Menu

சிகிச்சை

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்கள் உடல் வலிமை காக்க

இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையைச் சீர்படுத்தவும், நோயாளிகளுக்கு நல்ல உடல் செயல்பாட்டை அளிக்கவும், மாற்று சிறுநீரகம் பெற்ற பின்பு நோயாளிகள் எடுக்க வேண்டிய நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகளின் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இருதயத்தின் ஆரோக்கிய நிலை, மாற்று சிறுநீரகம் பெற்றவர்கள் இறப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது, அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அதிக அபாயம் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும்படி கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்கள், எவ்வளவு நாட்கள் கழித்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கலாம்?

உடற்பயிற்சியைத் துவங்குவதற்கு மு ன்பு எவ்வளவு நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பது நோயாளியின் வயது மற்றும் ஆரோக்கிய நிலையைப் பொருத்து இருக்கிறது. எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் துவங்குவதற்கு முன்பு தங்களுக்கு அது ஏற்றதா என தங்களுக்கு மாற்று சிறுநீரகம் வைத்த மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும்.

எந்தெந்த உடற்பயிற்சிகள் ஏற்றவை?

நடை பயிற்சி போன்ற தீவிரம் குறைந்த, குறைவான பாதிப்பு ஏற்படுத்துகிற உடற்பயிற்சிகளிலிருந்து தொடங்குங்கள். ஆரம்ப நிலை உடற்தகுதியைக் கட்டமைத்த பின்பு, நோயாளிகள் தங்களுடைய அன்றாட அட்டவணையில் வலுவூட்டும் உடற்பயிற்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

வலுவூட்டும் பயிற்சிகளுக்கு இங்கே க்ளிக் செய்யவும் (கருத்து கையேடு)

நான் வாரத்திற்கு எவ்வளவு முறை உடற்பயிற்சி செய்யலாம்?

மாற்று சிறுநீரகம் பெற்ற நோயாளிகள் வாரத்துக்கு 2 முதல் 3 தடவை என 60 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய இலக்கு வைக்கலாம். இந்த உடற்பயிற்சியில் ஏரோபிக் உடற்பயிற்சிகள் (aerobic), எதிர்ப்புப் பயிற்சிகளும் (resistance training) சேர்ந்திருக்க வேண்டும். என்றாலும், ஒரேயடியாக 60 நிமிடங்கள் பயிற்சி செய்ய நேரம் அல்லது உடற்தகுதி அனுமதிக்கவில்லை என்றால், ஒரு நாளில் ஒரு முறை 20 நிமிடங்கள் என பிரித்து பல தடவையாக செய்வது இதுபோன்ற பலனளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நோயாளிகள் வாரத்துக்கு குறைந்தது இரண்டு தடவையாவது உடற்பயிற்சி செய்ய லட்சியம் வைக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்யும்போது உடனடி பலன்கள் தெரியாது என்பதால், 2 அல்லது 3 முறைகள் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளிப்படையாக எந்தவொரு பலனமும் தெரியவில்லை என நினைத்து நோயாளிகள் நம்பிக்கையிழந்துவிடக் கூடாது. அவர்கள் அசௌகரியமாக உணர்ந்தால் தவிர, எந்தவொரு உடற்பயிற்சி திட்டத்தையும் கைவிடக் கூடாது.  தங்களுடைய முன்னேற்றத்தை கண்காணித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் உடற்பயிற்சி நிபுணர்களிடம் கேட்க வேண்டும்.

ஆரோக்கிய கருத்து கையேடுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top