சிகிச்சை
- முகப்பு
- >
- சிறுநீரக செயலிழப்பு
- >
- டையாலிஸிஸுக்கு முந்தைய கல்வி திட்டம்-அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
டையாலிஸிஸுக்கு முந்தைய கல்வி திட்டம்-அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சந்திப்பதற்காக குறிக்கப்பட்ட நேரம்
தயவுசெய்து உதவிபெற startright@nkfs.org-க்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது 6506 2187-க்கு அழைக்கவும்.
சிகிச்சை
உங்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவரிடம் நீங்கள் ஆலோசிக்கலாம்.
NKF-ல் பதிவு செய்த பின்பு, எங்களுடைய சிறுநீரக மருத்துவர் மாதத்திற்கு ஒரு முறை டையாலிஸிஸ் மையத்தில் உங்களது உடல்நிலையை சீராய்வு செய்வார். ஏதேனும் சிக்கல்கள் வரும்போது, உங்களது டையாலிஸிஸை மேற்பார்வை செய்யும் செவிலியர், தேவைப்பட்டால் அந்தந்த டையாலிஸிஸ் மையங்களில் உள்ள சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
சிறுநீரக செயலிழப்புக்கு நான்கு வகை சிகிச்சை முறைகள் உள்ளன: ஹீமோடையாலிஸிஸ், பெரிடோனியல் டையாலிஸிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அல்லது பழமை சிகிச்சை.
ஹீமோடையாலிஸிஸ் | நன்மைகள் | Cons |
---|---|---|
ஹீமோடையாலிஸிஸ் என்பது ஒரு டையாலிஸிஸ் இயந்திரத்தின் உதவியோடு இரத்தத்திலுள்ள நச்சுப் பொருட்களையும் கூடுதலான உப்பையும், தண்ணீரையும் நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு வழிமுறையாகும். அறுவை சிகிச்சை செய்து உருவாக்கப்பட்ட ஃபிஸ்டுலா வழியாக இரத்தம் உடலிலிருந்து வெளியேற்றப்பட்டு டையாலிஸிஸ் இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள செயற்கை சிறுநீரகத்தால் (டையலைஸரால்) வடிகட்டப்படுகிறது. |
• ஊசியை நுழைப்பது போன்று இந்த சிகிச்சையில் உட்பட்டுள்ள பல்வேறு செயல்களை டையாலிஸிஸ் மையத்தில் உள்ள பயிற்சி பெற்ற செவிலியர்கள் செய்கிறார்கள் • ஒரே சமயத்தில் டையாலிஸிஸ் செய்து கொள்கிற மற்ற நோயாளிகளோடு தொடர்பையும் தோழமையையும் உருவாக்கலாம் |
• ஒவ்வொரு முறையும் நான்கு மணி நேரங்கள் நீடிக்கிற சிகிச்சைக்காக நோயாளிகள் வாரத்திற்கு மூன்று நாட்கள் டையாலிஸிஸ் மையத்திற்கு பயணிக்க வேண்டியிருக்கும் • ஒரே சமயத்தில் மற்ற நோயாளிகள் டையாலிஸிஸ் செய்வதால், டையாலிஸிஸ் மையத்தில் தனிமை குறைவாகவே இருக்கும் • சிகிச்சை நேரத்தில் அன்புக்குரியவர்கள்/நண்பர்கள் வந்து சந்திப்பதற்கு அனுமதி இல்லை • ஃபிஸ்டுலாவில் ஒவ்வொரு முறையும் 2 ஊசிகள் நுழைக்கப்படுவதால், வலியோ அசௌகரியமோ ஏற்படலாம். இரத்தம் உறைவது அல்லது அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும் |
பெரிடோனியல் டையாலிஸிஸ் | நன்மைகள் | தீமைகள் |
பெரிடோனியல் டையாலிஸிஸ் என்பது வீட்டிலேயே சுயமாகச் செய்து கொள்ள முடிகிற ஒரு சிகிச்சையாகும், இதற்கு ஊசி தேவையில்லை. அறுவை சிகிச்சையால் பொருத்தப்பட்ட கதீட்டர் வழியாக பெரிடோனியத்தில் செலுத்தப்படுகிற டையாலிஸிஸ் கரைசல் மூலம் இரத்தத்திலிருந்து நச்சுப்பொருட்களும் கூடுதலான தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. |
• நோயாளிகள் டையாலிஸிஸ் மையத்திற்கு பயணிக்க வேண்டியதில்லை, இந்தச் சிகிச்சையை தங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்
• அன்றாட வேலைகளைச் செய்வதற்கு அதிக சுதந்திரம் கிடைக்கும் • எஞ்சியுள்ள சிறுநீரக செயல்பாட்டை நன்கு பாதுகாக்க முடியும் • பொதுவாக, திரவம் மற்றும் உணவு முறைகளில் குறைந்தளவு கட்டுப்பாடு • ஊசிகள் தேவையில்லை பிற்பாடு ஹீமோடையாலிஸிஸ் நுழைவை உருவாக்க வேண்டுமானால், அதற்காக இரத்தக் குழாய்களை பாதுகாக்க முடியும் |
• சிகிச்சை எல்லா நாளும் செய்யப்படுகிறது • கதீட்டர் உடல் தோற்றத்தைப் பாதிக்கலாம் • தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், நீந்துவதற்கு அனுமதி இல்லை. • டையாலிஸிஸ் கரைசலில் குளுகோஸ் (சர்க்கரை) இருப்பதால் எடை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது. • இரத்தத்தில் குளுகோஸ் சேர்வதால் நீரிழிவு நோயாளிகள் அதை அதிக சிரத்தையுடன் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். • மருத்துவ சாதனங்கள் மற்றும் பெரிடோனியல் டையாலிஸிஸ் கரைசலை வைப்பதற்காக வீட்டில் இடத்தை ஒதுக்க வேண்டியிருக்கும் • கதீட்டரில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது. |
சிறுநீரக மாற்று சிகிச்சை | நன்மைகள் | தீமைகள் |
சிறுநீரக மாற்று சிகிச்சை என்பது தானம் செய்பவரின் உடலிலிருந்து சிறுநீரகம் அறுவை சிகிச்சையின் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு நோயாளியின் உடலில் பொருத்தப்படுகிற செயல்முறையைக் குறிக்கிறது. உயிருள்ள ஒருவரிடமிருந்தோ இறந்துபோன ஒருவரிடமிருந்து (இவர் இறந்து போன நன்கொடையாளர் என அழைக்கப்படுகிறார்.) ஒரு புதிய சிறுநீரகத்தை நோயாளி தானமாகப் பெறலாம்.
டையாலிஸிஸை தொடங்குவதற்கு முன்பு, உயிரோடு இருக்கும் ஒருவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாக பெறுவதைப் பற்றி சிந்திக்கும்படி நோயாளிகள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். |
• டையாலிஸிஸோடு ஒப்பிட மேம்பட்ட வாழ்க்கை தரம் இருக்கும்
• குடும்ப வாழ்க்கையிலும் பணியிலும் அதிக இயல்பாக ஈடுபட முடியும் • டையாலிஸிஸ் செய்வோருக்கு உள்ளது போன்ற திரவ மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் கிடையாது • டையாலிஸிஸ் சிகிச்சையைப் போல் நீண்ட நேரங்களை ஒதுக்க வேண்டியிருக்காது |
• பெரிய அறுவை சிகிச்சை முறைகளில் இருப்பதைப் போலவே, இதிலும் அபாயங்கள் உள்ளன. நீங்கள் தகவலறிந்த முடிவை எடுப்பதற்காக இந்த நன்மைகளும் தீமைகளும் உங்களுக்கு விளக்கப்படும். • தவறாமல் கண்காணிப்பதும் தொடர்ச்சியாக மருத்துவரைக் காண்பதும் அவசியம். மாற்றி வைக்கப்பட்ட சிறுநீரகத்தை உங்கள் உடல் உதறித் தள்ளி விடாமல் இருக்க உதறித் தள்ளிவிடும் அபாயத்தைக் குறைக்கும் மருந்துகளை வாழ்நாள் முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் • சிறுநீரகம் மாற்றி வைக்கப்பட்ட பின்பு, நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம். |
பழமை சிகிச்சை | நன்மைகள் | தீமைகள் |
பழமை சிகிச்சை என்பது மருந்துகளைப் பயன்படுத்தி அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும்
டையாலிஸிஸோ சிறுநீரக மாற்று சிகிச்சையோ செய்யாமல் சிறுநீரக செயலிழப்பைச் சமாளித்து, நோயாளியின் மற்றும் அவருடைய அல்லது அவளுடைய குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் செய்யப்படும் ஒரு வழிமுறையாகும். இதன் மூலம் நோயாளியின் உடல் ரீதியான, உளவியல் ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான அக்கறைகளை கருத்தில் கொள்ளவும், நோயாளியின் வசதியை மையப்படுத்தி, அவரது தீர்மானங்களுக்கு மதிப்பு கொடுத்து நோயாளிக்கும் அவர்/அவள் குடும்பத்துக்கும் ஆதரவு கொடுக்க முடிகிறது. |
• அன்புக்குரியவர்களுடன் செலவிட அதிக நேரம் இருக்கிறது, டையாலிஸிஸ் செய்யும் நோயாளிகளை விட அன்றாட காரியங்களில் ஈடுபட அதிக சுதந்திரம் இருக்கிறது
• ஊசிகளை நுழைப்பதோ அறுவை சிகிச்சையோ தேவையில்லை • டையாலிஸிஸ் செய்வதால் ஏற்படும் தொற்றின் அபாயம் இல்லை • நோயாளி உடல் நலமாக இருப்பதாக உணர்ந்தால் அவரோ அவளோ பயணம் மேற்கொள்ளலாம் • சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில், அங்குள்ள குழுவின் பல்துறை ஆதரவு நோயாளிக்குக் கிடைக்கும் |
• இந்தச் சிகிச்சையில் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதிலும் உளவியல் ரீதியான ஆதரவை தருவதிலும் கவனம் ஒருமுகப்படுத்தப்படும். சிறுநீரக நோயைக் குணப்படுத்துவதோ வாழ்நாளை நீடிப்பதோ இதன் நோக்கம் அல்ல. • மருத்துவரை தவறாமல் பார்ப்பதற்காக நோயாளி மருத்துவமனைக்கு பயணிக்க வேண்டியிருக்கும் • நோயாளிக்கு உடல் மற்றும்/அல்லது உளவியல் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைப்பதற்காக கூடுதல் மருந்துகள் தேவைப்படலாம் |
ஒரு நோயாளி ஹீமோடையாலிஸிஸ் (HD) சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு ஒருநாள் நீடிக்கிற அறுவை சிகிச்சை செய்யப்படும், அவருக்கு/அவளுக்கு ஏவி ஃபிஸ்டுலாவை அல்லது செயற்கை ஒட்டுக்களை உருவாக்குவதற்காக அவரது சிரையை நேரடியாக தமனியுடன் இணைப்பதற்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த நாளங்களில் அழுத்தத்தைக் கூட்டி ஹீமோடையாலிஸிஸை எளிதாக்குகிறது.
ஃபிஸ்டுலா அல்லது ஒட்டு பொதுவாக முன் கையில் உருவாக்கப்படுகிறது, இது முதிர்ச்சியடைந்து பயன்பாட்டுக்கு வருவதற்கு 6-12 வாரங்கள் எடுக்கும்.
என்றாலும், ஃபிஸ்டுலா நல்லபடியாக முதிர்ச்சியடையாத நோயாளிகளுக்குக் கூடுதல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். நோயாளிக்கு டையாலிஸிஸை உடனடியாகத் துவங்க வேண்டியிருந்தால், உடனடி இரத்த நாள நுழைவுக்காக ஒரு தற்காலிக கதீட்டர் கழுத்தில் பொருத்தப்படும். ஹீமோடையாலிஸிஸ் சிகிச்சையை தேர்ந்தெடுக்கும் நோயாளிகள், அந்த சிகிச்சைக்காக முன்னரே திட்டமிடுவதற்காக தங்களுடைய மருத்துவர்களையோ செவிலியரையோ கலந்தாலோசிக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
உங்களுடைய அடிவயிற்றில் (ஒரு நாள் எடுக்கும் அறுவை சிகிச்சை மூலம்) ஒரு கதீட்டர் நிரந்தரமாகப் பொருத்தப்படும், 2-3 வாரங்களுக்குப் பின்பு அதை நீங்கள் பயன்படுத்த முடியும். சிலசமயங்களில், PD சிகிச்சையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டியிருந்தால், 2-3 வாரங்களுக்கு முன்னரே கதீட்டரைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
உங்கள் வீடு சுத்தமாக இருக்கிறதா என்றும் வீட்டில் வைத்து டையாலிஸிஸ் நடத்துவதற்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் உறுதிசெய்ய PD செவிலியர் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து அதைப் பார்வையிடுவார். நீங்களே சுயமாக எப்படி PD செய்துகொள்ளலாம் என்றும் PD கதீட்டரை எப்படி பராமரிக்கலாம் என்றும் தெரிந்துகொள்வதற்காக உங்களது மருத்துவக் குழுவினர் உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் அல்லது பராமரிப்பாளருக்கும் 3-5 நாட்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
CKD என்பது சிறுநீரக செயல்பாட்டில் காலப்போக்கில் படிப்படியாக வருகிற பாதிப்பு ஆகும், பொதுவாக கடைசி கட்டங்கள் வரும்வரை வெளிப்படையான அறிகுறிகள் தெரிவதில்லை.
ஆரோக்கிய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, அதோடு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவை சிறுநீரக நோய்கள் வருவதைத் தடுக்க உதவும்.
பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஒரேவித வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் இருப்பதால் அவர்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால் உங்கள் வாழ்நாளில் உங்களுக்கும் இந்த நோய் வரும் ஆபத்து அதிகம் இருக்கிறது.
ஏதாவது ஆபத்தையோ அறிகுறிகளையோ ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக தவறாமல் உடல்நலப் பரிசோதனை செய்வதும் முக்கியம், தற்போது ஏதாவது உடல்நல பிரச்சினைகள் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பதும் நல்லது.
சிறுநீரக செயலிழப்புக்கான அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கவும் சிக்கல்களை சமாளிக்கவும் முக்கியமாக சிகிச்சை அளிக்கப்படும். உதாரணமாக, திரவம் தங்கிவிடுவதால் வரும் வீக்கம், நச்சுப்பொருட்கள் தேங்கி விடுவதால் வரும் அரிப்பு, இரத்த சோகை, பொட்டாஸியம் மற்றும் பாஸ்பேட் அளவு அதிகரிப்பதால் வரும் சோர்வு ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
டையாலிஸிஸ் செய்யாவிட்டால், உடலில் நச்சுப் பொருட்கள் தேங்கிவிடும். உடலில் எவ்வளவு விரைவாக நச்சுப்பொருட்கள் தேங்கிவிடுகிறது என்பதைப் பொருத்தும், முக்கியமாக, எஞ்சியிருக்கும் சிறுநீரகத்தின் செயல்பாடு எவ்வளவு விரைவாக குறைகிறது என்பதைப் பொருத்தும் ஒரு சில நாட்கள் முதல் ஒரு சில வாரங்கள் வரை என எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம்.
பாரம்பரிய சீன மருத்துவம் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தியதாக சரியான ஆதாரம் இல்லை. சிறுநீரக செயலிழப்பு சரி செய்ய முடியாதது.
பாரம்பரிய மருந்துகளையோ அல்லது சந்தேகத்துக்குரிய மூலங்களிலிருந்து வரும் ஹெல்த் சப்ளிமண்ட்டுகளையோ எடுக்க வேண்டாம், அவை உங்கள் உடல்நல பிரச்சினைகளை இன்னும் மோசமாக்கும். உங்களுக்கு சிறுநீரக நோய் இருந்தால், அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணிகளான Diclofenac (Voltaren), Naproxen (Synflex), Etoricoxib (Arcoxia) போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம், உங்களுடைய சிறுநீரகத்தின் செயல்பாட்டை அவை மோசமாக்கலாம்.
எந்தவொரு மருந்தோ சப்ளிமண்ட்டோ எடுப்பதற்கு முன்பு எப்போதுமே உங்கள் சிறுநீரக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
பணம் மற்றும் பராமரிப்பு சம்பந்தமான ஆலோசனை
மருத்துவ சமூக பணியாளரிடம் (MSW) நீங்கள் பேச விரும்புவதாக தயவுசெய்து மருத்துவமனையிலுள்ள மருத்துவரிடமோ செவிலியரிடமோ தெரிவியுங்கள்.
சிறுநீரக ஒருங்கிணைப்பாளரிடம் இருந்தும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவிடமிருந்தும் ஆலோசனை பெறவும் நிலவில் உள்ள சிகிச்சை முறைகளைப் பற்றி நோயாளியோ குடும்பத்தாரோ சமயத்துக்கேற்ற பொருத்தமான கல்வியைப் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். நோயாளிக்கு மிகச் சிறந்த சிகிச்சை எது என்பதைத் தேர்ந்தெடுப்பதற்காக தகவலறிந்த முடிவுகள் எடுக்க இது உதவும்.
மருத்துவ சமூக பணியாளர் (MSW) ஏழை நோயாளிகளைப் பற்றி NKF-விடம் தெரிவிப்பார்.
பணம் செலுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், startright@nkfs.org-ல் தயவுசெய்து மின்னஞ்சல் செய்யவும் அல்லது 6506 2187-ல் எங்களை அழைக்கவும்.
எங்களது மருத்துவ சமூகப் பணியாளர்கள், காப்புறுதி கோரல், கவரேஜ் போன்றவை கிடைப்பதற்கான சாத்தியத்தைப் பற்றி உங்களோடு கலந்து பேசி ஆலோசனை வழங்குவர் அல்லது எந்தெந்த மானியங்கள் பெற நீங்கள் தகுதி பெறுகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்காக பண மதிப்பீடு நடத்துவார்கள்.
CKD நோயாளிகள் ஆரோக்கியமான உணவு உட்கொள்வதும் உடலை வலிமையாக வைப்பதும்
CKD உள்ளதாக கண்டறியப்பட்ட பின்பு சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது எப்படி என அறிவது முக்கியம். எஞ்சியுள்ள சிறுநீரக செயல்பாட்டை பாதுகாப்பதும் சிறுநீரக செயலிழப்பு என அறியப்படுகிற CKD கட்டம் 5-க்கு செல்வதை தாமதப்படுத்துவதுமே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
CKD நோயாளிகள் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதைப் பற்றிக் கூடுதல் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
செய்யலாம். CKD மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகள், உடல்நிலை நன்றாக இருந்தால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தவறாமல் உடற்பயிற்சி செய்வது, தசையை வலிமையாக வைத்திருக்க உதவும், அன்றாட செயல்களை சுதந்திரமாகச் செய்வதற்கான சகிப்புத்தன்மையையும் ஆற்றலையும் அளிக்கும்.
உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற உடற்பயிற்சி வகையைப் பற்றிக் கூடுதலாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
மற்றவைகள்
டையாலிஸிஸ் சிகிச்சையில் பல்வேறு முறைகள் உள்ளன, உங்களுடைய வேலை அட்டவணையோடு ஒத்துப்போகிற ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
முழுநேர வேலை செய்ய வேண்டுமென உங்களுடைய முதலாளி அவசியப்பட்டால், டையாலிஸிஸ் மையத்தில் செய்யப்படுகிற நாக்டர்னல் ஹீமோடையாலிஸிஸையோ அல்லது வீட்டிலேயே ஆட்டோமேட்டட் பெரிடோனியல் டையாலிஸிஸையோ நீங்கள் செய்து கொள்ளலாம். இரண்டுமே நீங்கள் தூங்கும்போது செய்யப்படுகிறது.