Menu

சிகிச்சை

CKD நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு

சரியான உணவை உட்கொள்வது எப்படி என அறிவது முக்கியம்

சிறுநீரக செயல்பாடு குறையத் தொடங்கும்போது, நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) உள்ள நோயாளிகள் தங்களது உணவுமுறையை மாற்ற வேண்டியிருக்கும். அப்போதுதான் அதிகளவு கழிவுப்பொருட்களும் திரவமும் உடலில் தங்கிவிடுவதைத் தவிர்க்க முடியும். தற்போது உள்ள சிறுநீரகத்தின் செயல்பாட்டு திறனைக் காப்பதும், நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD), குறிப்பாக கட்டம் 5-க்கு முற்றிவிடுவதைத் தடுப்பதுமே நமது குறிக்கோள். ஏனென்றால், அந்தக் கட்டத்தை எட்டிவிட்டால் டையாலிஸிஸ் அல்லது மாற்று சிறுநீரகம் அவசியமாகிறது. சிறுநீரக நோய் முற்றுவதைப் பொருத்து நோயாளிகளின் உணவுத் தேவைகள் மாறுபடலாம்.

நினைவில் வைக்கவும்:
புரதம்
  • டையாலிஸிஸ் நோயாளிகளைவிட டையாலிஸிஸ் நிலையை எட்டிய நோயாளிகளுக்கு புரதம் குறைவாகவே தேவைப்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட சிறுநீரகங்களால் CKD-யின் ஆரம்ப கட்டங்களில் செயல்பட முடியும் என்றாலும் உடலிலுள்ள எல்லா கழிவுப் பொருட்களையும் வெளியேற்ற அவை சிரமப்பட வேண்டியிருக்கும்.
  • அதிக அளவு புரதம் உட்கொள்வது சிறுநீரகங்களின் வேலை பளுவை அதிகரித்து சிறுநீரகங்களுக்கு இன்னும் அதிக பாதிப்பை உண்டாக்கலாம்.
  • அளவுக்கு மீறாமல் தேவையான அளவு புரதம் உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டைக் காக்கவும் சிறுநீரகங்களுக்கு கூடுதல் சுமை கொடுப்பதைத் தவிர்க்கவும் உதவும். ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு புரதம் உட்கொள்ள வேண்டும் என உங்கள் டயட்டீஷியன் அல்லது மருத்துவர் தெரிவிப்பார்.
பாஸ்பரஸ்
  • கழிவுப் பொருட்களை வடிகட்டுவதில் சிறுநீரகங்களின் திறன் குறையும்போது இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரிக்கிறது.
  • இரத்தத்தில் பாஸ்பேட்டின் அளவு கூடினால் தோல் அரிப்பு, மூட்டு வலி, கண் எரிச்சல், எலும்புகள் பலவீனமடைந்து உடைந்துவிடுவது போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.
  • டையாலிஸிஸ் நிலையை எட்டிய நோயாளிகளுக்கு தங்களுடைய சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதம் (Glomerular Filtration Rate) (eGFR) குறைந்தும், இரத்தப் பரிசோதனையில் பாஸ்பேட் அதிகமாக இருப்பதும் தெரிய வந்தால் உணவில் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
  • பாஸ்பேட் அதிகமுள்ள இத்தகைய உணவுகளைத் தவிருங்கள்:
    • சார்டின் மீன் , நெத்திலி மீன் (ஐகான் பிலிஸ்) மற்றும் இறால் கருவாடு பேஸ்ட்
    • பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவு (எ.கா. டின்களில் அடைக்கப்பட்ட இறைச்சி அல்லது மீன், ஸாசேஜ்)
    • பால் பொருட்கள் (எ.கா. பால், பாலாடைக்கட்டி, யோகர்ட்).
    • விதை வகைகள் (எ.கா. எல்லா வகை கொட்டை பருப்புகள், விதை சூப்)
    • மால்ட் பானங்கள் (எ.கா. மிலோ, ஹார்லிக்ஸ், ஓவல்டின்)
    • சாக்லேட் மற்றும் தொடர்புடைய பொருட்கள்
    • இறைச்சி உறுப்புகள் (எ.கா. கல்லீரல், குடல் )
    • எலும்பு சார்ந்த சூப்கள் (எ.கா. கோழிக் கால் மற்றும் பன்றியிறைச்சி எலும்பு)
    • கோலா
பொட்டாஸியம்
  • பொட்டாஸியம் என்பது ஒருவகை தாதுப்பொருள், நரம்புகளும் தசைகளும் செயல்படுவதற்கு இது முக்கியம்.
  • இரத்தத்தில் பொட்டாஸியம் அளவு அதிகமானால், தசை பலவீனம், அசாதாரணமான இதய துடிப்பு மற்றும் கடைசியில் இருதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
  • CKD-யின் வெவ்வேறு கட்டத்துக்கு ஏற்ப பொட்டாஸியம் தேவை வேறுபடும். டையாலிஸிஸ் நிலையை எட்டிய நோயாளிகளின் இரத்தப் பரிசோதனையில் சீரம் பொட்டாஸியம் அதிகளவு இருப்பது தெரிய வந்தால் பொட்டாஸியம் உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.
  • பொட்டாஸியம் அதிகமுள்ள இத்தகைய உணவுகளைத் தவிருங்கள்:
    • அதிகளவு பொட்டாஸியம் உள்ள பழங்களும் காய்கறிகளும்.
    • முழுதானியங்கள், பிரெட் மற்றும் பிஸ்கட்.
    • கொட்டை பருப்புகள், விதைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் (எ.கா. சாக்லேட், பீனட் பட்டர்).
    • தேங்காய் மற்றும் தொடர்புடைய பொருட்கள் (எ.கா. தேங்காய் பால், கயா).
    • எல்லா புதிய/டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறி சாறு, மூலிகை மருந்து பானங்கள், ஸ்ட்ராங் தேநீர்/காபி, கோகோ மற்றும் மால்ட் பானங்கள், பால், திராட்சைமது.
    • நாட்டு சர்க்கரை, வெல்லப் பாகு, மேப்பில் ஸிரப், மிட்டாய்கள், அதிமதுரம்.
    • அதிக அளவு பொட்டாஸியம் உள்ள மாற்று உப்பு, பாட்டிலில் அடைக்கப்பட்ட சாஸுகள், இறைச்சி மற்றும் காய்கறி சாறு, கோழி சாரம், சுவையூட்டுகிற கட்டி.

டிப்! காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 1 முதல் 2 மணிநேரத்துக்கு தண்ணீரில் ஊறவைத்தால், அதிலுள்ள பொட்டாஸியம் அளவைக் குறைக்கலாம்.

சோடியம்
  • சோடியம் இயற்கையாகவே எல்லா வகை உணவுகளிலும் உள்ளது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிகமாக உள்ளது. சோடியம் அதிகமாக உள்ள ஒரு மூலப்பொருள் உப்பு.
  • சோடியம் தாக உணர்வை தூண்டும், இதனால் நீங்கள் அதிகமாக நீர் அருந்த ஆரம்பிப்பீர்கள். இதன் விளைவாக, திரவத்தால் எடை கூடுவதோடு, இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இது இருதயத்துக்கு கூடுதல் சுமை அளிக்கும்.
  • சிறுநீரக நோய் உள்ளவர்கள் சோடியம் அளவைக் கட்டுப்படுத்துவது திரவ சமநிலையைக் காத்துக்கொள்ள உதவுகிறது.
  • சோடியம் உட்கொள்வதைக் குறைக்க உதவும் டிப்ஸ்:
    • சமையலில் சேர்க்கிற உப்பு/சாஸுகள் அளவை குறைக்கவும்.
    • சுவையூட்டுகிற கட்டிகள், இறைச்சி சத்துப்பொருள் நீர்மம் (Bovril) மற்றும் தேறல் காடிச் சத்து (Marmite) போன்ற இறைச்சி மற்றும் காய்கறிகள் சாறுகளைத் தவிருங்கள்.
    • பாட்டிலில் அடைக்கப்பட்ட கோழிச் சாறுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
    • பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள விவரச் சீட்டை வாசியுங்கள், 100கி உணவுப் பொருட்களில் 120மிகி-க்கும் குறைவான சோடியம் உள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
    • டின்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை குறைத்துவிடுங்கள். அவற்றைப் பயன்படுத்த தீர்மானித்தால், அதிலுள்ள உப்பு நீரை வடித்துவிடுங்கள்.
    • சமைக்கும்போது உப்பு/சாஸுகளுக்குப் பதிலாக புதிய மூலிகைகள் மற்றும் முழு மசாலா பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
    • உணவில் சுவையும் மணமும் கூட்ட பிரெஷ் லைம், எலுமிச்சை சாறு, அல்லது காடியைப் பயன்படுத்துங்கள்.

முக்கியம்! மாற்று உப்புகளில் பொதுவாக அதிகளவு பொட்டாஸியம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். மருத்துவர் அல்லது டயட்டீஷியனைக் கலந்தாலோசிக்காமல் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

திரவங்கள்
  • ஆரம்பக் கட்டத்தில் உள்ள CKD நோயாளிகளுக்கு, அவர்களது சிறுநீரக மருத்துவர் பரிந்துரைத்தால் தவிர, பொதுவாக திரவ கட்டுப்பாடுகள் கிடையாது.

*மேலேயுள்ள தகவல்களும் பரிந்துரைகளும் பொதுவான குறிப்புகள்தான். ஒரு தனி நபருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையாக எடுக்கக் கூடாது. உடல்நல தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரையோ மருத்துவ ஆலோசகரையோ பாருங்கள்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top