சிறுநீரக செயலிழப்பு
- முகப்பு
- >
- சிறுநீரக செயலிழப்பு
- >
- முக்கிய காரணம் – நீரிழிவு நோய்
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
முக்கிய காரணம் – நீரிழிவு நோய்
சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் நீரிழிவு நோயே. 67% புதிய நோயாளிகள் வர இதுவே காரணம். ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. ஏனென்றால், இரத்தத்தை வடிகட்ட சிறுநீர்க்கலங்கள் மிகக் கடினமாக வேலை செய்ய வேண்டியதாகிறது. காலப் போக்கில், அவை பழுதடைந்து வடிகட்டும் திறனை இழக்கின்றன.
உங்களுக்கு நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளதா என அறிய https://www.healthhub.sg/programmes/DRA பகுதியைக் காண்க.
சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளியின் புள்ளிவிவரம்

நீரிழிவு நோயில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன:
முதலாம் வகை நீரிழிவு நோய்
முதலாம் வகை நீரிழிவு நோய் ஒரு ஆட்டோ இம்யூன் நோய் ஆகும்.
கணையம் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்கிறது அல்லது உற்பத்தி செய்வதில்லை. பெரும்பாலும் சிறு பிள்ளைகளுக்கும் வயதுவந்த இளைஞர்களுக்கும் இது வருகிறது.
இரண்டாம் வகை நீரிழிவு நோய்
இரண்டாம் வகை நீரிழிவு நோயே மிகப் பொதுவாகக் காணப்படுகிற நீரிழிவு நோய்.
உடல் இன்சுலினை ஏற்க மறுப்பதுதான் முக்கிய கோளாறாக உள்ளது. அதாவது கணையம் இன்சுலினை சுரக்க வைக்கிறது, ஆனால் உடல் அதைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை.
இது முக்கியமாக வயது முதிர்ந்தவர்களுக்கு வருகிறது.
கர்ப்ப கால நீரிழிவு நோய்
கர்ப்ப கால நீரிழிவு நோய் கர்ப்பிணிகளில் கண்டறியப்பட்டுள்ளது, இது வெளிப்படையாகத் தெரிகிற நீரிழிவு நோய் அல்ல.
சில கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலம் நெருங்குகையில் இது கண்டறியப்பட்டுள்ளது, பொதுவாக பிரசவத்துக்குப் பின்பு இது போய்விடுகிறது.
அறிகுறிகளும் அடையாளங்களும்
அதீத
தாகம்
வெட்டுக் காயங்கள் மெதுவாக ஆறுவது
அடிக்கடி சிறுநீர்
கழிப்பது
திடீரென உடல் எடை குறைவது/கூடுவது
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் எப்படி என் சிறுநீரகங்களை பாதிக்கிறது?
கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய் நம் உடலிலுள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தைச் சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் கடுமையாக வேலை செய்ய வேண்டியதாகிறது.
காலப்போக்கில், சிறுநீரகங்களிலுள்ள நுண்ணிய வடிகட்டிகளான வடிமுடிச்சுகளை இது சேதப்படுத்துகிறது.
சிறுநீரகங்கள் புரதத்தை இரத்தத்தில் கலப்பதற்குப் பதிலாக சிறுநீரில் வெளியேற்றத் தொடங்குகின்றன.
காலப்போக்கில், சிறுநீரக நோய் முற்றுகிறது. இதனால், அதீத திரவமும் நச்சுமிக்க கழிவுகளும் இரத்தத்தில் தங்கிவிடுகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியவும் சரியான நேரத்தில் சிகிச்சையைத் துவங்கவும் சிறந்த வழி, தவறாமல் உடல்நல ஸ்கிரீனிங் செய்வதுதான். உங்கள் உடல் நிறை குறியீடு (BMI) 23.0கிகி/மீ2 -ஆக இருந்தால் (BMI கணக்கிட இங்கே க்ளிக் செய்க), உங்களுடைய நெருங்கிய குடும்பத்தாருக்கு நீரிழிவு நோய் இருந்தால் மற்றும்/அல்லது நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவரானால் நீரிழிவு ஸ்கிரீனிங்கிற்காக உங்கள் குடும்ப மருத்துவரைக் காண விரும்பலாம்.
உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதா என அறிய இதைப் பாருங்கள்:
- பாஸ்டிங் (உணவுக்கு முந்தைய) இரத்த சர்க்கரை 7.0 mmol/L அல்லது அதற்கும் அதிகளவு
- ரேண்டம் இரத்த சர்க்கரை 11.1 mmol/L அல்லது அதற்கும் அதிகளவு
பரிசோதனை |
நார்மல் (mmol/L) |
நீரிழிவு நோயின் ஆரம்ப நிலை (mmol/L) |
நீரிழிவு நோய் (mmol/L) |
---|---|---|---|
பாஸ்டிங் ப்ளாஸ்மா சர்க்கரை (இரவு சாப்பிட்டு 8 மணிநேரம் கழித்து வெறும் வயிற்றில் காலையில் பரிசோதனை செய்ய வேண்டும்) |
≤ 6.0 | 6.1 — 6.9 | ≥ 7.0 |
ரேண்டம் இரத்த சர்க்கரை (க்ளுகோஸ் அடங்கிய சர்க்கரை கரைசலை குடித்தபின் 2 மணிநேரம் கழித்து பரிசோதனைக்காக இரத்தம் எடுப்பது) |
<7.8 | 7.8 — 11.0 | ≥11.1 |
(MOH Clinical Practice Guidelines, 2014)