Menu

சிறுநீரக செயலிழப்பு

உங்கள் உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்

சோடியம் என்றால் என்ன?

உடலின் திரவ சமநிலையைக் காத்துக்கொள்ள உதவும் முக்கியமான ஒரு தாதுப்பொருள். உப்பில் 40% சோடியம் உள்ளது. அதேபோல், ஸாஸ்-கள், சுவையூட்டும் பொருட்கள், பதனப்பொருள்கள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு ஆகியவற்றிலும் உள்ளது.

இது ஏன் ஆபத்தானது?
அதிகளவு சோடியம் உட்கொண்டால் உயர் இரத்த அழுத்தம் வரலாம். இது சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், இருதய நோய் ஆகியவற்றுக்கு வழிநடத்துகிற முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. அதோடு, இது அதீத தாகத்தை உண்டாக்குவதால், உடல் அதிகளவு திரவத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதாகிறது.

நான் எவ்வளவு சேர்த்துக் கொள்ளலாம்? பரிந்துரைக்கப்பட்ட சோடியம் அளவு: ஒரு நாளைக்கு 1 தேக்கரண்டி (தேக) உப்பு அல்லது 2,000மிகி.

சத்து விவரப் பட்டியலை எப்படி வாசிப்பது?

சோடியம் சாமர்த்தியமாக நுழைந்துவிடலாம்! மளிகைப் பொருட்கள் வாங்கும்போது அட்டையிலுள்ள சத்து விவரப் பட்டியலை வாசியுங்கள். அப்போதுதான், சோடியம் அதிகளவு உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

 

கவனமாக இருக்கவேண்டிய உணவுகள் இதோ:

பதனப்பொருள் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகள்

உப்பு சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகள்

கிரேவி, சூப், சுவையூட்டுகிற க்யூப், தாளிப்பு பொருட்கள் மற்றும் ஸாஸ்-கள்

ஆரோக்கியமான மாற்று உணவுகளுக்கு மாறுங்கள்

வெளியே உண்ணும்போது, சோடியம் அளவைக் குறைக்க உதவும் சில எளிய டிப்ஸ் இதோ:

உணவுப் பட்டியலில் இருந்து ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுங்கள்

ஆர்டர் செய்யும் முன்பு, உணவுப் பட்டியலில் உள்ள உணவுகளின் சத்து விவரங்களைப் பாருங்கள், பின்பு குறைவான சோடியம் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஹெல்த் ப்ரமோஷன் போர்ட் வெளியிட்ட "சோடியம் குறைவு" ஆரோக்கியமான தெரிவு சின்னம் இருக்கிறதா எனப் பாருங்கள். இந்தச் சின்னம் உள்ள உணவுப் பொருட்களில் சோடியத்தின் அளவு இதுபோன்ற மற்ற உணவுப் பொருட்களைக் காட்டிலும் சுமார் 25% குறைவாக உள்ளது.

நீங்கள் கேட்கலாம்

உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது என பணியாளரிடம் கேட்கத் தயங்காதீர்கள். உப்புக் குறைவான உணவை ஏற்பாடு செய்ய முடியுமா அல்லது மாற்றிக் கொடுக்க முடியுமா என்றும் கேளுங்கள். உதாரணமாக, கிரேவி கொஞ்சமாக தரச் சொல்லுங்கள் அல்லது ஸாஸ்கள் மற்றும் சாலட் டிரெஸ்ஸிங் ஆகியவற்றை உணவோடு சேர்க்காமல் தனியாகத் தரும்படி கேளுங்கள். அப்போதுதான், உங்கள் உணவில் எவ்வளவு சேர்ப்பது என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

எந்த உணவிலாவது சோடியம் மறைந்திருக்கிறதா எனப் பாருங்கள்.

மேரினேட்டட், பிக்கில்ட், ஸ்மோக்ட், ப்ரெட்டட், ப்ரைன்ட், ஆவ் ஜஸ், இன் புரோத் அல்லது டெரியாக்கி போன்ற வார்த்தைகள் உங்கள் உணவில் அதிக அளவு சோடியம் இருப்பதைக் குறிக்கலாம்.

உணவை பகிர்ந்துகொள்ளுங்கள்

குறைந்தளவு உணவை ஆர்டர் செய்யுங்கள் அல்லது வேறொருவருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால், சோடியம், கலோரிகள் மற்றும் கொழுப்பின் அளவை பாதியாகக் குறைக்கிறீர்கள்.

வீட்டில் உணவை சமையுங்கள்

பெரும்பாலும் வெளியே சாப்பிடுவதைக் குறைத்துவிடுங்கள். முடிந்தால் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். அப்போது, உங்கள் உணவிலுள்ள சோடியத்தின் அளவை உங்களால் கட்டுப்படுத்த முடியும்.

No சோடியம் அதிகமுள்ள உணவுகள் சோடியம் அளவு (மிகி) குறைவான சோடியம் உள்ள மாற்று உணவுகள் சோடியம் அளவு (மிகி)
1 ரோஸ்ட்டட் சிக்கன் ரைஸ் 1,112 ஸ்டீம்டு சிக்கன் ரைஸ் 698
2 பால் சேர்க்கப்பட்ட, வறுத்த மீன் பீ கூன் சூப் 2,708 பால் சேர்க்கப்படாத, துண்டு மீன் சூப் 1,808
3 மீ சையம் கிரேவியுடன் 2,347 மீ சையம் கிரேவி இல்லாமல் 1,008
4 கடல் உணவு டாமியம் பான் மியான் சூப் 4,439 போர்க் டம்ப்ளிங் பான் மியான் சூப் 2,816
5 கிரீமி சிக்கன் பாஸ்தா 1,161 ப்ரான் அக்லியோ ஓலியோ 786
6 சிக்கன் மசாலா கிரேவியுடன் (150கி) 768 சிக்கன் டிக்கா (100கி) 263
7 வறுத்த இறால் வத்தல் (100கி) 750 அரிசி வத்தல் (100கி) 369
8 சீஸ் ப்ரைஸ்
(1 பிளேட், 186கி)
658 டிரஸ்ஸிங் செய்யப்படாத பேக்ட் உருளைக்கிழங்கு
(1 முழுமையாக, 202கி)
16
9 சதே கிரேவியுடன் (10 துண்டுகள்) 920 சதே கிரேவி இல்லாமல் (10 துண்டுகள்) 231

*1 முதல் 5 பொருட்கள் ஒருமுறை பரிமாறும் அளவில் அமைந்துள்ளன

தகவல் மூலம்: உணவிலுள்ள எனர்ஜி மற்றும் சத்து தொகுப்பு, ஹெல்த் ப்ரமோஷன் போர்ட், 2011

உப்பு உட்கொள்ளலைக் குறையுங்கள் துண்டுப்பிரதியை பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்க.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top