சமூக சேவை திட்டங்கள்
- முகப்பு
- >
- சமூக சேவை திட்டங்கள்
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
சமூக சேவை திட்டங்கள்
ஒவ்வொரு 5 மணிநேரத்துக்கும் ஒரு புதிய நோயாளி என உலகில் சிறுநீரக செயலிழப்பு உயர்வாக இருக்கிற நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். சிறுநீரக செயலிழப்பு கண்டறியப்பட்டதாக கணக்கிடப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்கள் அதிகரிப்பது போன்றவை இதற்குக் காரணமாகின்றன.
சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய முடியாது, நோயாளியைக் காப்பாற்ற வாழ்நாள் முழுக்க டையாலிஸிஸ் செய்ய வேண்டும் அல்லது சிறுநீரகம் மாற்றி வைக்க வேண்டும்.
இந்தச் சுழ்நிலையை மாற்றும் நோக்கத்தில் பலதரப்பட்ட முன்னோக்க முயற்சிகளில் என்கேஎப் அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறது.
நாங்கள் விசேஷமாக வடிவமைத்திருக்கும் பல்வேறு கல்வித் திட்டங்கள் மற்றும் தடுப்புமுறை திட்டங்கள் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னேற்றுவிக்கும் எங்களுடைய பயணத்தில் எங்களோடு இணையுங்கள்!
சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய முடியாது, நோயாளியைக் காப்பாற்ற வாழ்நாள் முழுக்க டையாலிஸிஸ் செய்ய வேண்டும் அல்லது சிறுநீரகம் மாற்றி வைக்க வேண்டும்.
இந்தச் சுழ்நிலையை மாற்றும் நோக்கத்தில் பலதரப்பட்ட முன்னோக்க முயற்சிகளில் என்கேஎப் அர்ப்பணிப்போடு ஈடுபடுகிறது.
நாங்கள் விசேஷமாக வடிவமைத்திருக்கும் பல்வேறு கல்வித் திட்டங்கள் மற்றும் தடுப்புமுறை திட்டங்கள் வாயிலாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னேற்றுவிக்கும் எங்களுடைய பயணத்தில் எங்களோடு இணையுங்கள்!
ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்களுக்காக | |||||
---|---|---|---|---|---|
பள்ளிகள் | சமூகம் | ||||
பங்கேற்பு |
குறைந்தது 20 முதல் 40 மாணவர்கள் |
அதிகமான 40 மாணவர்கள் |
குறைந்தது 25 பேர்
குறிப்பு: எண்ணிக்கை 20-க்கும் கீழே இருந்தால் நிகழ்ச்சி நடைபெறாது |
||
நிகழ்ச்சி | |||||
ஆரோக்கிய பேச்சு* | 40 நிமி | 50 நிமி | கே&ப உட்பட 60 நிமி* | ||
சிறுநீரக விளக்க மையம் |
30 நிமி சுய-ஆய்வு |
50 நிமி சுய-ஆய்வு |
40 நிமி வழிகாட்டு சுற்றுப்பயணம் | ||
கே&ப & நோயாளிகள் பகிர்தல் | 20 நிமி | 20 நிமி | |||
கால அளவு | 90 நிமி | 120 நிமி | 100 நிமி |
சிறுநீரக விளக்க மையம்
இந்த மையத்துக்கு வருகை தருபவர்கள், தொடு திரை கொண்ட மல்டி சென்ஸரி காட்சிகள் மற்றும் மோஷன் டிடெக்டர்ஸ் வாயிலாக கற்கிற புதிய அனுபவம் பெறுவார்கள்!
சிறுநீரக ஆரோக்கிய கல்விப் பேருந்துகள்
என்கேஎப்-யின் சிறுநீரக ஆரோக்கிய கல்விப் பேருந்துகள் K-FORCE மற்றும் K-MOVEAT, வருகையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் குறிக்கோளுடன் செயல்படுகிறது.
ஊடாடு கண்காட்சிப் பொருட்கள் (interactive exhibits) மற்றும் மிகைப்படுத்தப்பட்ட மெய்ம்மை (augmented reality) (AR) தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள், சிறுநீரக நோய்களையும் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் பற்றி சுவாரஸ்யமாகக் கற்றுக் கொடுக்கிறது.
வெவ்வேறு வயதுள்ளவர்களுக்கு உதவுவதற்கு ஏற்ப இந்தப் பேருந்துகள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இப்போதே வண்டியில் தாவி ஏறிவிடுங்கள்!
சிறுநீரக ஆரோக்கிய பேச்சுகள்
நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் அதன் தடுப்புமுறைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரோக்கியம் சம்பந்தமான பலதரப்பட்ட விஷயங்களை நாங்கள் அங்கே விளக்குகிறோம். அவற்றில், உங்கள் சிறுநீரகங்களை எப்படிப் பாதுகாப்பது, சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதற்கான வெவ்வேறு சிகிச்சை முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறுநீரகம் பற்றிப் பொதுவாய் உள்ள கட்டுக்கதைகளைப் பற்றியும் நாங்கள் இந்த நிகழ்ச்சியில் பேசுவோம்!
ஊடாடு காட்சி அரங்கம் (Interactive Display Booth)
ஊடாடு காட்சி அரங்கத்தில், நீங்கள் கேட்டுக்கொண்டால், போலியான ஒரு டையாலிஸிஸ் இயந்திரம் உங்கள் பகுதியில் அமைக்கப்படும். நோயாளியின் வாழ்க்கை முறை மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய தகவல் களஞ்சியத்திலிருந்து பயனடைவீர்கள். பார்வையாளர்களை உட்படுத்துகிற விளையாட்டுக்களும் புதிர் போட்டிகளும் இருக்கும். எல்லா வித வயதினரையும் உட்படுத்துகிற கற்கும் அனுபவமாக அது இருக்கும்.
சிறுநீரக விழிப்புணர்வு காட்சி பெட்டி
நாள்பட்ட சிறுநீரக நோயின் தாக்கம், அதன் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், தொடர்ச்சியாக வருகிற விழிப்புணர்வுக் காட்சிகளை உங்களுக்காக நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஏராளமான படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக, இவை ஆரோக்கியமான சிறுநீரகத்தின் முக்கியத்துவத்தைச் சிறப்பித்துக் காட்டுகின்றன. உங்கள் பள்ளிகள் மற்றும் அமைப்புகளுக்கு இந்தக் கருவிகளும் தகவல் மூலங்களும் பயனளிப்பதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்தத் தகவல் மூலங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிந்துகொள்ள இன்றே எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட செயல்பாடுகளுக்காகத் திறந்திருக்கும் நேரம்
திங்கள் – வெள்ளி
காலை 9 முதல் மாலை 5 வரை
சனி – ஞாயிறு
காலை 9 மணி முதல் மதியம் 12 வரை
பொது விடுமுறை தவிர்த்து
மேலே குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய அதற்குரிய பட்டன்களில் நீங்கள் க்ளிக் செய்யலாம்:
ஏதாவது கேள்வி இருந்தால், தயவுசெய்து contact_us@nkfs.org -ல் எங்களுக்கு ஈ-மெயில் செய்யுங்கள் அல்லது 1800-KIDNEYS (5436397) என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்.