Menu

சிறுநீரக செயலிழப்பு

முக்கிய காரணம் – உயர் இரத்த அழுத்தம்

சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான இரண்டாவது முக்கியக் காரணம் உயர் இரத்த அழுத்தமாக (ஹைபர் டென்ஷன்) உள்ளது. இதன் அறிகுறிகள் வெளியே தெரியாததால் இது ‘மௌனக் கொலையாளி’ என அழைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள பெரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது.

இரத்த அழுத்தம் என்பது இரத்தக் குழாய்களிலும் இருதயத்திலும் இரத்த ஓட்டத்தால் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. இதில் இரண்டு வகைகள் உள்ளன:

இரத்த ஓட்டம் இரத்தக் குழாய்களுக்குள்ளும் இருதயத்துக்குள்ளும் வேகமாகப் பாய்வதால் இந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நபர் ஓய்வெடுக்கும்போது இரத்த அழுத்தம் 140/90mmHg என்ற கணக்கிலிருந்து விடாமல் அதிகரித்தால் ஏற்படுவதே ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தம். இரத்தத்தில் அதிகளவு திரவம் இருந்தால், இரத்தக் குழாய்கள் சுருங்கியோ விறைப்பாகவோ இருந்தால் அல்லது அதில் அடைப்பு இருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களிலுள்ள இரத்தக் குழாய்களை சேதப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கிறது. இதன் காரணமாக, அவற்றால் உடலிலிருந்து கழிவுகளையும் கூடுதல் திரவங்களையும் வெளியேற்ற முடிவதில்லை. இரத்தக் குழாய்களில் கூடுதல் திரவம் இருந்தால் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். இப்படி ஒரு தீய சுழற்சி உண்டாகி, சிறுநீரகங்கள் பழுதடைகின்றன.

அறிகுறிகளும் அடையாளங்களும்

விடாத தலைவலி

மங்கலாகவோ இரண்டாகவோ தெரிவது

மூக்கில் இரத்தம் ஒழுகுவது

மூச்சு விடுவதில் சிரமம்

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், பார்வையிழப்பு போன்ற கடுமையான கோளாறுகளும் வரலாம்.

கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம் என் சிறுநீரகங்களை எப்படி பாதிக்கிறது?

  • கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களிலுள்ள இரத்தக் குழாய்ச் சுவர்களை சேதப்படுத்தி பலவீனமாக்குகிறது.

  • இரத்தக் குழாய்கள் சேதமடையும்போது, நன்றாகச் செயல்படத் தேவையான ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் அவற்றால் பெற முடியாமல் போகிறது.

  • சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டும் திறனை இழப்பதோடு உடலிலுள்ள திரவத்தையும் ஹார்மோன்களையும் ஆஸிட்களையும் உப்புகளையும் சீர்ப்படுத்த முடியாமல் போகிறது.

  • உடலில் தேங்கிவிட்ட அதீத திரவமும் நச்சுக் கழிவுகளும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இப்படி ஒரு தீய சுழற்சி ஏற்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?
ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தம் என்பது நாம் ஓய்வெடுக்கும்போது நம் இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக 140/90mmHg என்ற அளவுக்கு மேல் இருந்தால் வரும் நிலை ஆகும்.

இரத்த அழுத்தம் ஸிஸ்டாலிக் பிபி*** (mmHg) டையாஸ்டாலிக் பிபி*** (mmHg)
நார்மல் 120-க்கும் குறைவாக 80-க்கும் குறைவாக
எல்லைக்கோடு 130 — 139 80 — 89
உயர்வு 140 அல்லது அதிகமாக 90 அல்லது அதிகமாக

(HPB, 2019)       

இரத்த அழுத்தத்தைக் குறைப்பது என்பது வாழ்நாள் பொறுப்பு. வாழ்க்கை முறையை மாற்றினால், உயர் இரத்த அழுத்தத்தைப் போக்க முடியும்!

உப்பு மற்றும் மதுபானத்தைக் கட்டுப்படுத்துவது உட்பட உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பது, உடல் எடையைக் குறைப்பது ஆகியவை உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் பலனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

உங்களுடைய இரத்த அழுத்தத்தை எப்படி கண்காணிப்பது என்றும் கையாள்வது என்றும் கூடுதலாக அறியுங்கள்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top