சிகிச்சை
- முகப்பு
- >
- பலவகை சிகிச்சை முறைகள்
- >
- டையாலிஸிஸ் நோயாளிகள் உடல் வலிமை காக்க
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
டையாலிஸிஸ் நோயாளிகள் உடல் வலிமை காக்க
ஹீமோடையாலிஸிஸ் நோயாளிகளைப் போலவே, பெரிடோனியல் டையாலிஸிஸ் நோயாளிகளுக்கும் தசை நலிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். அதுமட்டுமல்ல, பெரிடோனியல் டையாலிஸிஸ் நோயாளிகளின் உடலில் டையாலிஸிஸ் கரைசல் செல்வதால் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கலாம். டையாலிஸிஸ் நோயாளிகள் செய்யும் உடற்பயிற்சிகளில் ஏரோபிக் உடற்பயிற்சிகள் (aerobic), எதிர்ப்புப் பயிற்சிகள் மற்றும் நீட்டல் பயிற்சிகள் ஆகியவற்றை உட்படுத்தலாம். சந்தேகம் இருந்தால் பதிவுபெற்ற உடற்பயிற்சி நிபுணரையோ சிறுநீரக மருத்துவரையோ கேளுங்கள்.
எந்தெந்த உடற்பயிற்சிகள் ஏற்றவை?
உடற்தகுதியைக் கட்டமைக்க, பயிற்சியின் தீவிரத்தைக் கூட்டுவதற்கு முன்பு நடை பயிற்சி போன்ற குறைவான பாதிப்பு ஏற்படுத்துகிற உடற்பயிற்சிகளிலிருந்து தொடங்குங்கள். அதன் பின்பு, மிதிவண்டி ஓட்டுவது, ஸூம்பா மற்றும் ஏரோபிக் உடற்பயிற்சிகள் (aerobic),என பல வகைகளை உடற்பயிற்சி திட்டத்தில் உட்படுத்தலாம்.
ஒரு பயிற்சி திட்டத்தின் எல்லா கட்டத்திலும் வலுவூட்டும் உடற்பயிற்சிகளை உட்படுத்த வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பகுதிகளில் கொடுக்கப்பட்டுள்ள, அமர்ந்து செய்கிற எளிய உடற்பயிற்சி வகைகளிலிருந்து நோயாளிகள் தொடங்கலாம். படிப்படியாக, நீலப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள, நின்று செய்கிற உடற்பயிற்சிகளையோ தண்ணீர் பாட்டில்கள் அல்லது இரு முனை பளுக்கருவி (dumb bells) போன்ற பளுக் கருவியை உபயோகித்து செய்யும் பயிற்சிகளையோ சேர்க்கலாம்.
வலுவூட்டும் பயிற்சிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும் (கருத்து கையேடு)
வயதாகும்போது, சமநிலை உடற்பயிற்சிகள் நமக்கு முக்கியம்.
- நம் சமநிலையையும் நடையையும் அது மேம்படுத்தும்
- தசை பலவீனம், புண் மற்றும் மூட்டு பிரச்சினைகளைத் தவிர்க்கவும்
சமநிலை பயிற்சிகளுக்கு இங்கே க்ளிக் செய்யலாம்
நமக்கு வயதாகும்போது, நம் மூட்டுகள் மற்றும் தசைகளின் வளைந்து கொடுக்கும் தன்மை குறைகிறது. சுலபமாக நடமாடுவதற்காக, தினமும் நீட்டல் பயிற்சிகளைச் செய்து உடல் இயக்கத்தைக் காத்துக்கொள்வது முக்கியம்.
நீட்டல் பயிற்சிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
நான் வாரத்திற்கு எவ்வளவு முறை உடற்பயிற்சி செய்ய வேண்டும்?
எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை
பெரிடோனியல் டையாலிஸிஸ் நோயாளிகளுக்கு:
- கதீட்டரில் தொற்றுகளும் அதிர்வுகளும் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க நீந்த விரும்புகிறவர்கள் நுழைவு பாகத்தை மூடி அதை அசைவற்றதாக வைக்க வேண்டும்.
- பெரிடோனியத்தை அதிகளவு வளைப்பதையோ, நீட்டுவதையோ முறுக்குவதையோ தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், குடலிறக்கம் மற்றும் கசிவுகள் ஏற்படும் ஆபத்தை அவை அதிகரிக்கலாம். (ஆரோக்கிய கருத்து கையேட்டில் உள்ள மஞ்சள், பச்சை மற்றும் ஊதா பாகத்தில் “சுருட்டிக்கொள்” (Curl-up) பகுதியைத் தவிர்க்கவும்)
- தங்களுடைய பெரிடோனியத்தில் திரவம் இல்லாதபோது மட்டுமே உடற்பயிற்சி செய்ய நோயாளிகள் விரும்பலாம், திரவத்தோடு செய்வது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.
ஹீமோடையாலிஸிஸ் நோயாளிகளுக்கு:
- டையாலிஸிஸ் நுழைவு (access) உள்ள கை அல்லது கால் பக்கத்தில் அதிக பளுவை தூக்குவதைத் தவிருங்கள்.
- ஹீமோடையாலிஸிஸ் செய்யும் நோயாளிகள், டையாலிஸிஸ் இல்லாத நாட்களில், தங்களுடைய உயிர்நிலை உள்ளுறுப்புகள் மிகவும் நிலையாக இருக்கிற சமயத்தில், தங்களுடைய உடற்பயிற்சி திட்டத்தை செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறார்கள்.