சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?
சிறுநீரகங்கள் சரியாகவோ போதுமான அளவோ செயல்படாததால், உடலில் கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களும் தங்கி விடும் நிலையே சிறுநீரக செயலிழப்பு அல்லது கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) என்று அழைக்கப்படுகிறது.
பயனுள்ள தகவல்கள்
சிறுநீரக நோய்
சிறுநீரக செயலிழப்பு: உங்களுக்கு வர வாய்ப்புள்ளதா?
நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD)
நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) (CKD) என்றால் உங்களுடைய சிறுநீரகங்கள் சரிசெய்ய முடியாதளவுக்கு பழுதடைந்துவிட்டன என்றும் இது நாளாக ஆக மோசமாகிக்கொண்டே போகும் என்றும் அர்த்தம். நாள்பட்ட சிறுநீரக நோயில் ஐந்து கட்டங்கள் உள்ளன. இதன் கட்டம் 5, கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) ஆகும், சிறுநீரக செயலிழப்பு என்றும் இது அழைக்கப்படுகிறது.
சிறுநீரக செயலிழப்பைத் தடுக்கவும்
உங்களுடைய சிறுநீரகங்களை பாதுகாக்க என்ன படிகளை எடுக்கலாம் என அறிந்துகொள்ளுங்கள்.
சமூக சேவை திட்டங்கள்
சிறுநீரக ஆரோக்கியத்தைப் பற்றியும், அதன் காரணங்களையும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காப்பதற்கான படிகளைப் பற்றியும் என்கேஎப் தங்களது சமூக சேவை திட்டங்கள் வாயிலாக கல்விபுகட்டுகிறது.