சிறுநீரக செயலிழப்பு
- முகப்பு
- >
- சிறுநீரக செயலிழப்பு
- >
- சிறுநீரகத்தைப் பற்றிய கட்டுக்கதைகளும் உண்மைகளும்
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
சிறுநீரகத்தைப் பற்றிய உண்மைகள்
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
ரசாயன உப்புக்கள் சிறுநீரகங்களில் படிகமாகும்போது சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. சிறிய துகள்கள் நமது சிறுநீரில் உடலைவிட்டு வெளியேறிவிடுகின்றன, ஆனால், பெரிய கற்களோ நம் சிறுநீரகங்களிலும், சிறுநீரகக்குழாயிலும் பையிலும் சிறுநீரைத் தேக்கிவிடுவதால், வலி ஏற்படுகிறது. அதனால், மிக அரிதாகவே சிகிச்சை அளிக்கப்படாமல் விடப்பட்டு, படுமோசமாகி சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கிறது.
அதுமட்டுமல்ல, “மௌன” கற்கள் என்று அழைக்கப்படுபவை உருவாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவை வந்தால், வலியும் வராது, அறிகுறிகளும் தெரியாது. அவை பெரும்பாலும் மாதக் கணக்காக, வருடக் கணக்காக சிகிச்சிக்கப்படாமல் விடப்பட்டு, சில சமயங்களில் சிறுநீரக கோளாறுக்கு வழிநடத்துகிறது.
சிறுநீரகக் கற்களுக்கு சிகிச்சை எடுக்காவிட்டால், இரத்த ஓட்டமும் சிறுநீர் வெளியேற்றமும் தடைபடுகிறது. இதனால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. இதனால், காலப்போக்கில் சிறுநீரகங்கள் விரிவடைந்து அவற்றின் செயல்பாடும் குறையலாம்.
நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தோடு ஒப்பிட சிறுநீரகக் கல் காரணமாக வரும் சிறுநீரக செயலிழப்புகள் குறைந்த சதவீதமாக உள்ளது.
10-ல் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏதோவொரு கட்டத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாகலாம்.
தடுப்பதற்கான டிப்ஸ்
- தாராளமாக தண்ணீர் குடியுங்கள்.
- உணவில் சோடியம் அளவைக் குறைத்துவிடுங்கள். ஏனென்றால், இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தூண்டலாம், உங்கள் சிறுநீரில் கால்ஷியம் அளவை அதிகரிக்கலாம்.
- சிவப்பு நிற இறைச்சி, பறவை இறைச்சி, முட்டைகள் போன்ற மாமிச புரதங்களைக் குறைத்துவிடுங்கள். இது யூரிக் அமிலத்தின் அளவைக் கூட்டி சிறுநீரக கற்களை உருவாக்கலாம்.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
முதுகு வலி பொதுவாக சிறுநீரக நோயின் ஒரு அறிகுறி அல்ல. சிறுநீர் ஓட்டம் தடைபடுவதால் சிறுநீரகங்கள் வீங்கினாலோ அதில் தொற்று ஏற்பட்டாலோ வலி உண்டாகலாம். சிறுநீரகக் கற்கள் இருந்தாலும், கடுமையான வலி ஏற்படலாம், குறிப்பாக இந்தக் கற்கள் சிறுநீரகக்குழாய் நோக்கி நகரும்போது வலி ஏற்படலாம். தசை வலி அல்லது முதுகுத் தண்டு நோய்களாலும் முதுகு வலி வரலாம்.
சிறுநீரக நோய் என்பதும் சிறுநீரக செயலிழப்பு என்பதும் ஒன்றல்ல. சிறுநீரகத்தின் செயல்பாட்டுத் திறன் பழுதடைந்து அவற்றால் உடலிலுள்ள திரவங்களை சீரான அளவில் வைக்க முடியாமல் போவதால், பெரும்பாலும் நச்சுப்பொருட்கள் உடலிலேயே தேங்கி விடுகின்றன. இந்த நிலையைத்தான் சிறுநீரக செயலிழப்பு என்று நாம் சொல்கிறோம்.
சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகள் நபருக்கு நபர் வேறுபடலாம். இதுபோன்ற மற்ற அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்:
- சிறுநீர் அளவு குறைவது
- குமட்டல் மற்றும் வாந்தி
- கைகளிலும் கணுக்கால்களிலும் வீக்கம்
- கண்களைச் சுற்றிலும் வீக்கம்
- அரிப்பு
- அசந்து தூங்க முடியாமல் போவது
- உயர் இரத்த அழுத்தம்
- பசியின்மை
கூற்று: அதிக கொலஸ்டிரால் இருப்பதால் நான் வருடக்கணக்காக ஸ்டாட்டின் மருந்தை விடாமல் எடுக்கிறேன். அதனால், நான் எனக்கு பிடித்ததையெல்லாம் சாப்பிடலாம்.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
ஸ்டாட்டின் என்பது கல்லீரலில் கொலஸ்டிராலின் உற்பத்தியைத் தூண்டுகிற ஒருவகை நொதியின் செயல்பாட்டைத் தடுக்கும் மருந்து. இதை எடுப்பதால் கொலஸ்டிரால் குறைவான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றும்படி மருத்துவர் தந்த பரிந்துரையை அலட்சியம் செய்யலாம் என்று கருதக் கூடாது.
என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு, மருந்து மாத்திரை போட்டுக் கொண்டால் போதும், அதிகளவு கொலஸ்டிராலை அது சரிகட்டி விடும் என்று சிலர் நினைக்கிறார்கள். அது மிகவும் தவறு. மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்டாலும்கூட, உங்கள் உணவுப் பழக்கத்தை நீங்கள் கண்காணிக்க வேண்டும், முக்கியமாக நிறைவுற்ற கொழுப்பு சம்பந்தமாக அதிக கவனமாக இருக்க வேண்டும்.
கூற்று: நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) (CKD) இருந்தால் நீங்கள் கண்டிப்பாக டையாலிஸிஸ் செய்ய வேண்டும்.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
CKD உள்ள ஒவ்வொரு நபருக்கும் டையாலிஸிஸ் தேவைப்படாது. CKD என்பது பல்வேறு வகையான சிறுநீரகக் கோளாறுகளைக் குறிக்கும் ஒரு பொதுவான பதம். இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமலும் இருக்கலாம். CKD என்பது படிப்படியாக வரும் நோய்.
ஆரம்பக் கட்டங்களில், பொதுவாக உணவு முறை மற்றும் மருந்துகளால் இது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறையால், அநேகர் சிறுநீரக நோய் படிப்படியாக முற்றுவதை குறைக்கவோ தடுக்கவோ செய்து இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதனால்தான், சிறுநீரக நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை செய்வது முக்கியம். CKD 5-ஆம் கட்டத்தில்தான் டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது.
கூற்று: நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய பரிசோதனை முறைகள் உள்ளன.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
சிறுநீரக நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் வழிமுறைகளும் உள்ளன. உட்படும் பரிசோதனைகள்:
- ஸீரம் கிரியாட்டினைன், நமது சிறுநீரகங்கள் எவ்வளவு நன்றாகச் செயல்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறவற்றில் இது முக்கியமானது.
- சிறுநீரக ஆய்வு, இது நமது சிறுநீரகத்தில் எவ்வளவு ஆல்புமின் (ஒருவகை புரதம்) உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறது. அளவுக்கு அதிக புரதம் இருப்பது சிறுநீரக கோளாறின் ஆரம்ப அறிகுறியாகும்.
சிறுநீரக நோய் என்பது படிப்படியாக வருகிற நோய், CKD-யில் ஐந்து கட்டங்கள் உள்ளன. ஒரு நபருக்கு சிறுநீரக நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதை சிறுநீர்க்குழல் வடிகட்டல் வீதக் கணக்கீடு (Glomerular Filtration Rate) (eGFR) சுட்டிக் காட்டுகிறது. உங்கள் உடல்நிலையைப் பொறுத்து கூடுதலான இரத்தப் பரிசோதனைகளும் ஸ்கிரீனிங்கும் தேவைப்படலாம்.
ஆரம்பக் கட்டங்களில், சிறுநீரக நோய் பொதுவாக உணவு முறை மற்றும் மருந்துகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த அணுகுமுறையால், அநேகர் சிறுநீரக நோய் படிப்படியாக முற்றுவதை குறைக்கவோ தடுக்கவோ செய்து இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள்.
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், பக்கவாதம், உடல் பருமன் அல்லது சிறுநீரக நோய் போன்றவற்றின் குடும்ப வரலாறு உள்ளவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு வரும் அபாயம் அதிகம். எனவே, அவர்கள் தவறாமல் உடல்நல ஸ்கிரீனிங் செய்வது முக்கியம். அதோடு, தங்களது குடும்ப மருத்துவரிடம் அல்லது மருத்துவ பராமரிப்பாளரிடம் செல்வதும் முக்கியம். என்னென்ன படிகள் எடுக்க வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைப்பார்கள்.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தால், வாழ்நாளை நீட்டவும் முடியும், தரமான வாழ்க்கை வாழவும் முடியும். சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை அளிக்க இதுவே சிறந்த தீர்வு. மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகம் பெரும்பாலும் பழுதடைந்த சிறுநீரகங்களின் செயல்பாட்டை முழுமையாகச் செய்யும். பொதுவாக அது உடனடியாக தன் வேலையைத் துவங்கும். இதனால், நோயாளி இயல்பு வாழ்க்கை வாழ முடியும். இந்தப் புதிய விடியலால், அவரது அல்லது அவளது வாழ்வின் மீதி பாகம் முழுக்க செய்ய வேண்டிய டையாலிஸிஸ், அதற்காக அவர் அன்றாடம் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்கிறது.
கூற்று: நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) (CKD) என்பதும் சிறுநீரக செயலிழப்பு என்பதும் ஒன்றுதான்.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
“சிறுநீரக நோய்” என்பதும் “சிறுநீரக செயலிழப்பு” என்பதும் ஒன்று அல்ல. “சிறுநீரக நோய்” என்பது சிறுநீரகங்களோடு தொடர்புடைய பலவகை நோய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பதமாகும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) என்பது படிப்படியாக வரும் ஒரு நோய். மருத்துவர் பரிந்துரைத்த உணவு முறையையும் மருத்துவத்தையும் பின்பற்றுவதன் மூலம், நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) உள்ள பெரும்பாலான நோயாளிகளால் தங்கள் உடல்நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயல்பான வாழ்க்கை வாழ முடியும். எனவே, சிறுநீரக நோய் உள்ள எல்லா நோயாளிகளுக்கும் டையாலிஸிஸ் தேவைப்படாது.
என்றாலும், உங்களுக்கு கடைசி கட்ட சிறுநீரக நோய் (End-Stage Renal Disease) (ESRD) என அழைக்கப்படுகிற சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், உங்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டுத் திறன் 15 சதவீதமோ அதற்கும் குறைவாகவோ இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் சிறுநீரகங்களால், உடலிலுள்ள திரவங்களை சீரான அளவில் வைக்க முடியாமல் போவதால், நச்சுப்பொருட்கள் உடலிலேயே தேங்கி விடுகின்றன.
இந்தக் கட்டத்தில்தான் உங்களைக் காப்பாற்ற டையாலிஸிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது. சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதும், நம்முடைய சிறுநீரகங்களைப் பாதுகாக்க படிகள் எடுப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்தான் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட மிகப் பொதுவான காரணம். ஏனென்றால், இது நமது சிறுநீரகங்களுக்கு வழிநடத்துகிற தமனிகளையும் சிறுநீரகங்களின் உள்ளே உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களையும் (வடிமுடிச்சுகள்) சேதப்படுத்துகிறது. இவற்றில் ஒன்று சேதமடைந்தாலும்கூட நமது சிறுநீரகங்களால் இரத்தத்திலிருந்து கழிவுகளை முழுமையாக வடிகட்ட முடியாமல் போய்விடும். இதனால், திரவங்களும் கழிவுகளும் ஆபத்தான அளவுகளில் தேங்கி சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கலாம்.
உங்கள் பதில் தவறு, உண்மை என்பதே பதில்!
உடல் பருமன் உள்ளவர்களுக்கு பல நாள்பட்ட நோய்கள் வருவதோடு நீரிழிவு நோயும் உயர் இரத்த அழுத்தமும் வருகிறது. இவை இரண்டும்தான் சிறுநீரக செயலிழப்புக்கு மிக முக்கிய காரணங்கள். தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் உள்ள குடும்ப வரலாறு ஆகியவற்றால் உடல் பருமன் வரலாம். சலிப்பு, சோகம், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் நம் உணவுப் பழக்கங்களைப் பாதிப்பதாலும் உடல் பருமன் வரலாம்.
உங்கள் எடையைக் கண்காணிக்க சில வழிகள்:
- ஒரு வாரத்துக்கு 2.5 மணிநேரம் என ஒவ்வொரு தடவையும் குறைந்த பட்சம் 30 நிமிடத்துக்கு சுறுசுறுப்பாக நடைபயிற்சி செய்யுங்கள்.
- வாரத்துக்கு மூன்று முறை ஜாகிங் அல்லது நீச்சலில் ஈடுபடுங்கள்.
- நீங்கள் சாப்பிடுவதை எல்லாம் அப்படியே ஒரு டயரியில் எழுதிவையுங்கள்.
- மளிகை கடைக்குச் செல்லும்போது, கண்ணில் பட்டதையெல்லாம் வாங்காமல் இருக்க, வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலைத் தயாரித்துவிட்டு செல்லுங்கள். பசியாக இருக்கும்போது ஷாப்பிங் செய்யாதீர்கள்.
- எண்ணெய்யில் பொறித்து சாப்பிடுவதற்கு பதிலாக, க்ரில் செய்தோ பேக் செய்தோ சாப்பிடுங்கள் அல்லது ஆவியில் வேக வைத்து சாப்பிடுங்கள்.
- கடுகு எண்ணெய், சூரியகாந்தி அல்லது கடலை எண்ணெய் போன்ற ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களை உபயோகியுங்கள்.
- உங்கள் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மாற்ற வேண்டிய செயல்கள் ஆகியவற்றைத் திட்டமிட உதவுமாறு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.