Menu

என்கேஎப் பற்றி

சமூக டையாலிஸிஸ் சிகிச்சை கொடுப்பதில் முன்னோடிகளாக விளங்கும் தி நேஷனல் கிட்னி பவுன்டேஷன் (NKF) தங்களது நோயாளிகளின் மாறிவரும் உடல்நிலை மற்றும் தேவைகளை ஆதரிப்பதற்காக ஒருங்கிணைந்த சிறுநீரக பராமரிப்புத் திட்டத்தைத் துவங்கியுள்ளது. முக்கியமாக, நோயாளிகள் வயதாகிக்கொண்டே வருவதையும் பல நாள்பட்ட கோளாறுகளாலும் பலவீனமடைந்து வருவதையும் மனதில் கொண்டு இதைத் துவங்கியுள்ளது.

சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?

சிறுநீரகங்கள் சரியாகவோ போதுமான அளவோ செயல்படாததால், உடலில் கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களும் தங்கி விடும் நிலையே சிறுநீரக செயலிழப்பு அல்லது கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) என்று அழைக்கப்படுகிறது.

பயனுள்ள தகவல்கள்

சிறுநீரக சிகிச்சை வகைகள்

சிறுநீரக பாதிப்பு ஆரம்பக் கட்டத்தில் இருந்தால், மருந்து மற்றும் உணவுமுறைகளால் அதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், கடைசி கட்ட சிறுநீரக நோயை (ESRD) குணப்படுத்த முடியாது. ESRD-க்கு இரண்டு சிகிச்சை முறைகள் உள்ளன: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டையாலிஸிஸ்.

உதவிக்கரம் நீட்டுங்கள்

நன்கொடை அளியுங்கள்

சுயநலமற்ற மனநிலையோடு நீங்கள் காட்டும் கனிவும் கவனிப்பும் சிறுநீரக நோயாளிகளுக்கு வாழ்வும் நம்பிக்கையும் அளிக்கிறது.

நேரம் கொடுங்கள். இதயம் பகிருங்கள்.

துயரங்களிலிருந்து மீண்டு வரவும் ஓரளவு தரமான வாழ்க்கை வாழவும் நோயாளிகளை ஊக்குவிப்பதில் தொண்டூழியர்கள் பங்களிக்கிறார்கள்.

சமூக சேவை திட்டங்கள்

சிறுநீரக ஆரோக்கியத்தைப் பற்றியும், அதன் காரணங்களையும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காப்பதற்கான படிகளைப் பற்றியும் என்கேஎப் தங்களது சமூக சேவை திட்டங்கள் வாயிலாக கல்விபுகட்டுகிறது.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top