Menu

சிகிச்சை

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
Youtube இல் எங்களைப் பின்தொடரவும்

அனுமதிக்கான தகுதிகள் மற்றும் செலவுகள்

என்கேஎப்-யின் டையாலிஸிஸ் திட்டம்
என்கேஎப்-யின் டையாலிஸிஸ் திட்டத்தில் வசதிவாய்ப்பற்ற நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிசெய்வதற்காக, எல்லா விண்ணப்பதாரர்களும் ஒரு விரிவான வருவாய் பரிசோதனையின் மூலம் நிதிநிலை மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள். தனியார் மையங்களில் டையாலிஸிஸ் செய்ய வசதியுள்ள நோயாளிகள் தனியார் டையாலிஸிஸ் மையங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நோயாளிகளும்கூட என்கேஎப்-யின் நோயாளி அப்பீல் கமிட்டிக்கு மேல்முறையீடு செய்யலாம். என்கேஎப் சாராத இந்த கமிட்டி அங்கத்தினர்கள் இந்த மேல்முறையீடுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து, நோயாளியை என்கேஎப்-யின் ஹீமோடையாலிஸிஸ் திட்டத்தில் அனுமதிக்க முடியுமா என்பதைத் தீர்மானிப்பார்கள்.

உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி
உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி, உயிரோடு இருக்கும்போது சிறுநீரக தானம் செய்கிற ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளால் (restructured hospitals) சிபாரிசு செய்யப்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமைப் பெற்றவர்கள் மட்டுமே இந்த நிதியுதவிக்காக விண்ணப்பிக்க முடியும். அவர்கள் என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட வேண்டும். உதவி பெறுபவர் மட்டுமே, என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட வேண்டும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுச் செலவுகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகள், வருவாய் இழப்பு மற்றும் காப்பீட்டு தவணை ஆகியவை இந்த நிதியில் உட்படும்.

கூடுதல் தகவலுக்கு, 6506 2187 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது nkfapplication@nkfs.org-க்கு ஈ-மெயில் செய்யவும்.

கீழே உள்ள, என்கேஎப்-யின் ஹீமோடையாலிஸிஸ்/ பெரிடோனியல் டையாலிஸிஸ் திட்டத்துக்கான அல்லது உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதிக்கான விண்ணப்ப படிவங்களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்ப படிவங்கள்:

செலவுகள்
டையாலிஸிஸ் கட்டணம் (13 முறைக்கானது)
குறைக்கவும்: எம்ஓஹெச்-யின் மானியத் தொகை
குறைக்கவும்: மெடிஷீல்ட் காப்பீட்டுக் கோரிக்கை
குறைக்கவும்: என்கேஎப்-யின் மானியத் தொகை
மீதி: நோயாளியின் இணைக் கட்டணம்*
தொடர்புகொள்ளும் விவரங்கள்
ஊடக கேள்விகள்

நோயாளிகள் தங்களுடைய சிகிச்சையிலும் புனர்வாழ்வு பராமரிப்பிலும் காலெடுத்து வைக்கும்போது அவர்களோடு பயணிக்கவும், சிறுநீரக செயலிழப்பைத் தவிர்ப்பதற்காக சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சமூகத்துக்கு பயனளிக்கும் விதமாக சிறுநீரக மையங்களின் இட அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தி நேஷனல் கிட்னி பவுன்டேஷன் (NKF) தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ளது.

எங்களைப் பின்தொடருங்கள்
Copyright © 2021 NKF. Developed by I Concept. All rights reserved.
error: Content is protected !!
Scroll to Top

FAQ

General Enquiries

Admissions

Kidney Live Donor Support Fund

Donation & Volunteering

Can't find what you are looking for?

Notice

Thank you for visiting us.

Due to the current COVID-19 situation, we seek your kind understanding and patience should our response be delayed. Rest assured that we will get back to you as soon as we can.

We are grateful for your steadfast support as we strive hard to overcome the challenges during this trying period to ensure our patients continue to receive dialysis treatment uninterrupted.