சிகிச்சை
- முகப்பு
- >
- பலவகை சிகிச்சை முறைகள்
- >
- உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி
சிறுநீரக மாற்று சிகிச்சையை ஊக்குவிப்பதும் சிறுநீரக தான சட்டத்தை ஆதரிப்பதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே 1970-களின் ஆரம்பம் முதல் என்கேஎப்-யின் முக்கியத் தொண்டாக இருக்கிறது. சிறுநீரக தானத்தை ஊக்குவிப்பதற்கான என்கேஎப்-யின் விடாமுயற்சிகளில் “உயிருள்ள நபரின் சிறுநீரக தான உதவி நிதி”யும் ஒன்று. இது சிறுநீரக மாற்று சிகிச்சையை ஊக்குவிக்கிறது. இந்த சிகிச்சை வாழ்நாளை அதிக பட்சம் நீட்டிக்கவும் தரமான வாழ்க்கை வாழவும் வழிசெய்கிறது.
பொதுவாகக் கேட்கும் கேள்விகள்
இது $10 மில்லியன் நிதியாகும். குறைந்தபட்ச வருவாய் உள்ள நோயாளிகளுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம் உயிருள்ள ஒருவரைத் தனது அன்புக்குரியவருக்கு சிறுநீரக தானம் செய்யும்படி ஊக்குவிப்பற்காக இது ஏற்படுத்தப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை சட்டம் (HOTA) திருத்தம் செய்யப்பட்டதற்கு ஏற்ப நவம்பர் 1, 2009 முதல் இந்த நிதி உதவி அமலுக்கு வந்தது.
அரசு மருத்துவமனைகளால் (restructured hospitals) சிபாரிசு செய்யப்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமைப் பெற்றவர்கள் மட்டுமே இந்த நிதியுதவிக்காக விண்ணப்பிக்க முடியும். அவர்கள் என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட வேண்டும். உயிருள்ள நபரின் சிறுநீரக தானத்தை ஊக்குவிப்பதற்காக, உதவி பெறுபவர் மட்டுமே என்கேஎப்-யின் வருவாய் பரிசோதனை விதிக்கு உட்படுமாறு எதிர்பார்க்கப்படுகிறது.
பின்வருபவை உட்படும்:
- சிறுநீரக தானம் பெறும் ஒருவருக்கு, தானம் செய்ய சாத்தியமுள்ள இரண்டு நபர்களின் ப்ரீ-டிரான்ஸ்ப்ளான்ட் ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுச் செலவுகள்.
- அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வருடாந்திர உடல்நல ஸ்கிரீனிங் மற்றும் பின்தொடருகிற சிகிச்சை செலவுகள்.
- இரண்டு மாத வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஒரு முறை கொடுக்கப்படும் தொகை அல்லது $8,500, இவற்றில் எது குறைவோ அது.
- மருத்துவமனையில் அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைக்கான காப்பீட்டு தவணைகளின் செலவை ஈடு செய்தல் (மெடிஷீல்ட் லைப் தொகை ஈடு செய்தலின் வரம்புக்குட்பட்டது).
- க்ரூப் லிவிங் பாலிஸி திட்டத்தின் அடிப்படையில் $200,000 -க்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை.
- மாரடைப்பு
- புற்றுநோய்
- மல்டிபிள் ஸ்களீரோசிஸ்
- குருட்டுத்தன்மை
- முடக்குவாதம்
- ஃபுல்மினன்ட் ஹெபடைடிஸ்
- பக்கவாதம்
- சிறுநீரக செயலிழப்பு
- முக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை
- கரோனரி தமனி நோய்
- அல்சைமர் நோய்
- பெருந்தமனி அறுவை சிகிச்சை
- கோமா
- செவிட்டுத்தன்மை
- இருதய வாழ்வு அறுவை சிகிச்சை
- பேச்சுத் திறன் இழத்தல்
- அதிகபட்ச தீக்காயங்கள்
- இறுதிக் கட்ட நோய்
- அப்ளாஸ்டிக் அனீமியா
- ப்ரைமரி பல்மனரி ஆர்ட்டரியல் ஹைபர் டென்ஷன்
- நாள்பட்ட நுரையீரல் நோய்
- நாள்பட்ட கல்லீரல் நோய்
- மோட்டர் நியூரான் நோய்
- மஸ்குலர் டிஸ்ட்ராபி
- பார்க்கின்ஸன் நோய்
- ஆன்ஜியோப்ளாஸ்டி
- மூளையுறை அழற்சி
- தீங்கற்ற மூளை கட்டி
- மூளை வீக்கம்
- இரத்தமேற்றியதால் வரும் எய்ட்ஸ்
காப்பீடு அளிப்பவரின் அங்கீகாரத்தைப் பொறுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நாளிலிருந்து 12 வாரங்கள் கழித்து அமலுக்கு வரும்.
சிறுநீரக தானம் செய்பவரின் ‘க்ரூப் லிவிங் பாலிஸி’ தொகைக்காக என்கேஎப் முழு மானியம் வழங்கும்.
இந்தக் காப்பீட்டுத் தொகை அவருக்கு அதிகபட்சமாக 69 வயது வரை, அதாவது கடந்துபோன பிறந்த நாள் 69-ஆக இருக்கும் வரை கிடைக்கும். உதாரணமாக, சிறுநீரக தானம் செய்த சமயத்தில் அவருக்கோ அவளுக்கோ 50 வயது என்றால், அவர் 19 வருடங்களுக்கு (க்ரூப் லிவிங் பாலிஸி-யின் வயது வரம்புபடி 69 வயது) காப்பீடு பெறுவார்.
தானம் செய்கிற ஒவ்வொரு நபரும், அறுவை சிகிச்சைக்கு முன்பு மெடிஷீல்ட் காப்பீடு எடுக்கும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள். அப்படிச் செய்தால், மருத்துவமனை அனுமதி மற்றும் அறுவை சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் மெடிஷீல்ட் ஈடு செய்யும். வருவாய் பரிசோதனை விதிக்கு உட்பட்டிருந்தால், அதன்படி என்கேஎப் அவருடைய காப்பீட்டு தவணைகளை ஈடு செய்யும்.
$10 மில்லியன் என்ற ஆரம்ப நிதி என்கேஎப்-யின் உபரி கையிருப்புத் தொகையிலிருந்து வருகிறது. அது தீர்ந்துவிட்டால், இந்தத் திட்டத்துக்காக நிதி உயர்த்த என்கேஎப் முயலும்.