Menu

எங்களைப் பற்றி

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

எங்களைப் பற்றி

NKF சிறுநீரக ஆரோக்கியத்தையும் முழுமையான பராமரிப்பையும் பரிந்துரை செய்யவும் ஒருங்கிணைக்கவும் சமூகத்திற்காகவும், சமூகத்தோடும் இணைந்து முயற்சி செய்கிறது. சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு தரமான டையாலிஸிஸ் சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அளிக்கும் அதே வேளையில் சிறுநீரக சுகாதாரக் கல்வி அளிப்பது, சமூகத்தில் ஆழமாக இணைந்து செயல்படுவது மற்றும் ஒன்றிணைந்து திட்டமிட்டுச் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் சிறுநீரக செயலிழப்பைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவதே எங்கள் முக்கிய லட்சியம்.

பார்வை & பணி

மலிவான, நிலையான மற்றும் தரமான சிறுநீரக பராமரிப்பும் கல்வியும் அளிப்பது மற்றும் சமூகத்துடன் இணைந்து சிறுநீரக நோயைத் தடுப்பதன் மூலம் வாழ்வும் நம்பிக்கையும் அளிப்பது.

தற்போதைய சிறுநீரக நோய் பரப்பு

சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிர்ச்சியூட்டும் அளவில் அதிகரிப்பதால், “சிறுநீரக பேரலை” வருவதை நாங்கள் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் சுமார் ஆறு பேருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்படுகிறது. இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்று மடங்கு அதிகரிப்பாகும். 500,000-க்கும் அதிகமானோர் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படுகிறார்கள், பலரிலும் நோய் கண்டறியப்படாமல் இருப்பதால், இது இன்னும் அதிகமாக இருக்கவே வாய்ப்புள்ளது. NKF-ல் 5,500-க்கும் அதிகமான டையாலிஸிஸ் நோயாளிகள் உள்ளனர் – இது, சிங்கப்பூரில் உள்ள மொத்த டையாலிஸிஸ் நோயாளிகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு. சிறுநீரக செயலிழப்புக்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்று நீரிழிவு நோய், உலகளவில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. நீரிழிவு நோயும் மற்ற நாள்பட்ட நோய்களும் கட்டுப்பாட்டில் வைக்கப்படாவிட்டால், சில பத்தாண்டுகளில் நாள்தோறும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிற நோயாளிகளின் எண்ணிக்கை 20 அல்லது 30-ஆக உயரலாம்.

நம் உத்தி

NKF-ன் நீண்ட கால திட்டங்களை வடிவமைக்க, எதிர்காலத்தை நோக்கி 2030, என்ற எங்கள் திட்டம் இரண்டு எஞ்சின் உத்தியை உள்ளடக்கியது – எந்தவொரு விமானத்திலும் இருப்பது போலவே, இரண்டு என்ஜின்கள் இருக்கும்போது சிறப்பாகச் செயலாற்ற முடியும்.

எஞ்சின் 1 குறுகிய கால திட்டத்தில் கவனம் செலுத்துகிறது – நாம் தொடர்ந்து என்ன செய்ய விரும்புகிறோமோ அதை சிறப்பாகவும் மிகத் திறமையாகவும் செய்ய வேண்டும்.

நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் சுயமாக கவனித்துக்கொள்வதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்திற்கு பொறுப்பேற்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். டையாலிஸிஸ் மையங்களில் மட்டுமின்றி, வீட்டிலும் டையாலிஸிஸ் சிகிச்சை பெறுவதற்கு நமது நோயாளிகளுக்கு வாய்ப்பு இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். நாம் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், நம் மருத்துவ பணியாளர்களும் நன்கு பயிற்சி பெற்றவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தாரும் மனநலமோடு இருப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் செய்துகொண்டிருப்பதைத் தொடருவதற்கு ஏற்ற செலவுக் கட்டமைப்பு எங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், அதே நேரத்தில், எங்கள் பங்குதாரர்களுக்கும் உங்கள் நன்கொடைகளுக்கும் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால், நாம் என்ஜின் 1-ல் மட்டுமே சார்ந்திருக்க முடியாது. நாம் என்ஜின் 2-ல் கவனம் செலுத்த வேண்டும், சிறுநீரக நோயின் பதறவைக்கும் போக்கைத் தடுக்க NKF-க்கான நடுத்தர முதல் நீண்ட கால உத்தி அதுவே.

உயர்தரக் கல்வி மற்றும் தடுப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவ, சமூகம், பள்ளிகள் மற்றும் சுகாதாரச் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள எங்கள் பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். நோய் வருமுன் காப்பதற்காக, எங்கள் சமூக விழிப்புணர்வு உத்தியானது இளைஞர்கள், குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் நோய் வர அதிக வாய்ப்புள்ள குழுக்களை மையமாக வைத்துச் செயல்படுவதாகும். எங்கள் நோயாளிகளுக்கு நன்கு சேவை செய்ய சிறுநீரக நோய்க்கான சிகிச்சைகளில் புதிய முறைகளைக் கண்டுபிடிக்கவும் நாம் கவனம் செலுத்த வேண்டும், அதை செலவு குறைந்த விதத்தில் செய்ய வேண்டும். 2030-ஆம் ஆண்டுக்கு நம்மைத் தயார்படுத்துவதற்காக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு நோயாளிகளின் தரவு, தகவல் மற்றும் பின்னணி எங்களிடம் இருப்பதால் இதை எங்களால் செய்ய முடியும்.

இயக்குநர்கள் குழுமம்

என்கேஎப் குழுமம் என்கேஎப்-யின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது, எங்களது பணி சிறப்பாகவும் திறமையாகவும் முன்னோக்கிச் செல்கிறது என்பதை உறுதி செய்கிறது, அதோடு பொருத்தமான எல்லா சட்டங்களுக்கும் விதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுகிறது. ஒரு குழுவாக தங்களது குழும அங்கத்தினர்கள், கணக்கு மற்றும் நிதி, வியாபாரம் மற்றும் பொது நிர்வாகம், தகவல் தொடர்பு, உடல்நல பராமரிப்பு, மனித வளம், சட்டம், மருத்துவம், திட்டமிட்ட செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பகுதிகளில் தங்கள் திறன்களை ஒன்றிணைத்து செயல்படுவதை இந்தக் குழுமம் உறுதிசெய்கிறது. அதோடு, வேறுபட்டு செயல்படவும் ஓரளவு வாய்ப்பளிக்கிறது. குழுமம் திறமையாகச் செயல்பட, அது மிகப் பெரியதாக இருக்கக் கூடாது என்றும் அதே சமயத்தில் வேறுபட்ட திறமைகளும் கண்ணோட்டங்களும் போதுமான அளவு இருக்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக சேவை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்றும் இரு பாலாரும் சம அளவு இருக்க வேண்டும் என்றும் அது கருதுகிறது. குழும அங்கத்தினர்கள் ஊதியம் பெறுபவர்களாக அல்ல வாலண்டியர்களாக செயல்படுகிறார்கள்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top