Menu

ஆய்வக கண்டுபிடிப்புகளை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துதல்

முன்கூட்டிய நோய்க்கண்டறிதல் முதல் டயாலிசிஸ் வரை, உங்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவைப்படும்போது பல்வேறு பராமரிப்பு விருப்பங்களை ஆராய்ந்து அறிந்து, ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்குப் பின்னாலிருக்கும் அறிவியலைப் புரிந்து கொள்ளுங்கள்!

கற்றுக் கொள்ளவும், ஆராய்ந்து அறியவும், விளையாடவும் கீழே உள்ள ஒவ்வொரு காட்சிப்பொருளையும் தட்டுங்கள்!

ஒலி கேட்க எங்கும் தட்டு
K-Buddy
wpChatIcon
Scroll to Top

நுண்ணோக்கி கண்டுபிடிப்பு

சிறுநீரக திசுக்களின் உண்மையான நுண்ணிய படங்களைக் கவனியுங்கள் – ஆரோக்கியமான அணுக்கள் முதல் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுச் சிறுநீரக நோய் மற்றும் நார்க்கட்டிகள் (ஃபைப்ரோஸிஸ்) போன்ற மருத்துவப் பிரச்சினைகளால் இவை பாதிக்கப்பட்டிருப்பது வரை அறிந்து கொள்ளலாம். இந்த மருத்துவப் பிரச்சினைகள் சிறுநீரகத்தின் நுட்பமான வடிகட்டிகளை சேதப்படுத்தி, அதில் வடுக்களையும் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

நுண்ணோக்கியின் சக்கரத்தைத் திருப்பி, நீங்கள் கண்டுபிடிப்பவற்றைப் பாருங்கள்!

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள்

நாள்பட்ட சிறுநீரக நோயின் (CKD) அறிகுறிகள் ஆரம்ப கட்டங்களில் பெரும்பாலும் வெளியே தெரியாமல் இருக்கும், ஆனால் சில நோயாளிகள் சிறுநீரில் குமிழ்கள் அல்லது இரத்தத்தின் தடயங்கள் இருப்பதைக் கவனிக்கலாம், இது சிறுநீரக பிரச்சனைகளைக் குறிக்கிறது.

இந்நோய் நடுக்கட்டத்தை அடையும்போது, அறிகுறிகள் மிகவும் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும், அறிகுறிகளுள் பசியின்மை, வீக்கம் அல்லது சோர்வு உள்ளிட்டவை அடங்கும்.

இந்நோய் கடைசி கட்டத்தை அடைகையில், அம்மோனியா வாசனையைக் கொண்ட சுவாசம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், மார்பு வலி, தசை இழுப்பு, குழப்பம், வலிப்புத்தாக்கம் அல்லது சுயநினைவு இழப்பு போன்ற பிற அறிகுறிகள் ஏற்படலாம்.

நாள்பட்ட சிறுநீரக நோயின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். உங்கள் சிறுநீரகங்களை பரிசோதித்துப் பாருங்கள் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிடுங்கள்!

உங்கள் சிறுநீர் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் சிறுநீரின் நிறமானது உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய சொல்லும். சுவரில் உள்ள சிறுநீர் மாதிரிகளைப் பார்வையிட்டு, சிறுநீரக பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகளை எவை காட்டுகின்றன என்பதை உங்களால் கண்டறிய முடிகிறதா என்று பாருங்கள்.

உங்கள் சிறுநீரின் நிறத்தில் தொடர்ந்து அசாதாரண மாற்றங்கள் இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகுங்கள்.

சிறுநீரக பரிசோதனையில் இரண்டு எளிய பரிசோதனைகளை மட்டுமே செய்யப்படும்:
1. இரத்தப் பரிசோதனை – இது இரத்தத்தில் உள்ள இயற்கையான கழிவுப்பொருளான கிரியேட்டினினை அளவிட்டு, சிறுநீரகங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைக் காட்டும்.
2. சிறுநீர் பரிசோதனை – இரத்தம் அல்லது அல்புமின் எனப்படும் புரதத்தைக் கண்டறியும், இது சிறுநீரக பாதிப்பைக் குறிக்கலாம்.

தேசிய சிறுநீரக அறக்கட்டளை (NKF) சிறுநீரக பரிசோதனை திட்டத்தைப் பற்றி மேலும் அறிய, வெளியேறும் இடத்தில் உள்ள சிற்றேட்டைப் பெறுங்கள்!

வாழ்க்கை முறை கேள்வி 3

நான் ஒவ்வொரு நாளும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுகிறேன்.

மேலே உள்ள கேள்வியின் அடிப்படையில் ஆம் அல்லது இல்லை என்ற பட்டனைத் தட்டி, உங்கள் வருகையின் முடிவில் உங்கள் சிறுநீரகத்தின் தன்மையை அறிந்திடுங்கள்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இடத்தில் நின்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரகங்கள் செயலிழந்து வேலை செய்வதை நிறுத்தும்போது, ​​சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறந்த தீர்வாக இருக்கும். ஆரோக்கியமான சிறுநீரகம் சிறுநீரகம் செயலிழந்த நோயாளியின் உடலில் பொருத்தப்படும். வாழ்நாள் முழுவதுக்குமான நவீன நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சை மூலம், நன்கு பொருந்தக்கூடிய சிறுநீரகம் ஆயுட்காலத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பெரிதும் மேம்படுத்தும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன.

பெரிட்டோனியல் டயாலிசிஸ்

பெரிட்டோனியல் டயாலிசிஸ் (PD) என்பது நீர் டயாலிசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது வீட்டிலேயே தினமும் செய்யப்படும் ஒரு சிகிச்சையாகும். இச்சிகிச்சையில் வயிற்றில் உள்ள மெல்லிய புறணியான பெரிட்டோனியத்தை இயற்கை வடிகட்டியாகப் பயன்படுத்தி, உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகப்படியான திரவம் அகற்றப்படுகிறது.

பெரிட்டோனியல் டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், நோயாளிகளின் வயிற்றுக்குள் வடிகுழாய் (கேத்தட்டர்) எனப்படும் மென்மையான குழாய் மருத்துவ நடைமுறை மூலம் செருகப்படும். சிகிச்சையின்போது, ​​டயாலிசேட் என்றும் அழைக்கப்படும் டயாலிசிஸ் திரவம், வடிகுழாய் வழியாக உடலுக்குள் செலுத்தப்படும். கழிவுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவம் பின்னர் பெரிட்டோனியத்தில் உள்ள இரத்த நாளங்களிலிருந்து டயாலிசேட்டுக்குள் செல்லும், பின்னர் அந்த டயாலிசிஸ் திரவம் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

மீதமுள்ள சிறுநீரகச் செயல்பாட்டை சிறப்பாகப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பெரிட்டோனியல் டயாலிசிஸ் சிகிச்சைக்கு ஊசிகள் தேவையில்லை. நோயாளிகள் குறைவான திரவத்தையும் உணவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டிருப்பார்கள், அத்துடன் அன்றாட நடவடிக்கைகளை அதிக சுயாதீனத்துடனும் இலகுவாகவும் செய்வார்கள்.

தேசிய சிறுநீரக அறநிறுவனத்தில், எங்கள் அர்ப்பணிப்பு மிக்க பெரிட்டோனியல் டயாலிசிஸ் குழு, நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தாங்களாகவே சிகிச்சையைச் செய்ய வழிவகை செய்வதன் மூலம் ஆதரிக்கின்றனர்.

பெரிட்டோனியல் டயாலிசிஸ் (அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோ)

திரு. இஸ்மாயில் மற்றும் அம்மையார் ஹுவாங் அவர்கள் பல்வேறு வகையான பெரிட்டோனியல் டயாலிசிஸ் (PD) மூலம் தங்கள் அன்றாட வழக்கங்களை எவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

திரு. இஸ்மாயில் அவர்கள் தொடர்ச்சியான ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் (CAPD) சிகிச்சையில் உள்ளார். மகிழ்ச்சியுடன் தாய் சி போன்ற செயல்பாடுகளை செய்தும், நண்பர்களுடன் நேரம் செலவிட்டும் வரும் அவர் தினமும் நான்கு முறை திரவ பரிமாற்றங்களைச் செய்கிறார். ஒவ்வொரு திரவ பரிமாற்றத்திற்கும் தோராயமாக 30 நிமிடங்கள் ஆகும், மேலும் இதனை இயந்திரத்தின் உதவியின்றி ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி கைமுறையாக செய்து வருகிறார்.

அம்மையார் ஹுவாங், இரவில் அவர் தூங்கும் நேரத்தில் தானியங்கி பெரிட்டோனியல் டயாலிசிஸ் (APD) செய்கிறார். இது வேலை மற்றும் குடும்பத்திற்கான பகலில் நேரத்தை மிச்சப்படுத்தி தருகிறது, இதனால் அவரால் மிக முக்கியமான விஷயங்களுக்கு இருக்க முடிகிறது. இந்தச் செயல்முறை பெரிட்டோனியல் டயாலிசிஸ் சைக்ளர் இயந்திரத்தைப் பயன்படுத்தி தானியங்கி முறையில் செய்யப்படுகிறது மற்றும் இச்சிகிச்சை பொதுவாக 8 முதல் 10 மணி நேரம் வரை நீடிக்கும்.

வாழ்க்கை முறை கேள்வி 4

நான் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தூங்குகிறேன்.

மேலே உள்ள கேள்வியின் அடிப்படையில் ஆம் அல்லது இல்லை என்ற பட்டனைத் தட்டி, உங்கள் வருகையின் முடிவில் உங்கள் சிறுநீரகத்தின் தன்மையை அறிந்திடுங்கள்.

ஹீமோடயாலிசிஸ்

ஹீமோடயாலிசிஸில் ஒரு நோயாளியின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைக் கேட்டு அறிந்திடுங்கள்.

இரத்த டயாலிசிஸ் என்றும் அழைக்கப்படும் ஹீமோடயாலிசிஸ் என்பது ஒரு டயாலிசிஸ் நிலையத்தில் செய்யப்படும், இது பொதுவாக வாரத்திற்கு 3 முறை செய்யப்படும், ஒவ்வொரு முறை செய்யும்போது சுமார் 4 மணி நேரம் தேவைப்படும்.

டயாலிசிஸைத் தொடங்குவதற்கு முன், இரத்தக்குழாய் அணுகல் அறுவை சிகிச்சை மூலம் உருவாக்கப்படும், அது புழையாகவோ (ஃபிஸ்துலா) ஒட்டுப் பொருளாகவோ இருக்கலாம்.

சிகிச்சையின்போது, ​​1.5 மிமீ முதல் 2.0 மிமீ வரையிலான 2 ஊசிகள் புழை (ஃபிஸ்துலா) அல்லது ஒட்டுப் பொருளுக்குள் செருகப்படும். 1 ஊசி உடலில் இருந்து இரத்தத்தை வெளியே இழுத்து டயாலிசருக்கு (செயற்கை சிறுநீரகம்) பம்ப் செய்யும், அதன் பிறகு சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் இன்னொரு ஊசி வழியாக உடலுக்குள் செலுத்தப்படும்.

தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் பராமரிப்புத் தத்துவமானது முழுமையான மற்றும் நபருக்கேற்றபடியான அணுகுமுறையை முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு நோயாளியும் அவரவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப நபர் சார்ந்த பராமரிப்பைப் பெறுவதை உறுதிசெய்யும் விதமாக, எங்களின் பல்துறை ஒருங்கிணைந்த பராமரிப்புக் குழு பங்காளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

டயாலிசிஸ் சிகிச்சையின் பல ஆண்டுகால மைல்கற்கள்

திரையில் தோன்றும் காலவரிசையை நகர்த்திப் பார்வையிடுங்கள்.
உயிரைக் காக்கும் சிறுநீரக சிகிச்சையை உருவாக்கிய முக்கிய கட்டங்களை ஆராயுங்கள். ஆரம்ப கால முயற்சிகளிலிருந்து இன்றைய அதிநவீன அதிசயங்கள்வரை, புதுமைகள் சிகிச்சைகளை எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை அறியுங்கள்.

இரத்தக்குழாய் அணுகல்

புழை (ஃபிஸ்துலா) எவ்வாறு உருவாக்கப்படுகிறது மற்றும் அதன் மூலம் ஹீமோடயாலிசிஸ் எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பார்க்க உங்கள் கையை மேசை மீது வைத்திடுங்கள்.

ஹீமோடயாலிசிஸ் தொடங்குவதற்கு முன், நோயாளிகளுக்கு நம்பகமான இரத்தக்குழாய் அணுகல் மூலமான இரத்த ஓட்டம் தேவை, இது இடையூறு இல்லாத திறன்மிக்க டயாலிசிஸ் சிகிச்சையை உறுதி செய்கிறது.

தமனி மற்றும் நரம்பு இடையே இணைப்பை உருவாக்க ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படும். இது தமனிச்சிரை (AV) புழை (ஆர்டெரியோவீனஸ் ஃபிஸ்துலா) என்று அழைக்கப்படுகிறது.

வாழ்க்கை முறை கேள்வி 5

எனது அன்றாட வழக்கத்தில் உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சியைச் சேர்த்துக் கொள்கிறேன்.

மேலே உள்ள கேள்வியின் அடிப்படையில் ஆம் அல்லது இல்லை என்ற பட்டனைத் தட்டி, உங்கள் வருகையின் முடிவில் உங்கள் சிறுநீரகத்தின் தன்மையை அறிந்திடுங்கள்.

EN
  • 中文
  • MLY
  • தமிழ்

Welcome To

KDC Logo

This self-guided tool helps you explore
the Kidney Discovery Centre at your own pace.

Select your preferred language.

选择偏好语言。

Pilih bahasa pilihan anda.

உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

Tap anywhere to enable sound