Menu

சிறுநீரக செயலிழப்பு

உங்களுக்கு சிறுநீரக நோய்கள் வர வாய்ப்புள்ளதா?

சிறுநீரக நோய் வருவதற்கான அபாயம் உங்களுக்கு உள்ளதா என்பதைக் கண்டறிவதன் மூலம் சிறுநீரக ஆரோக்கியத்துக்கான முதல் படியை எடுங்கள்!

Qn 1 of 6

உங்கள் உடல் பருமனாக உள்ளதா?

உடல் பருமன் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த இரண்டும் சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்திவிடும். ஹெல்த் ப்ரமோஷன் போர்டின்-படி (HPB), உங்களுக்கு உடல் நிறை குறியீடு (BMI) 23கிகி/மீ2 மற்றும் அதற்கு அதிகமாக இருந்தால் உங்களுக்கு மிதமான உடல் பருமன் உள்ளது. சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Qn 2 of 6

நீங்கள் நீரிழிவு நோயாளியா?

சிங்கப்பூரில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேருக்கு தங்கள் நிலையைப் பற்றித் தெரிவதில்லை. இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், சிறுநீரகத்திலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைந்து அதன் வடிகட்டிகள் நாசமடையலாம். உலகிலேயே நீரிழிவு நோய் காரணமாக, சிறுநீரக செயலிழப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடு சிங்கப்பூர். உடல்நல ஸ்கிரீனிங்கிற்கு உட்பட்டு நோய் அறிகுறியை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிக முக்கியம். ஏனென்றால், உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்து நீரிழிவு நோயாளியாவதைத் தவிர்க்க முடியும்.

நீரிழிவு நோயாளியாக இருப்பதால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என அர்த்தம் கிடையாது. உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது, இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைப்பது, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது ஆகியவற்றைச் செய்துவந்தால் உங்களுடைய சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

Qn 3 of 6

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதா?

சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான இரண்டாவது முக்கியக் காரணம் உயர் இரத்த அழுத்தமாக உள்ளது. சொல்லப்போனால், சிங்கப்பூரில் வசிக்கும் வயது முதிர்ந்தவர்களில் நான்கில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. துரதிஷ்டமாக, நீங்கள் வயதாகும்போது, உங்களுடைய இரத்த அழுத்தம் தானாகவே உயருகிறது. கடந்தபோன காலம் கடந்துபோனதுதான். என்றாலும், இனிமேல் உங்கள் இரத்த அழுத்தத்தைத் தவறாமல் பரிசோதிப்பது, உங்கள் நிலையை சரியாகக் கையாளுவது போன்றவற்றால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

நீரிழிவைப் போலவே, உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால் விரைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். உண்மையில், பெரும்பாலோருக்கு சிறுநீரகங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் வரை, ஒருசில அறிகுறிகளே தென்படுகின்றன அல்லது அறிகுறிகளே தெரியாமல் போகின்றன.

Qn 4 of 6

நீங்கள் புகை பிடிப்பவரா?

புகை பிடிப்பதால் புற்று நோய் மற்றும் இருதய நோய் மட்டுமல்ல, நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் சிறுநீரக நோய்கள் வருவதற்கான மற்ற ஆபத்துகளும் உள்ளது. புகைப்பிடித்தல் சிறுநீரகங்களிலுள்ள சிறுநீர்க்கலங்களின் இரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது. இந்தச் சிறுநீர்க்கலங்கள்தான் உங்கள் உடலிலுள்ள இரத்தத்திலிருந்து கழிவுகளை வடிகட்டும் முக்கிய பணியை செய்கின்றன. சிறுநீர்க்கலங்கள் சேதமடைந்தால் அவற்றைச் சரி செய்ய முடியாது. இதனால், காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.

Qn 5 of 6

ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்பவரா?

வலி நிவாரணிகளைப் போல, ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளான (Non-Steroidal Anti-Inflammatory Drugs) (NSAIDS) இப்யூபுரூபன், நப்ரோக்ஸன், ஆஸ்பிரின் போன்றவை மருத்துவ சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளில் கிடைக்கலாம். அவற்றை அதிகமாக உட்கொண்டால் உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் மருத்துவ சீட்டு இல்லாமலேயே கிடைப்பதால், அவற்றை அதிக அளவில் தவறாமல் எடுத்துக்கொள்ளலாம் என சிலர் தவறாக நினைக்கிறார்கள். இந்த மருந்துகள் முற்றிலும் பாதுகாப்பானவை அல்ல என்பதால் இவற்றை கவனமாக உட்கொள்ள வேண்டும். விசேஷமாக, சிறுநீரக செயல்பாட்டுத் திறன் பாதிப்பு உள்ளவர்கள் இதைக் கவனமாக கையாள வேண்டும்.

சிறுநீரக செயல்பாட்டுத் திறன் குறைந்தவர்கள், இருதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை உட்கொள்ளும் முன்பு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால், இவற்றால் சிறுநீரக நோய்கள் அதிகமாகும் அபாயம் உள்ளது. ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை நீங்கள் தொடர்ச்சியாக அல்லது அதிகமாக உட்கொண்டு வந்திருந்தாலோ, மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலோ இரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். இதனால், அவை உங்கள் சிறுநீரகங்களைப் பாதித்திருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

Qn 6 of 6

சிறுநீரக நோய் உங்களுடைய குடும்ப வரலாற்றில் இருக்கிறதா?

சிறுநீரக நோய் வழிவழியாக பாதிக்கலாம். உங்களுடைய குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் இருந்திருந்தால், ஒழுங்காக உடல்நல ஸ்கிரீனிங் செய்வதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை எடுங்கள். உங்களுடைய சிறுநீரிலிருந்து புரதம் வெளியேறுகிறதா என்பதை ஓர் எளிய சிறுநீர் பரிசோதனை காட்டிவிடும். சிறுநீரகங்கள் சேதமடைவதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்று. ஒரு நோயாளியின் கிரியேட்டினின் அளவைச் சரிபார்க்க ஒரு இரத்தப் பரிசோதனை செய்யப்படலாம், அதில் இருந்து உங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உங்கள் சிறுநீரகங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைக் குறிக்க மதிப்பிடப்பட்ட குளோமருலர் வடிகட்டுதல் வீதத்தை (eGFR) கணக்கிடலாம்.

நீங்கள் 6-க்கு 0 பாயின்ட் எடுத்திருக்கிறீர்கள்!

நாள்பட்ட சிறுநீரக நோய் வருவதற்கான எந்தவொரு பொதுவான காரணமும் உங்களுக்கு இல்லை. இந்த 5 எளிய குறிப்புகளைப் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடருங்கள்!

  • உங்கள் உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்
  • உங்கள் சர்க்கரை அளவைக் குறைக்கவும்
  • தயவுசெய்து தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
  • தவறாமல் தண்ணீர் குடியுங்கள்
  • உங்கள் ஆரோக்கிய அளவுகளைக் குறித்து வையுங்கள்

நீங்கள் 6-க்கு 1 பாயின்ட் எடுத்திருக்கிறீர்கள்!

இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த அளவு உட்பட்ட ஒரு உடல்நல ஸ்கிரீனிங் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது. சிறுநீரக செயலிழப்பு பெரும்பாலும் மௌனக் கொலையாளி என அழைக்கப்படுவதால், சிறுநீரக நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளையும் அடையாளங்களையும் கண்டறிய முயல வேண்டும், அதை நாம் கவனிக்காமல் விட்டுவிட வாய்ப்புள்ளது.

நீங்களாக இருந்தால்:

21 வயது முதல் 80 வரை இருந்தால்

√பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால்,

  •  சிறுநீரக நோய், நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் குடும்ப வரலாறு இருந்தால்,
  • நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் இருப்பதாக அறியப்பட்டால்*,
    *மாரடைப்பு, இதய செயலிழப்பு, வால்வு நோய், பக்கவாதம் மற்றும் இரத்தக்குழாய்/வாஸ்குலர் நோய் இருந்தால்,
  • BMI ≥ 27.5kg/m2 

கடந்த 1 வருடமாக எந்த சிறுநீரக பரிசோதனையும் செய்யவில்லை என்றால், 

இலவச சிறுநீரகப் பரிசோதனையைப் பெற நீங்கள் NKFன் CKD கிளினிக்கிற்கு வருகைப் புரியலாம். 

உங்கள் இடுப்பு அளவைக் கண்காணியுங்கள்

எடையைக் கட்டுக்குள் வைக்கும் உத்தி நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையில் உள்ளது. நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளைவிட அதிகமாக உங்கள் உடல் எரிக்கும்போது எடை குறைகிறது. கொழுப்பு இல்லாதவை என்ற பெயரில் விற்கப்படுகிற பொருட்களை நம்பி வாங்காதீர்கள் – அவற்றில் சர்க்கரை அல்லது உப்பு அளவு அதிகமாக இருக்கலாம்.

உங்கள் உணவிலுள்ள பலவகை கொழுப்புகளைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

கூடுதல் அறிய இங்கே க்ளிக் செய்க.

நீரிழிவு நோய் உங்களைப் பதுங்கித் தாக்க அனுமதிக்காதீர்கள்

நீரிழிவு நோயாளியாக இருப்பதால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என அர்த்தம் கிடையாது. உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது, இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைப்பது, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது ஆகியவற்றைச் செய்துவந்தால் உங்களுடைய சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

சர்க்கரையை எப்படி நீங்கள் சரிகட்டலாம் என்பதற்கு டிப்ஸ் இதோ!

உங்கள் சிறுநீரகங்களின் வேலைப்பளுவைக் குறையுங்கள்

கடந்தபோன காலம் கடந்துபோனதுதான். என்றாலும், இனிமேல் உங்கள் இரத்த அழுத்தத்தைத் தவறாமல் பரிசோதிப்பது, உங்கள் நிலையை சரியாகக் கையாளுவது போன்றவற்றால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தவறாமல் உடற்பயிற்சி செய்து எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதனால், அவரது உடலிலுள்ள இரத்த அழுத்தம் குறையும்.

அதிக உப்பை உதறித் தள்ளுவது எப்படி என்றும் சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க உடற்பயிறசி ஏன் அவசியம் என்பதைக் கண்டறியுங்கள்.

புகைப் பழக்கத்தை நிறுத்தினால் கை மேல் பலன்

அதற்காக உங்களுடைய சிறுநீரகங்கள் உங்களுக்கு நன்றி சொல்லும். சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் சீரடையும். இதனால், உங்கள் உடலிலுள்ள இரத்தத்திலிருந்து கழிவுகளை வடிகட்டும் முக்கிய பணியை செய்கிற சிறுநீர்க்கலங்கள் நல்ல நிலையில் இருக்கும்.

புகைப் பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிகளைப் பற்றி ஒரு மருத்துவரிடம் பேசுங்கள். அதோடு/அல்லது தேவைப்பட்டால், நிக்கோட்டின் மாற்றீடு சிகிச்சையை (Nicotine Replacement Therapy) (NRT) எடுங்கள்.

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

சிறுநீரக செயல்பாட்டுத் திறன் குறைந்தவர்கள், இருதய நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை உட்கொள்ளும் முன்பு மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால், இவற்றால் சிறுநீரக நோய்கள் அதிகமாகும் அபாயம் உள்ளது. ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளை நீங்கள் தொடர்ச்சியாக அல்லது அதிகமாக உட்கொண்டு வந்திருந்தாலோ, மேலே குறிப்பிடப்பட்ட பிரச்சினைகள் உங்களுக்கு இருந்தாலோ இரத்தம் அல்லது சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். இதனால், அவை உங்கள் சிறுநீரகங்களைப் பாதித்திருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

உங்களுடைய குடும்பத்தாரின் உடல்நல வரலாற்றைப் பற்றி தெரிந்துவைத்திருங்கள்

உங்களுடைய குடும்பத்தாரில் ஒருவருக்கு சிறுநீரக நோய் இருப்பதால், உங்களுக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நோய் கண்டிப்பாக வரும் என்று அர்த்தம் கிடையாது. நம் மரபணுக்களை நம்மால் மாற்ற முடியாது என்றாலும், நம் உடல்நலத்தைப் பற்றியும் சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்துகளைக் குறைக்கிற நல்ல தெரிவுகள் செய்வதைப் பற்றியும் நாம் கற்றுக்கொள்ள முடியும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் அதை ஒருபோதும் சரி செய்ய முடியாது.
இன்றே உடல்நல ஸ்கிரீனிங் செய்யுங்கள். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய நீங்கள் வைக்கும் அடுத்த அடி அதுவாக இருக்கட்டும்!

குறிப்பு: மேலே நீங்கள் எடுத்த பாயின்டுகள் உங்கள் உடல் தகுதியையும் மருத்துவ நிலையையும் காட்டும் இறுதி முடிவு அல்ல. உடல்நல ஸ்கிரீனிங் மற்றும் சரியான பரிசோதனைக்காக தயவுசெய்து உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.

எனக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் சிறுநீரகங்களுக்குச் செவிகொடுங்கள், அது எச்சரிக்கை மணி அடிக்கத் தொடங்கிவிட்டதா என பாருங்கள். சிறுநீரக செயலிழப்புக்கான அடையாளங்களும் அறிகுறிகளும் இருப்பது தெரிந்தால், தயவுசெய்து உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள். கூடுதல் பரிசோதனைக்காக சிறுநீரக ஸ்கிரீனிங் பரிசோதனை நடத்த அவர் பரிந்துரைக்கலாம்.

நீங்களாக இருந்தால்:

21 வயது முதல் 80 வரை இருந்தால்

√பின்வரும் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால்,

  •  சிறுநீரக நோய், நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் குடும்ப வரலாறு இருந்தால்,
  • நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய் இருப்பதாக அறியப்பட்டால்*,
    *மாரடைப்பு, இதய செயலிழப்பு, வால்வு நோய், பக்கவாதம் மற்றும் இரத்தக்குழாய்/வாஸ்குலர் நோய் இருந்தால்,
  • BMI ≥ 27.5kg/m2 

கடந்த 1 வருடமாக எந்த சிறுநீரக பரிசோதனையும் செய்யவில்லை என்றால், 

இலவச சிறுநீரகப் பரிசோதனையைப் பெற நீங்கள் NKFன் CKD கிளினிக்கிற்கு வருகைப் புரியலாம். 

உங்களுடைய சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறனை காட்டுகிற சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதக் கணக்கீட்டையும் (Glomerular Filtration Rate) (eGFR) அவர் பரிசோதிக்கலாம்.

நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) (CKD) கூடக் கூட குளோமரூலர் வடிகட்டல் வீதக் கணக்கீடு (eGFR) குறைந்துவரும். கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) அல்லது சிறுநீரக செயலிழப்பு என்று அழைக்கப்படும் CKD 5-ஆம் கட்டத்தில், நோயாளியைக் காப்பாற்ற நீண்ட கால டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டியதாகிறது.

எனக்குச் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டால்?

சிறுநீரக செயலிழப்பு கண்டறியப்பட்ட நோயாளிகளுக்கு டையாலிஸிஸ் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது அவசியம். என்றாலும், டையாலிஸிஸால் நம் சிறுநீரகங்களை மாற்றீடு செய்ய முடியாது. நமது உடல் அமைப்பை இயல்பாக வைக்க சிறுநீரகங்கள் வாரத்துக்கு ஏழு நாட்களும் 24 மணிநேரமும் ஒரு நொடிகூட நிற்காமல் வேலை செய்கின்றன. ஆனால், டையாலிஸிஸை இடைவெளிவிட்டுத் தான் செய்ய முடியும்.

டையாலிஸிஸ் நோயாளியின் வாழ்க்கைத் தரம் ஓரளவுக்கு அவருடைய நோயின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, சிறுநீரக மாற்று சிகிச்சையே சிறந்தது. ஏனென்றால், மாற்றிவைக்கப்பட்ட சிறுநீரகம் உங்களுடைய செயலிழந்த சிறுநீரகங்கள் செய்த வேலையை பெரும்பாலும் முழுமையாக செய்கிறது.

மௌனக் கொலையாளியை வெல்ல 8 உத்திகள்

சிறுநீரகத்தைப் பேணிப் பாதுகாப்பதே சிறுநீரக செயலிழப்பைத் தடுக்க மிகச் சிறந்த ஒரு வழி.

சமூக சேவை திட்டங்கள்

சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பற்றியும், அதன் காரணங்களையும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் காப்பதற்கான படிகளைப் பற்றியும் என்கேஎப் தங்களது சமூக சேவை திட்டங்கள் வாயிலாக கல்விபுகட்டுகிறது.
எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்
error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top