சிறுநீரக செயலிழப்பு
- முகப்பு
- >
- சிறுநீரக செயலிழப்பு
- >
- கண்ணோட்டம்
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரகங்கள் சரியாகவோ போதுமான அளவோ செயல்படாததால், உடலில் கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களும் தங்கி விடும் நிலையே சிறுநீரக செயலிழப்பு அல்லது கடைசி கட்ட சிறுநீரக நோய் (ESRD) என்று அழைக்கப்படுகிறது.
அடையாளங்களும் அறிகுறிகளும்:
- வாயில் அம்மோனியா நாற்றம்
- பசியின்மை
- வயிற்றுப்போக்கு
- சுவாசிக்க கஷ்டப்படுவது
- வீக்கம்
- குமட்டல்/வாந்தி
- நினைவு இழப்பது
- இரத்த சோகையைத்
சிறுநீரகங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
சிறுநீரகங்கள் என்பது நம் முதுகின் நடுப்பகுதிக்கு அருகே இரு பக்கத்திலும் அமைந்த அவரை விதை வடிவ உறுப்புகளாகும். இவை கீழுள்ள விலா எலும்புகளால் பாதுகாக்கப்பட்டு, சுற்றியுள்ள தசைகளாலும் கொழுப்பாலும் மூடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறுநீரகமும் கிட்டத்தட்ட இறுக்கி மூடிய ஒரு முஷ்டி அளவும் சுமார் 150 கிராம் எடையும் கொண்டது. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் ஒரு மில்லியன் சிறுநீர்க்கலங்கள் உள்ளன, இவை நுண்ணிய வடிகட்டிகள் ஆகும். இவை உடலிலுள்ள இரத்தம் முழுவதையும் வடிகட்டும் முக்கிய வேலையைச் செய்கின்றன.
நம்முடைய சிறுநீரகங்கள் நன்றாகச் செயல்படாதபோது, நச்சுப் பொருட்களும் அதிகளவு திரவங்களும் நம் உடலிலிருந்து வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
நச்சுப் பொருட்களும் கழிவுப் பொருட்களும் நம் உடலில் தங்கிவிடுவதால், உயிரணுக்களுக்கும், திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் நிரந்தரமான மற்றும் மாற்ற முடியாத சேதம் ஏற்படுகிறது. எனவே, நோயாளியின் உயிரைக் காக்க சிறுநீரக செயல்பாட்டை மாற்று சிறுநீரகத்துக்கோ டையாலிஸிஸுக்கோ மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.