சிகிச்சை
- முகப்பு
- >
- பலவகை சிகிச்சை முறைகள்
- >
- பெரிடோனியல் டையாலிஸிஸ் என்றால் என்ன?
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
பெரிடோனியல் டையாலிஸிஸ் என்றால் என்ன?
பெரிடோனியல் டையாலிஸிஸ் (Peritoneal Dialysis) (PD) என்பது சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு சிகிச்சை. பெரிடோனியத்தில் பொருத்தப்படுகிற ஒரு நிரந்தரக் குழாய் வழியாக ஒரு விசேஷ ஸ்டிரைல் நீர் அடிவயிற்றுக்குள் செலுத்தப்படுகிறது. இந்தத் திரவம் அடிவயிறு முழுக்கப் பரவி பெரிடோனியத்தைச் (அடிவயிற்றுத் துளை) சுற்றியுள்ள இரத்தக் குழாய்களிலிருந்து கழிவுகளைப் பிரித்தெடுக்கிறது. பின்பு அது அங்கிருந்து வெளியேற்றப்படுகிறது.
PD-யில் 2 வகைகள் உள்ளன – தொடர்ச்சியான ஆம்புலேட்டரி பெரிடோனியல் டையாலிஸிஸ் (Continuous Ambulatory Peritoneal Dialysis) (CAPD) மற்றும் ஆட்டோமேட்டட் பெரிடோனியல் டையாலிஸிஸ் (Automated Peritoneal Dialysis) (APD). PD முறை நோயாளிகளுக்கு அதிக சௌகரியத்தையும் அதிக சுதந்திரத்தையும் தருகிறது. என்கேஎப் ஒரு இலவச PD சமூக ஆதரவு திட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகள் இந்த PD சிகிச்சையை தொடங்கவும் தொடரவும் உதவுகிற சேவைகளை இது அளிக்கிறது. நோயாளிகளும் அவரது/அவளது குடும்பத்தாரும் சிறந்த பலன்கள் பெறவும் சுறுசுறுப்பான வாழ்க்கையைத் தொடரவும் உடல்நல பராமரிப்பு குழுவுடன் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்.
பொதுவாகக் கேட்கப்படும் கேள்விக
படி 1
அடிவயிற்று துளையில் ஒரு கதீட்டர் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.
படி 2
டையாலிஸிஸ் கரைசல் அடிவயிற்றுக்குள் செல்கிறது. அடிவயிற்றிலுள்ள ஒரு லூபுக்குள் (கதீட்டர்) டையாலிஸேட் நிறைந்த ஒரு பை இணைக்கப்படுகிறது
படி 3
டையாலிஸிஸ் தொடருகிறது. கழிவு, திரவம் மற்றும் ரசாயனங்கள் பெரிடோனியல் ஜவ்வு வழியாக டையாலிஸேட்டை அடைகிறது.
படி 4
‘பயன்படுத்தப்பட்ட’ PD கரைசல் வெளியேற்றப்பட்டு அதற்குப் பதிலாக இரண்டு லிட்டர் புதிய PD கரைசல் (மாற்றீடு) உள்ளே செல்கிறது.
தொடர்ச்சியான ஆம்புலேட்டரி பெரிடோனியல் டையாலிஸிஸ் (CAPD) பகலில் செய்யப்படுகிறது, இதற்கு எந்த இயந்திரமும் தேவையில்லை. இந்தச் செயல்முறையில், பெரிடோனியத்தை திரவத்தால் நிரப்பவும் அதை வெளியேற்றவும் PD பை அமைப்பு மற்றும் புவியீர்ப்பு சக்தி பயன்படுத்தப்படுகிறது. ஒரு நோயாளி எத்தனை முறை மாற்றீடு செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் பரிந்துரைப்பார். பொதுவாக, பகலில் மூன்று அல்லது நான்கு மாற்றீடுகளும் மாலையில் ஒரு மாற்றீடும் தேவைப்படலாம். பயன்படுத்தப்பட்ட PD கரைசலுக்குப் பதிலாக புதிய PD கரைசலை மாற்றுவதே மாற்றீடு என அழைக்கப்படுகிறது.
அடிவயிற்றில் இந்த டையாலிஸிஸ் கரைசலை வைத்துக்கொண்டு நோயாளி நடமாடலாம். நோயாளி தூங்கும் நேரத்தில் மாற்றீடு தேவைப்படாது.
ஆட்டோமேட்டட் பெரிடோனியல் டையாலிஸிஸ் (APD) என்பது பொதுவாக இரவில் செய்யப்படுகிறது. இரவில் நோயாளி தூங்கும்போது, சைக்ளர் என்ற ஒரு இயந்திரம் இந்த டையாலிஸேட் கரைசலை மாற்றுகிறது. அதனால், கிட்டத்தட்ட 8-10 மணிநேரத்துக்கு நோயாளி இந்த இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
PD-ஐ வீட்டில் வைத்தும், வேலை செய்யுமிடத்திலும், அல்லது பயணத்தின் போதும் செய்யலாம். ஆனால், இதைக் கண்ணும் கருத்துமாக செய்ய வேண்டும்.
வலி இல்லை, ஊசி வேண்டாம்
- ஹீமோடையாலிஸிஸைப் போல், PD-க்கு இரத்த நாள நுழைவு (vascular access) அல்லது ஊசி குத்துவது தேவையில்லை. எனவே PD ஒரு வலி இல்லாத சிகிச்சைமுறை.
- இரத்த நாள நுழைவு தொடர்பான சிக்கல்கள்தான் ஹீமோடையாலிஸிஸ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு பொதுவான காரணம்.
வீட்டில் செய்யப்படுகிற சிகிச்சை முறை
- நோயாளிகள் தங்கள் வீட்டிலேயே இருந்து சொந்தமாக இந்தச் சிகிச்சையை செய்துகொள்ளலாம்.
- டையாலிஸிஸ் மையத்துக்குப் போக வேண்டிய அவசியமில்லை மற்றும் டையாலிஸிஸ் மையத்தின் அட்டவணைகளுக்குக் கட்டுப்பட்ட வாழ்க்கையும் இல்லை.
- டையாலிஸிஸை தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அதிக சுதந்திரம் உண்டு.
- PD பராமரிப்பு குழு தருகிற ஆலோசனைக்கு ஏற்ப நோயாளிகள் இந்தச் சிகிச்சையை தாங்களாகவே செய்துகொள்ளலாம்.
மென்மையானது, கிட்டத்தட்ட இயற்கையான சிறுநீரகங்களைப் போலவே செயல்படுகிறது
- நிஜ சிறுநீரகங்கள் செய்கிற வேலைகளை PD அப்படியே காப்பியடித்துச் செய்கிறது. அடிவயிற்று துளையில் PD கரைசல் எப்போதும் இருப்பதால், இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களும் அதீத தண்ணீரும் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
- PD-க்கு இடைவிடாமல் செயல்படும் இயல்பு இருப்பதால் இது ஒரு மென்மையான சிகிச்சை முறையாக இருக்கிறது. நோயாளிகளுக்குக் குறைந்தளவு உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்தளவு பக்க விளைவுகள் உள்ளன.
இந்த இலவச திட்டத்தில், பயிற்சி பெற்ற தாதியர்களால் நடத்தப்படும் என்கேஎப்-யின் PD நோயாளி வீட்டுச் சந்திப்பு போன்ற துணை சேவைகள் உள்ளன.
கூடுதல் தகவலுக்கு, 1800-KIDNEYS (5436397) என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது pd.support@nkfs.org-க்கு ஈ-மெயில் செய்யவும்.