Menu

எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

தொண்டூழியர் திட்டங்கள்

டையாலிஸிஸ் மையங்களில் நட்புபாராட்டும் நேரங்கள்

எங்களுடைய நோயாளிகளின் நாளை நன்னாள் ஆக்க, காதுகொடுத்துக் கேட்பது, ஊக்கமூட்டுகிற விதத்தில் பேசுவது, ஒரு புன்னகை உதிர்ப்பது போன்றவை போதுமானது. அவர்களுடைய இதயத்தில் நம்பிக்கை மலர உதவுங்கள், சிகிச்சை சுமையைக் குறைக்க இப்போதே கைகொடுங்கள்!

  • நாள்: திங்கள் மற்றும் சனிக்கிழமைக்கு இடையே எந்த நாளாகவும் இருக்கலாம்
  • நேரம்:
    – காலை 8 முதல் 10 வரை அல்லது
    – மதியம் 1 முதல் 3 வரை அல்லது
    – மாலை 6 முதல் 8 வரை
    (குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட டையாலிஸிஸ் மையத்தைப் பொருத்து நேரம் வேறுபடலாம்)
  • இடம்: சந்திக்க வேண்டிய டையாலிஸிஸ் மையங்களின் பட்டியலுக்காக இங்கே க்ளிக் செய்யுங்கள்
  • தொண்டூழியர்களின் எண்ணிக்கை:அதிக பட்சம் 15
நோயாளிக்குத் துணையாகச் செல்வது

நோயாளிக்குத் துணையாகச் சென்று, ஓரளவு தரமான வாழ்க்கை வாழ அவருக்குத் துணை புரியும் மருத்துவ சிகிச்சைகளைக் கண்டடைய உதவுங்கள்.

குறிப்பு:

  • இந்தத் திட்டம் நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் இருக்கும்
  • நோயாளிகள் தங்கள் வீடுகளிலிருந்து டையாலிஸிஸ் மையத்துக்குச் செல்வதற்கோ அல்லது டையாலிஸிஸ் மையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி வருவதற்கோ மட்டுமே தொண்டூழியர்கள் துணை செல்லுமாறு எதிர்பார்க்கப்படுகிறார்கள்
  • மருத்துவமனைக்குத் துணை செல்லும் விஷயத்தில், நோயாளிகள் மருத்துவமனையில் செலவு செய்கிற முழு சமயமும் தொண்டூழியர்கள் உடனிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
  • வாகனம் உள்ள வாலண்டியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும், ஆனால் அது கட்டாயம் இல்லை
வீட்டு உதவி

எங்கள் நோயாளிகளுக்குச் சுத்தமும் சௌகரியமும் உள்ள வீட்டுச் சூழல் கிடைக்க உங்கள் இதயத்தாலும் கைகளாலும் இப்போதே உதவுங்கள்!

  • இந்தத் திட்டம் நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் இருக்கும்
  • இதற்குரிய நாளும் நேரமும் நோயாளி வீட்டில் இருக்கும் சமயத்தையும் அவருடைய உடல்நிலையையும் பொறுத்தே இருக்கிறது
நிர்வாக உதவி

எங்களுடைய நிர்வாகத் திறனை மேம்படுத்த எங்களுடன் சேர்ந்து நிர்வாக செயல்பாடுகளில் பின்னணியாக உதவுங்கள்.

  • நாள்: திங்கள் மற்றும் சனிக்கிழமைக்கு இடையே எந்த நாளாகவும் இருக்கலாம்
  • நேரம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை
  • இடம்: என்கேஎப் மையம்
மேம்பாடு

எங்களுடைய நோயாளிகளின் வாழ்வை வளமாக்க, நீங்கள் அவர்களுக்கு ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொடுக்கலாம் அல்லது நீங்கள் ஆர்வத்தோடு செய்யும் வேலைகளை, விருப்ப வேலைகளை பகிர்ந்துகொள்ளலாம்.

  • நாள், நேரம் & இடம்:மாற்றத்தக்கது
கார்பரேட்/பள்ளி தொண்டூழியர்கள்

கார்பரேட் மற்றும் பள்ளி தொண்டூழியர்கள் குழுவாக சேர்ந்து எங்களோடும்கூட வாலண்டியராகப் பணியாற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம்!

Volunteer@nkfs.org மூலம் இப்போதே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!

என்கேஎப் நண்பர்கள் திட்டம்

என்கேஎப் நண்பர்கள் (Friends of NKF) (FON) திட்டம் 2016 நவம்பரில் தொடங்கப்பட்டது. வருடக்கணக்காக, கருணை மனதோடும் தாராள குணத்தோடும் எங்கள் லட்சியத்தில் எங்களோடு துணை நிற்கிறவர்களுக்கு நன்றிபாராட்டும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டது.
(ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)

நன்கொடை திட்டங்கள்

நீங்கள் செய்கிற சிறு சிறு உதவிகூட எங்களுடைய சிறுநீரக நோயாளிகளுக்குப் பெரிய உதவி.

K-Buddy
wpChatIcon
Scroll to Top

Notice

Thank you for visiting our website.

Please be informed that Friends of NKF and Donation Portal will undergo scheduled maintenance on 26 November 2026, Thursday, from 11:30 PM to 2:00 AM (Friday). These sites will not be available during this period. 

To donate, you may launch your mobile app and scan the QR code below, or select PayNow and key in our UEN: 200104750M.

If you require tax deduction for this donation, please key in your NRIC/FIN/UEN and phone number in the UEN/BILL REFERENCE NO. field.

If you have any other donation enquiries, please feel free to email us at lifedrops@nkfs.org.

We apologise for any inconvenience caused.