளிக்கலாம். என்றாலும், GIRO வழியாக நன்கொடை அளிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அப்படிச் செய்தால் நிர்வாகச் செலவுகளை எங்களால் குறைக்க முடியும்.
லைப் ட்ராப்ஸ் எப்போது ஆக்டிவேட் ஆகும்?
உங்களுடைய நன்கொடைகள் எங்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய வங்கிக்கு ஏறத்தாழ ஒரு மாதம் எடுக்கும். முதல் முறை பணம் கழிக்கப்பட்டதை தெரிவிப்பதற்காக நாங்கள் உங்களுக்கு ஒப்புதல் கடிதம் அனுப்புவோம்.
இதனால் கிடைக்கும் வரிச் சலுகைகள் என்ன?
உங்கள் நன்கொடையைவிட 2.5 மடங்கு வரி விலக்கு கிடைக்கும். அதாவது, நீங்கள் கொடுக்கும் $1-க்கு $2.50 உங்கள் வரிப் பணத்திலிருந்து குறைக்கப்படும். உங்களுடைய நன்கொடைகள் உங்களது வரி மதிப்பீட்டில் தானாகவே சேர வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்களது NRIC/FIN நம்பரை தெரிவிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள்.
என்னுடைய அக்கவுண்ட்டில் போதுமான பணம் இல்லாவிட்டால் என்ன செய்வது?
பணத்தைக் கழிக்கும் நாளை மாற்றுவதற்கு பிரத்யேக ஏற்பாடு செய்வதற்காக 1800-KIDNEYS (5436397) அல்லது lifedrops@nkfs.org -ல் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு வேறெந்த கேள்விகள் இருந்தாலும் இந்த நம்பரில் எங்களை அணுகலாம்.
இன்றே லைப் ட்ராப்ஸ் நன்கொடையாளர் ஆவதன் மூலம் எங்களுக்குக் கைகொடுங்கள்!