Menu

சிறுநீரக செயலிழப்பு

தலைப்பு: உங்கள் உடல் அமைப்பைப் புரிந்துகொள்ளுங்கள்

ஆரோக்கியமாய் வாழ உடற்பயிற்சி செய்வது அல்லது ஏதாவதொரு திறமையை மெருகுபடுத்துவது என எதை நீங்கள் செய்யத் தொடங்கினாலும் அது ஏற்கெனவே ஒரு சாதனைதான்‍! உங்கள் BMI, உடற்கட்டும் அளவும், இதயத் துடிப்பு, தகுந்த தீவிர நிலை ஆகியவற்றைத் தீர்மானிக்க இந்த ஆரோக்கிய மற்றும் உடற்கட்டு கருவிகளையும் கால்குளேட்டர்களையும் பயன்படுத்துங்கள். உடற்பயிற்சியின் குறிக்கோளை எட்ட அவை உதவும்.

BMI என்றால் என்ன?

உடல் நிறை குறியீடு (Body Mass Index) (BMI) என்பது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற உடல்நல பிரச்சினைகளுடன் தொடர்புடைய ஆபத்துக்களை மதிப்பிட உதவும் ஒன்று. ஒரு நபரின் உயரத்தையும் எடையையும் கணக்கில் கொண்டு இதை அளவிட முடியும்.

தயவு செய்து உங்கள் எடையையும் உயரத்தையும் பதிவு செய்யுங்கள்.

எடை கிகி-ல் கிலோ
உயரம் மீ-ல் மீ
உங்களுடைய BMI  

உடல் நிறை குறியீடு (BMI)

=

எடை (கிகி)

உயரம் (மீ)²

மற்ற BMI ஆபத்து

அதிக ஆபத்து! (27.5 & மேலே) – அதீத உடல் பருமன்!

இருதய நோய்கள் வருவதற்கும், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், லிபிட் கோளாறுகள், கீல்வாதம், மனநல கோளாறு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகள் வருவதற்குமான ஆபத்து அதிகம்.

உடல்நல பரிந்துரைகள்: சுறுசுறுப்பாக நடப்பது போன்ற உடல்சார்ந்த செயல்களில் ஈடுபடுங்கள். அதற்காக, மெதுவாக தொடங்கி சீராகவும் படிப்படியாகவும் மாற்றம் செய்யுங்கள். எண்ணெய், உப்பு, சர்க்கரை குறைவான சத்துமிக்க உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்!

ஓரளவு ஆபத்து! (23 – 27.4) – உடல் பருமன்!

இருதய நோய்கள் வருவதற்கும், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், லிபிட் கோளாறுகள், கீல்வாதம், மனநல கோளாறு போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகள் வருவதற்குமான ஆபத்து ஓரளவு உள்ளது.

உடல்நல பரிந்துரைகள்: படிப்படியாக மாற்றம் செய்து ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளிலும் உடல்சார்ந்த செயல்களிலும் ஈடுபடுங்கள். எண்ணெய், உப்பு, சர்க்கரை குறைவான சத்துமிக்க உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்!

குறைவான ஆபத்து! (18.5 – 22.9) – ஏற்கத்தக்க எடை!

இருதய நோய்களும் மற்ற உடல்நல கோளாறுகளும் வருவதற்கான ஆபத்து குறைவு.

உடல்நல பரிந்துரைகள்: ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் காத்துக்கொள்ள தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஏரோபிக் மற்றும் கட்டுப்பாட்டுப் பயிற்சிகள் இரண்டிலும் ஈடுபடுங்கள். எண்ணெய், உப்பு, சர்க்கரை குறைவான சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதைத் தொடருங்கள்!

(18.4 & கீழே) –குறைவான எடை!

சத்துக் குறைவு நோய்களும் எலும்பு மெலிவு நோய்களும் வரும் ஆபத்து இருக்கிறது.

உடல்நல பரிந்துரைகள்: ஆரோக்கியமான அளவுக்கு எடையைக் கூட்ட முயலுங்கள். இதற்காக, சத்துமிக்க உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள். ஆரோக்கியமிக்க கார்போஹைட்ரேடுகள், புரதம் மற்றும் நிறைவுறாத கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். எலும்புகள் வலிமை அடைய ஆற்றல் பயிற்சிகளைத் தொடங்குங்கள், மிதமான ஏரோபிக் பயிற்சியும் செய்யுங்கள்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top

Notice

Friends of NKF and Donation Portal will undergo scheduled maintenance during the following periods:

  •  14 September 2025 (Sunday), 8.00am to 8.00pm
  • 21 September 2025 (Sunday), 8.00am to 8.00pm
  • 24 September 2025 (Wednesday), 2.00am to 2.30am
  • 28 September 2025 (Sunday), 8.00am to 8.00pm
  • 12 October 2025 (Sunday), 8.00am to 8.00pm

These sites will not be available during the maintenance period. 

We apologise for any inconvenience this may cause.