ஆய்வக கண்டுபிடிப்புகளை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துதல்
முன்கூட்டிய நோய்க்கண்டறிதல் முதல் டயாலிசிஸ் வரை, உங்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும்போது பல்வேறு பராமரிப்பு விருப்பங்களை ஆராய்ந்து அறிந்து, ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்குப் பின்னாலிருக்கும் அறிவியலைப் புரிந்து கொள்ளுங்கள்!
கற்றுக் கொள்ளவும், ஆராய்ந்து அறியவும், விளையாடவும் கீழே உள்ள ஒவ்வொரு காட்சிப்பொருளையும் தட்டுங்கள்!
ஒலி கேட்க எங்கும் தட்டு













இந்த அணுக்கள் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன. இவை சிறுநீரில் தென்பட்டால், அது சிறுநீரக பாதிப்பைக் குறிக்கலாம்.
இந்தப் பெரிய அணுக்களானது கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பொதுவாக சிறுநீரில் ஒரு சில வெள்ளை அணுக்களை மட்டுமே காணலாம் – இவை சிறுநீரில் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அது தொற்று அல்லது சிறுநீரக பிரச்சனைகளைக் குறிக்கலாம்.
வெளிப்புற சிறுநீர்க்குழாய் அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் இருக்கும் இந்தப் பெரிய தட்டையான அணுக்கள் பெரும்பாலும் சிறுநீர் சேகரிப்பின்போது, குறிப்பாக பெண்களிடத்தில், மாசுபாட்டினைக் குறிக்கும்.
இந்தப் படிகங்கள் சிறு உறைகள் அல்லது கூம்பகங்கள் போல இருக்கும். இவை அதிக எண்ணிக்கையில் இருந்தால், அது சிறுநீரக கல் உருவாவதற்கான அதிக வாய்ப்பைக் குறிக்கலாம்.
சிறுநீரில் மெக்னீசியம், அம்மோனியம் மற்றும் பாஸ்பேட் அதிக அளவில் இருப்பதை இவை குறிக்கின்றன. இவை பொதுவாக சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையவை.
இவை வைர வடிவ அமைப்புகளாகத் தோன்றும். இவை தென்பட்டால், நீங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று அர்த்தம்!