Menu

எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

திட்டமிட்ட நன்கொடை கொடுங்கள்

திட்டமிட்ட நன்கொடைகள், எங்களுடைய சிறுநீரக நோயாளிகளின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சிங்கப்பூரில் நாங்கள் செய்கிற சேவைகள் மற்றும் திட்டங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

திட்டமிட்ட நன்கொடை கொடுப்பது எப்படி?

உங்களது சொத்து, CPF, சேமிப்புகள் அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றை இந்த அமைப்புக்கு கொடுப்பதாக உறுதிமொழி தரலாம்:

தி நேஷனல் கிட்னி பவுண்டேஷன்
(UEN: 200104750M)
81 கிம் கீட் ரோடு, சிங்கப்பூர் 328836

CPF மற்றும் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி

உங்களுடைய CPF பயனாளராக என்கேஎப் -ஐ நியமிக்க விரும்பினால், CPF-வெப் சைட்டில் கிடைக்கிற “CPF நாமினேஷன் பார்ம்” (Form 6A(1) – CASH) (PDF, 1.1MB)-ஐ இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் பூர்த்தி செய்யவேண்டும். பின்பு அந்த பார்மை ஏதேனும் CPF சேவை மையங்களில் கொடுக்க வேண்டும்.

என்கேஎப் -ஐ உங்களுடைய காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளராக நியமிக்க விரும்பினால், அந்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திக்குரிய நாமினேஷன் பார்மை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

சொத்து, சேமிப்புகள் மற்றும் எஞ்சிய சொத்து நன்கொடை

சொத்து, சேமிப்புகள் மற்றும் எஞ்சிய சொத்து நன்கொடைகளை உயிலில் எழுதிவைத்து உறுதிமொழி தரலாம்.

நீங்கள் ஏற்கெனவே உயில் எழுதி வைத்திருந்தால், ஆனால் இப்போது எங்களுக்குத் திட்டமிட்ட நன்கொடை அளிக்க விரும்பினால், உங்கள் வழக்கறிஞரிடம் கேளுங்கள். உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கிற அன்பளிப்புகளைப் பாதிக்காத விதத்தில் இதை எப்படி செய்யலாம் என அவர் சொல்வார்.

உங்களுடைய உயிலில் நன்கொடையைக் குறிப்பிடுவதைப் பற்றியோ அல்லது உங்கள் உயிலிலோ டிரஸ்ட்டிலோ தி நேஷனல் கிட்னி பவுண்டேஷனின் பெயரைக் குறிப்பிடுவதைப் பற்றியோ அதிகம் அறிய தயவுசெய்து lifedrops@nkfs.org -க்கு ஈ-மெயில் செய்யவும்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top