சிகிச்சை
- முகப்பு
- >
- பலவகை சிகிச்சை முறைகள்
- >
- சிறுநீரக மாற்று சிகிச்சை என்றால் என்ன?
சிறுநீரக மாற்று சிகிச்சை என்றால் என்ன?
சிறுநீரக மாற்று சிகிச்சை என்பது தானம் செய்பவரின் உடலிலிருந்து சிறுநீரகம் அறுவை சிகிச்சையின் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு நோயாளியின் உடலில் பொருத்தப்படுகிற செயல்முறையைக் குறிக்கிறது. நோயாளி தனது குடும்ப அங்கத்தினரிடமிருந்தோ, மணத் துணையிடமிருந்தோ, நெருங்கிய நண்பரிடமிருந்தோ ஒரு சிறுநீரகத்தைப் பெறலாம். அவர்கள் உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர் என அழைக்கப்படுகிறார்கள். அதோடு, நோயாளி சமீபத்தில் இறந்த ஒரு நபருடைய சிறுநீரகத்தையும் பெறலாம், அவர் இறந்துபோன நன்கொடையாளர் என அழைக்கப்படுகிறார். சிறுநீரகம் மாற்றி வைப்பதுதான் உள்ளதிலேயே மிகச் சிறந்த சிகிச்சை. ஏனென்றால், மாற்றிவைக்கப்பட்ட சிறுநீரகம் செயலிழந்த சிறுநீரகத்துக்குப் பதிலாக கிட்டத்தட்ட முழுமையாக செயல்படுகிறது, இதனால் நோயாளியால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது.

பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்
சிறுநீரக மாற்று சிகிச்சை என்பது தானம் செய்பவரின் உடலிலிருந்து சிறுநீரகம் அறுவை சிகிச்சையின் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு கடைசி கட்ட சிறுநீரக நோய் உள்ளவரின் உடலில் பொருத்தப்படுகிற செயல்முறையைக் குறிக்கிறது. சிறுநீரக மாற்று சிகிச்சையில் 2 வகைகள் உள்ளன – உயிருள்ள நன்கொடையாளரின் சிறுநீரக தானம் மற்றும் இறந்துபோன நன்கொடையாளரின் சிறுநீரக தானம்.
உயிருள்ள நன்கொடையாளரின் சிறுநீரக தானம் என்பது ஒருவருக்கு அவருடைய உயிரோடு இருக்கும் உறவினர் அல்லது நெருங்கிய நண்பரின் சிறுநீரகம் ஒத்துப்போகும்போது அதை எந்தவொரு பணப் பரிமாற்றமும் இல்லாமல் தானம் செய்வதைக் குறிக்கிறது.
நோயாளி தனது குடும்ப அங்கத்தினரிடமிருந்தோ, மணத் துணையிடமிருந்தோ, நெருங்கிய நண்பரிடமிருந்தோ ஒரு சிறுநீரகத்தைப் பெறலாம். அவர்கள் உயிருள்ள உறவுமுறை நன்கொடையாளர் என அழைக்கப்படுகிறார்கள். உடன் பிறப்புக்களின் மரபியல் தன்மைகள் நெருக்கமாக ஒத்திருப்பதால், ஒருவருக்கு அவருடைய உடன் பிறப்பின் சிறுநீரகமே மிக அதிகமாக பொருந்தும். உயிருள்ள நன்கொடையாளரின் சிறுநீரக தானம் என்பது மரபியல் உறவுமுறையாளர் (உயிருள்ள- உறவுமுறையுள்ள) அல்லது உறவுமுறை இல்லாதவர் (உயிருள்ள-உறவுமுறை இல்லாத) எனவும் பிரிக்கப்படுகிறது. சிறுநீரக தானம் செய்பவருக்கும் அதைப் பெறுகிறவருக்கும் உயிரியல் ரீதியாக உறவுமுறை இருக்கிறதா என்பதைப் பொறுத்து இது உள்ளது.
தேசிய உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையைப் பற்றி கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து MOH வெப்சைட்டைக் காண்க.
- இறந்துபோன ஒருவருடைய சிறுநீரகத்துக்காக காத்துக்கொண்டிருப்பதோடு ஒப்பிடும்போது குறைந்த காலக் காத்திருப்பே இதில் உள்ளது.
- உயிர் பிழைப்பது மிகவும் அதிகரிக்கிறது.
(நேஷனல் ட்ரான்ஸ்ப்ளான்ட் லிஸ்ட்டில் பெயர் உள்ள) ஒரு நபருக்கு இறந்தபோன நன்கொடையாளரின் சிறுநீரகம் பொருத்தப்படுவதை இது குறிக்கிறது.
மாற்று சிறுநீரகம் பெறுவதற்கான காத்திருப்பு காலம் சராசரியாக 8 வருடங்கள் ஆகும். இன்றைய தேதி வரையில், இறந்துபோன ஒருவருடைய சிறுநீரகத்தை தானமாக பெறுவதற்காக 400-க்கும் அதிகமான நபர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
முடியும். சிறுநீரகம் மாற்றி வைப்பதுதான் உள்ளதிலேயே மிகச் சிறந்த சிகிச்சை. ஏனென்றால், மாற்றிவைக்கப்பட்ட சிறுநீரகம் செயலிழந்த சிறுநீரகத்துக்குப் பதிலாக கிட்டத்தட்ட முழுமையாக செயல்படுகிறது, இதனால் நோயாளியால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது.
என்கேஎப்-யின் “உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி” மூலமாக சிறுநீரக தானம் செய்கிறவர்களுக்கு மாற்று சிகிச்சைக்கு முந்தைய ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுச் செலவுகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வருடாந்தர மருத்துவ பரிசோதனை செலவுகள், வருவாய் இழப்பு, காப்பீட்டு தவணை தொகை மற்றும் காப்பீட்டு கட்டணம் ஆகியவை ஈடு செய்யப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு, உயிருள்ள நபரின் சிறுநீரக தான ஆதரவு நிதியைப் பற்றி அதிகமாக அறிய தயவு செய்து இங்கே க்ளிக் செய்யவும்.
சிங்கப்பூரில் உள்ள நேஷனல் ஆர்கன் ட்ரான்ஸ்ப்ளான்ட் யூனிட்-ஐ (65) 6321 4390 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது organ.transplant@notu.com.sg-க்கு ஈ-மெயில் செய்யலாம். சிங்கப்பூரில் உறுப்பு மாற்று சிகிச்சை சம்பந்தமாக உங்களுக்குக் கூடுதல் தகவல் தந்து இந்த யூனிட் உதவலாம். உறுப்பு மாற்று சிகிச்சை சம்பந்தமாக கூடுதல் தகவலுக்காக, தயவுசெய்து www.moh.gov.sg சைட்டைப் பார்க்கவும்.
சிங்கப்பூர் சட்டத்தின்படி, உறுப்புகளை வாங்குவதும் விற்பதும் சட்டவிரோதமானது என்பதை தயவு செய்து மனதில் வையுங்கள்.