Menu

சிறுநீரக செயலிழப்பு

உங்கள் சர்க்கரை அளவைக் குறைக்கவும்

சர்க்கரைகள் என்றால் என்ன?

சர்க்கரைகள் என்பது ஒரு வகை கார்போஹைட்ரேடுகள், ஆற்றலுக்காக நம் உடல் இதை உடைத்துப் பயன்படுத்துகிறது.

சர்க்கரை இரண்டு வகைப்படும்:
இயற்கை சர்க்கரை
– பழங்களில் (ப்ருக்டோஸ்) அல்லது பாலில் (லாக்டோஸ்) இயற்கையாக உள்ள சர்க்கரை.

சேர்க்கப்படும் சர்க்கரை – பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் அல்லது பானங்களைத் தயாரிக்கும் சமயத்திலும் அல்லது மணமும் நிறமும் கூட்டுவதற்காக தயாரிக்கும்போதும் சேர்க்கப்படும் எல்லா வகை சர்க்கரைகளும் இதில் உட்படும்.

அவை ஏன் ஆபத்தானவை?
சர்க்கரை அதிகளவு உட்கொண்டால் தேவையற்ற எடை அதிகரிக்கும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரும் வாய்ப்பு அதிகமாகும், இருதய நோய், புற்றுநோய் போன்ற மற்ற நாள்பட்ட நோய்கள் வரும். பற்களின் ஆரோக்கியத்தையும் அது பாதிக்கும்.

நான் எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்?
சர்க்கரையை, நாள் ஒன்றுக்கு 5 தேநீர்கரண்டி (25கி) வரை சேர்த்துக்கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு வழிகாட்டி நூல் பரிந்துரைக்கிறது.

நாம் சாப்பிடுகிற உணவில் ஒளிந்திருக்கும் சர்க்கரையை கண்டுபிடிக்க முயற்சி செய்தால், இந்த லட்சியத்தை எட்டமுடியும். அதோடு, பதுங்கியிருக்கும் சர்க்கரையை பந்தாடவும் முடியும்.

சர்க்கரையின் பெயர்களை அறிந்திருங்கள்

ஒரு உணவுப் பொருளில் சர்க்கரை ஒளிந்திருக்கிறதா என்பதைச் சுட்டிக் காட்டுகிற சில துப்புகள் இதோ:

  • ஸிரப் (syrup) அடங்கியுள்ளது (உதாரணமாக: மக்காச் சோள ஸிரப், பழ ஸிரப், மேப்பில் ஸிரப், அரிசி ஸிரப், ரோஸ் ஸிரப்)

  • “ose” என்ற ஆங்கில வார்த்தையில் முடியும் (உதாரணமாக: ப்ருக்டோஸ், க்ளுகோஸ், சுக்ரோஸ், மால்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ்)

  • “சுகர்” என்ற ஆங்கில வார்த்தை அதன் பெயரில் இருக்கும் (உதாரணமாக: ரா சுகர், கேன் சுகர், ப்ரவுன் சுகர், கன்பெக்ஷ்னரி சுகர், வைட் சுகர், சுகர் ஆல்கஹால்ஸ்)

  • பழத் தேன், அடர்த்தியான பழச்சாறு, தேன், நீலக்கற்றாழை மற்றும் வெல்லப் பாகு போன்றவையும் சேர்க்கப்பட்ட சர்க்கரையில் உட்படும்.

சத்து விவரப் பட்டியலை எப்படி வாசிப்பது?

ஆரோக்கியமான மாற்று உணவுகளுக்கு மாறுங்கள்

இந்த உத்தியைப் பின்பற்றினால் சேர்க்கப்பட்ட சர்க்கரையையும் கலோரிகளையும் உங்களால் குறைக்க முடியும்!

டெஸர்ட்டும் (Desserts) இனிப்பும்

டெஸர்ட்டையும் இனிப்புகளையும் நீங்கள் சுத்தமாக ஒதுக்கிவிட வேண்டிய அவசியமில்லை. சர்க்கரை அதிகமுள்ள ஐஸ்கிரீம்-க்குப் பதிலாக ஆரோக்கியமான மாற்று பண்டங்களான ஷர்பத், உறைந்த யோகர்ட் (yogurt) போன்றவற்றை எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சாப்பிடுங்கள். அவற்றில் பழங்கள் சேர்த்து ப்ரீஸ் செய்தால் ஒரு சம்மர் டிரீட்டை சட்டென்று அனுபவிக்கலாம்.

நொறுக்குத் தீனி மற்றும் கிரேனோலா மிக்ஸ்

சூப்பர் மார்கெட்டுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற நொறுக்குத் தீனியையும் கிரேனோலாவையும் வாங்குவதற்குப் பதிலாக, அவற்றை சர்க்கரை சேர்க்காமல் வீட்டிலேயே தயார் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான நட்ஸ், உலர்ந்த பழங்கள், சர்க்கரை சேர்க்கப்படாத ரோல்ட் ஓட்ஸ் மற்றும்/ அல்லது முழு தானியங்களை அவற்றில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுவையூட்டும் பொருட்களும் ஸாஸ்-களும் (Sauces)

கடைகளில் விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட ஸாஸ்-களிலும் சுவையூட்டு பொருட்களிலும் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதனால், அவற்றை வீட்டில் தயாரித்து உபயோகியுங்கள். இதனால், அவற்றில் சேர்க்கப்பட்ட சர்க்கரையின் அளவை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

காபி மற்றும் தேநீர்

காபியிலும் தேநீரிலும் சர்க்கரையின் அளவை படிப்படியாக நிறுத்துங்கள். ஒரு வாரத்துக்கு அரை சர்க்கரை, பின்பு அடுத்த வாரத்தில் அதைவிட அரை சர்க்கரை எனக் குறையுங்கள். இனிப்புச் சுவையைப் படிப்படியாக குறைத்தால், அதை ஏற்றுக்கொள்ள உங்கள் உடலும் பழகிக்கொள்ளும்.

அவற்றில் எவ்வளவு சர்க்கரை உள்ளது எனப் பாருங்கள்

எண் சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் மொத்த சர்க்கரை அளவு (தேக்கரண்டி) சர்க்கரை குறைவுள்ள மாற்றுப் பண்டங்கள் மொத்த சர்க்கரை அளவு (தேக்கரண்டி)
1 மோச்சா
(250மிலி)
2.5 கேப்பச்சீனோ
(250மிலி)
1
2 காபி (Kopi)
(250மிலி)
4.5 எவாப்பரேட்டட் பால், கொஞ்சம் சர்க்கரையில் போட்ட காபி (Kopi C Siu Dai) (250மிலி) 3
3 சாக்லேட் பால்
(200மிலி)
5.5 பால்
(200மிலி)
3
4 ஐஸ் லெமன் டீ
(300மிலி)
6 லெமன் டீ பேக், சர்க்கரை சேர்க்கப்படாதது
(300மிலி)
0
5 கிரீன் டீ பானம்
(250மிலி)
3 ஊலாங் டீ பானம்
(250மிலி)
0
6 மில்க் சாக்லேட்
(4 கட்டிகள், 20கி)
2 90% கோகோ வுடன் டார்க் சாக்லேட்
(1 கட்டி, 20கி)
<0.5
7 வெனிலா ஐஸ்கிரீம்
(2 கரண்டி, 100கி)
4 உறைந்த யோகர்ட்
(2/3 கப், 100கி)
2.5
8 தக்காளி பாஸ்தா ஸாஸ்
(1 கப், 280கி)
3.5 தக்காளி ப்யூரி
(1 கப், 280கி)
2.5
9 ஹசில்நட் சாக்லேட் ஸ்ப்ரெட்
(1 மேஜைக்கரண்டி, 19கி)
2 பீனட் பட்டர்
(1 மேஜைக்கரண்டி, 20கி)
<0.5
10 பட்டர் கேக்
(1 துண்டு, 90கி)
5.5 ஸ்டீம்ட் ஸ்பான்ஜ் கேக்
(1 துண்டு, 40கி)
2

*தேக = தேக்கரண்டி

மொத்த சர்க்கரை அளவு: இதில் இயற்கை சர்க்கரையும் சேர்க்கப்பட்ட சர்க்கரையும் அடங்கியிருக்கலாம்.
தகவல் மூலம்: உணவிலுள்ள எனர்ஜி மற்றும் சத்து தொகுப்பு, ஹெல்த் ப்ரமோஷன் போர்ட்,

சர்க்கரையை சரிகட்டிவிடுங்கள் துண்டுப்பிரதியை பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்க

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top