Menu

சிகிச்சை

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

அனுமதிக்கான தகுதிகள் மற்றும் செலவுகள்

என்கேஎப்-யின் டையாலிஸிஸ் திட்டம்
என்கேஎப்-யின் டையாலிஸிஸ் திட்டத்தில் வசதிவாய்ப்பற்ற நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிசெய்வதற்காக, எல்லா விண்ணப்பதாரர்களும் ஒரு விரிவான வருவாய் பரிசோதனையின் மூலம் நிதிநிலை மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள். தனியார் மையங்களில் டையாலிஸிஸ் செய்ய வசதியுள்ள நோயாளிகள் தனியார் டையாலிஸிஸ் மையங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அறிவிக்கப்பட்ட வருமானத்தைப் பார்க்கும் சுகாதார அமைச்சின் தேசிய கட்டமைப்பு மற்றும் அமைப்பின் அடிப்படையிலான சோதனையாகும். நேஷனல் மீன்ஸ் டெஸ்ட் சிஸ்டம் வழங்கும் வழிமுறைகள் மற்றும் மானியங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு,இந்த MOH இணைப்பைப் பார்வையிடவும்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நோயாளிகளும்கூட என்கேஎப்-யின் நோயாளி அப்பீல் கமிட்டிக்கு மேல்முறையீடு செய்யலாம். என்கேஎப் சாராத இந்த கமிட்டி அங்கத்தினர்கள் இந்த மேல்முறையீடுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்து, நோயாளியை என்கேஎப்-யின் ஹீமோடையாலிஸிஸ் திட்டத்தில் அனுமதிக்க முடியுமா என்பதைத் தீர்மானிப்பார்கள்.

உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி
உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி, உயிரோடு இருக்கும்போது சிறுநீரக தானம் செய்கிற ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளால் (restructured hospitals) சிபாரிசு செய்யப்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமைப் பெற்றவர்கள் மட்டுமே இந்த நிதியுதவிக்காக விண்ணப்பிக்க முடியும். அவர்கள் என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட வேண்டும். உதவி பெறுபவர் மட்டுமே, என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட வேண்டும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுச் செலவுகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகள், வருவாய் இழப்பு மற்றும் காப்பீட்டு தவணை ஆகியவை இந்த நிதியில் உட்படும்.

கூடுதல் தகவலுக்கு, 6506 2187 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது nkfapplication@nkfs.org-க்கு ஈ-மெயில் செய்யவும்.

கீழே உள்ள, என்கேஎப்-யின் ஹீமோடையாலிஸிஸ்/ பெரிடோனியல் டையாலிஸிஸ் திட்டத்துக்கான அல்லது உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதிக்கான விண்ணப்ப படிவங்களையும் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்ப படிவங்கள்:

செலவுகள்
டையாலிஸிஸ் கட்டணம் (13 முறைக்கானது)
குறைக்கவும்: எம்ஓஹெச்-யின் மானியத் தொகை
குறைக்கவும்: மெடிஷீல்ட் காப்பீட்டுக் கோரிக்கை
குறைக்கவும்: என்கேஎப்-யின் மானியத் தொகை
மீதி: நோயாளியின் இணைக் கட்டணம்*
error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top