எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்
- முகப்பு
- >
- ஆதரவு கொடுங்கள்
- >
- தொண்டூழியர் திட்டங்கள்
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
தொண்டூழியர் திட்டங்கள்
டயாலிசிஸ் மையத்தின் தன்னார்வலர்
இப்போது எங்கள் நோயாளிகளின் பாதுகாப்பைப் பாதுகாக்க உதவ, எங்கள் நர்சிங் சக ஊழியர்களுடன் முன்னணியில் நிற்கவும்! டயாலிசிஸ் மையங்களில் பின்வரும் பணிகளுக்கு நீங்கள் உதவுவீர்கள்:
- நோயாளிகள் தங்கள் டயாலிசிஸ் அமர்வுக்கு வரிசையில் நிற்கும்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல்
- நோயாளி அட்டை விநியோகத்தில் உதவுதல்
- நோயாளிகளுக்கு அவர்களின் டயாலிசிஸ் நாற்காலிக்கு செல்ல உதவுதல்
- சக்கர நாற்காலியில் இருக்கும் நோயாளிகளை அவர்களின் வாகனங்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நியமிக்கப்பட்ட பொது போக்குவரத்து பகுதிக்கு செல்ல உதவுதல்
- டயாலிசிஸுக்கு முந்தைய மற்றும் பிந்தைய அமர்வுகளில் எடை அளவிடும் கவுண்டரில் நோயாளிகளுக்கு உதவுதல்
- இரத்த அழுத்த அளவீடுகளுடன் நோயாளிகளுக்கு உதவுதல்
- நிர்வாக/பேக்கிங் கடமைகள் எ.கா. எளிய காகிதப்பணி
டயாலிசிஸ் மையங்களில் 70 மணி நேர தன்னார்வ சேவையை முடித்த தன்னார்வலர்களுக்கு NKF சேவை சான்றிதழ் வழங்கப்படும்.
- தேதி: திங்கள் மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட எந்த நாளும்
- நேரம்:
– காலை30 முதல் 8.00 வரை அல்லது
– காலை00 முதல் மதியம் 1.30 வரை அல்லது
– மாலை00 முதல் 6.00 வரை
(குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட டயாலிசிஸ் மையத்தைப் பொறுத்து நேரம் மாறுபடலாம்)
- அர்ப்பணிப்பு: தன்னார்வத் தொண்டர்கள் 1/2-நாள் நேரில் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 2 மாதங்கள் & 8 ஷிப்ட்கள் கடமையைச் செய்ய வேண்டும. தன்னார்வப் பணி வாரத்திற்கு ஒரு முறையாவது செய்யப்பட வேண்டும்
நண்பர் இணைப்பு
இந்த வீட்டு சந்திப்புத் திட்டத்தின் மூலமாக, உங்கள் நட்புக் கரத்தை நீட்டி தனிமை சிறையில் தவிக்கும் அவர்களுக்கு வெளி உலகைக் காட்டுங்கள். எங்களுடைய நோயாளிகளுக்கு சிறந்த பராமரிப்பு கொடுக்க எங்களுடன் கைகோர்த்து, எங்களுடைய கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுங்கள்.
குறிப்பு:
- இந்தத் திட்டம் நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் இருக்கும்
- வீடுகளில் சந்திக்கச் செல்லும்போது இரண்டு பேராகச் செல்ல வேண்டும்
- நோயாளிகள் வசிக்கும் இடம், பேசும் மொழி, வேறு ஏதாவது பிரத்யேக தேவை இருந்தால், அதைப் பொருத்தும் தொண்டூழியர்கள் நோயாளியிடம் வழிநடத்தப்படுவார்கள்.
டையாலிஸிஸ் மையங்களில் நட்புபாராட்டும் நேரங்கள்
எங்களுடைய நோயாளிகளின் நாளை நன்னாள் ஆக்க, காதுகொடுத்துக் கேட்பது, ஊக்கமூட்டுகிற விதத்தில் பேசுவது, ஒரு புன்னகை உதிர்ப்பது போன்றவை போதுமானது. அவர்களுடைய இதயத்தில் நம்பிக்கை மலர உதவுங்கள், சிகிச்சை சுமையைக் குறைக்க இப்போதே கைகொடுங்கள்!
- நாள்: திங்கள் மற்றும் சனிக்கிழமைக்கு இடையே எந்த நாளாகவும் இருக்கலாம்
- நேரம்:
– காலை 8 முதல் 10 வரை அல்லது
– மதியம் 1 முதல் 3 வரை அல்லது
– மாலை 6 முதல் 8 வரை
(குறிப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட டையாலிஸிஸ் மையத்தைப் பொருத்து நேரம் வேறுபடலாம்) - இடம்: சந்திக்க வேண்டிய டையாலிஸிஸ் மையங்களின் பட்டியலுக்காக இங்கே க்ளிக் செய்யுங்கள்
-
தொண்டூழியர்களின் எண்ணிக்கை:அதிக பட்சம் 15
நோயாளிகளை வெளியே அழைத்துச் செல்வது
நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்குச் செல்லவும் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடவும் ஏற்பாடு செய்யுங்கள் மற்றும் அதற்கு ஸ்பான்ஸர் செய்யுங்கள். இப்போது நீங்கள் செய்கிற தாராள உதவி மூலமாக இனிமையான நினைவுகளை உருவாக்கவும் புதுப்புது அனுபவங்களையும் சந்தோஷங்களையும் பெறவும் உதவுங்கள்!
- நாள், நேரம் & இடம்: மாற்றத்தக்கது
நோயாளிக்குத் துணையாகச் செல்வது
நோயாளிக்குத் துணையாகச் சென்று, ஓரளவு தரமான வாழ்க்கை வாழ அவருக்குத் துணை புரியும் மருத்துவ சிகிச்சைகளைக் கண்டடைய உதவுங்கள்.
குறிப்பு:
- இந்தத் திட்டம் நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் இருக்கும்
- நோயாளிகள் தங்கள் வீடுகளிலிருந்து டையாலிஸிஸ் மையத்துக்குச் செல்வதற்கோ அல்லது டையாலிஸிஸ் மையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பி வருவதற்கோ மட்டுமே தொண்டூழியர்கள் துணை செல்லுமாறு எதிர்பார்க்கப்படுகிறார்கள்
- மருத்துவமனைக்குத் துணை செல்லும் விஷயத்தில், நோயாளிகள் மருத்துவமனையில் செலவு செய்கிற முழு சமயமும் தொண்டூழியர்கள் உடனிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
- வாகனம் உள்ள வாலண்டியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும், ஆனால் அது கட்டாயம் இல்லை
வீட்டு உதவி
எங்கள் நோயாளிகளுக்குச் சுத்தமும் சௌகரியமும் உள்ள வீட்டுச் சூழல் கிடைக்க உங்கள் இதயத்தாலும் கைகளாலும் இப்போதே உதவுங்கள்!
- இந்தத் திட்டம் நோயாளிக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் இருக்கும்
- இதற்குரிய நாளும் நேரமும் நோயாளி வீட்டில் இருக்கும் சமயத்தையும் அவருடைய உடல்நிலையையும் பொறுத்தே இருக்கிறது
நிர்வாக உதவி
எங்களுடைய நிர்வாகத் திறனை மேம்படுத்த எங்களுடன் சேர்ந்து நிர்வாக செயல்பாடுகளில் பின்னணியாக உதவுங்கள்.
- நாள்: திங்கள் மற்றும் சனிக்கிழமைக்கு இடையே எந்த நாளாகவும் இருக்கலாம்
- நேரம் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை
- இடம்: என்கேஎப் மையம்
நிகழ்ச்சிகள்
எங்களுடைய நிகழ்ச்சிகள் வெற்றியடைவதற்காக, அரங்க உதவியாளர், வரவேற்பாளர், புகைப்படம் எடுப்பவர் என எந்த ஒரு நபராகவும் நீங்கள் எங்களுக்கு உதவி செய்யலாம்.
விரைவில் வருகிற நிகழ்வுகளை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
மேம்பாடு
எங்களுடைய நோயாளிகளின் வாழ்வை வளமாக்க, நீங்கள் அவர்களுக்கு ஒரு கைத்தொழிலைக் கற்றுக்கொடுக்கலாம் அல்லது நீங்கள் ஆர்வத்தோடு செய்யும் வேலைகளை, விருப்ப வேலைகளை பகிர்ந்துகொள்ளலாம்.
- நாள், நேரம் & இடம்:மாற்றத்தக்கது
கார்பரேட்/பள்ளி தொண்டூழியர்கள்
கார்பரேட் மற்றும் பள்ளி தொண்டூழியர்கள் குழுவாக சேர்ந்து எங்களோடும்கூட வாலண்டியராகப் பணியாற்றுவதை நாங்கள் வரவேற்கிறோம்!
Volunteer@nkfs.org மூலம் இப்போதே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!
என்கேஎப் நண்பர்கள் திட்டம்
என்கேஎப் நண்பர்கள் (Friends of NKF) (FON) திட்டம் 2016 நவம்பரில் தொடங்கப்பட்டது. வருடக்கணக்காக, கருணை மனதோடும் தாராள குணத்தோடும் எங்கள் லட்சியத்தில் எங்களோடு துணை நிற்கிறவர்களுக்கு நன்றிபாராட்டும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டது.
(ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)
நன்கொடை திட்டங்கள்
நீங்கள் செய்கிற சிறு சிறு உதவிகூட எங்களுடைய சிறுநீரக நோயாளிகளுக்குப் பெரிய உதவி.