சிகிச்சை
- முகப்பு
 - >
 - பலவகை சிகிச்சை முறைகள்
 - >
 - டையாலிஸிஸ் நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு
 
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
டையாலிஸிஸ் நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு
டையாலிஸிஸ் நோயாளிகளின் அல்லது கடைசி கட்ட சிறுநீரக நோய் உள்ள நோயாளிகளின் சிறுநீரகங்கள் அதற்குரிய முழு திறனோடு செயல்படாததால் ஆரோக்கியம் காக்க சரியான அளவு புரதம், கலோரிகள், திரவம், உயிர்சத்துக்கள், தாதுப்பொருட்கள் சேர்ந்த சரிவிகித உணவு மிகவும் அவசியம்.
நினைவில் வைக்க வேண்டியவை:
- தினந்தோறும் சரியான வகை உணவுகளை சரியான அளவு சாப்பிட வேண்டும்.
 - மருத்துவர் பரிந்துரைத்தபடி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 - அவர்களுடைய டையாலிஸிஸ் சிகிச்சைக்கு ஏற்ப செயல்படுங்கள், உதாரணமாக, டையாலிஸிஸ் செயல்முறையை ஒருமுறைகூட தவறவிடாதீர்கள்.
 - கூடுமானவரை, உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
 
சரியான அளவு கலோரிகள் உட்கொள்வது
- உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நலனுக்கும் சரியான அளவு ஆற்றல் (கலோரிகள்) முக்கியம்.
 - ஒவ்வொரு நபருக்கும் அவரது வயது, பாலினம், உடல் அளவு, உடல்சார்ந்த செயல்களின் அளவு மற்றும் மருத்துவ நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப ஆற்றலின் தேவை வித்தியாசப்படுகிறது.
 - PD நோயாளிகளுக்கு: அவர்களுக்குச் செலுத்தப்படும் டையாலிஸேட், கார்போஹைட்ரேடுகளின் (டெக்ஸ்ட்ரோஸ்) வடிவில் கூடுதல் கலோரிகளை அளிக்கிறது. அதிகளவு கலோரிகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக, உங்களுடைய அன்றாட உணவில் கார்போஹைட்ரேடுகளின் அளவைக் குறைக்க வேண்டும்.
 - உங்களுக்குச் செலுத்தப்படும் டையாலிஸேட் எந்தளவு கலோரிகளை அளிக்கிறது என்பதைப் பற்றி உங்களுடைய டயட்டீஷியன் அல்லது மருத்துவரிடம் கேளுங்கள்.
 
															தகுந்த அளவு புரதம்
- தசைகளை கட்டமைப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் புரதம் அத்தியாவசியம்.
 - டையாலிஸிஸ் சிகிச்சைமுறையின்போது (PD மற்றும் HD) ஓரளவு புரதத்தை இழக்க நேரிடுவதால் டையாலிஸிஸ் நோயாளிகள் அதிகளவு புரதம் உட்கொள்ள வேண்டும்.
 - போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எடை குறைவு, தசை சுருக்கம், தொற்றுக்களை எதிர்ப்பதற்கான ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படுவதோடு ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும் வழிவகுக்கும்.
 - உயர்தரப் புரதம், தாழ்தரப் புரதம் என புரதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
- இறைச்சி, பறவை இறைச்சி, மீன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றில் உயர்தரப் புரதம் உள்ளது.
 - யோகர்ட் (yogurt), பால், பாலாடைக்கட்டி போன்ற பெரும்பாலான பால் பொருட்களிலும் சோயா பொருட்களிலும்கூட உயர்தரப் புரதம் உள்ளது.
 - டையாலிஸிஸ் நோயாளிகள் தங்களது ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள சரியான வகை புரதத்தை சரியான அளவு உட்கொள்வது முக்கியம்.
 
 
															முக்கியம்! புரத உணவுகளில் பாஸ்பேட் அடங்கியுள்ளது. டையாலிஸிஸ் நோயாளிகள் தங்களது எல்லா உணவுகளோடும் பாஸ்பேட் பைண்டரை (phosphate binders) எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாஸ்பரஸ் குறைவு
- கழிவுப் பொருட்களை வடிகட்டுவதில் சிறுநீரகங்களின் திறன் குறையும்போது இரத்தத்தில் பாஸ்பேட் அளவு அதிகரிக்கிறது.
 - இரத்தத்தில் பாஸ்பேட் அளவு கூடும்போது எலும்புகளிலிருந்து கால்ஷியம் எடுக்கப்படுகிறது. கால்ஷியமும் பாஸ்பேட்டும் சேர்ந்து நோயாளியின் திசுக்களில் இறுகிய படிவங்களை உண்டாக்குவதனால் தோல் அரிப்பு, மூட்டு வலி, கண் எரிச்சல் ஏற்படுவதோடு அவர்களது இரத்தக் குழாய்களும் இறுகிவிடுகின்றன. காலப்போக்கில், நோயாளியின் எலும்புகள் பலவீனமடைந்து உடைந்துவிடுகின்றன. இதனால், எலும்பு முறிவு மற்றும் தீராத வலி ஏற்படுகிறது.
 - பாஸ்பேட் அளவு நீண்ட காலத்துக்கு அதிகமாக இருக்கும் நோயாளிகளுக்கு இரத்தக் குழாய்கள் இறுகிவிடுவதால் (இரத்தநாள சுண்ணாம்புபடிதல்) இருதயம் செயலிழந்து மரணம் ஏற்படும் அபாயம் அதிகமாகிறது.
 - HD மற்றும் PD நோயாளிகள் இருசாராருமே தங்கள் உணவில் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். டையாலிஸிஸ் நோயாளிகளுக்கு பாஸ்பேட் பைண்டர்கள் பரிந்துரைக்கப்படுகிறது, உணவிலிருந்து உட்கிரகிக்கப்பட்டு இரத்த ஓட்டத்துக்குச் செல்லும் பாஸ்பேட்டின் அளவைக் குறைக்க இந்த மருந்து உதவுகிறது.
 - பாஸ்பேட் அதிகமுள்ள இத்தகைய உணவுகளைத் தவிருங்கள்:
- பால் பொருட்கள் (எ.கா. பால், பாலாடைக்கட்டி, யோகர்ட்)
 - எலும்பு சார்ந்த சூப்கள் (எ.கா. கோழிக் கால் மற்றும் பன்றியிறைச்சி எலும்பு)
 - விதை வகைகள் (எ.கா. எல்லா வகை கொட்டை பருப்புகள், விதை சூப்)
 - கோலா
 - கோக்கோ மற்றும் தொடர்புடைய பொருட்கள்
 - மால்ட் பானங்கள் (எ.கா. மிலோ, ஹார்லிக்ஸ், ஓவால்டின்)
 
 - பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட உணவு (எ.கா. டின்களில் அடைக்கப்பட்ட இறைச்சி, ஸாசேஜ்).
 - இறைச்சி உறுப்புகள் (எ.கா. கல்லீரல், குடல் ).
 - டின்களில் அடைக்கப்பட்ட சார்டின் மீன் , நெத்திலி மீன் (ஐகான் பிலிஸ்) மற்றும் இறால் கருவாடு பேஸ்ட்.
 
பொட்டாஸியம்
- பொட்டாஸியம் என்பது ஒருவகை தாதுப்பொருள், நரம்புகளும் தசைகளும் செயல்படுவதற்கு இது முக்கியம்.
 - இரத்தத்தில் பொட்டாஸியத்தை பாதுகாப்பான அளவில் வைத்துக்கொள்வது முக்கியம்.
 - பொட்டாஸியத்தின் அளவு மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருந்தால், அது மிகவும் ஆபத்தானது, அது மாரடைப்புக்கு வழிவகுக்கலாம்.
 - தசை பிடிப்பு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்றவை குறைந்த பொட்டாஸியம் அளவைக் காட்டும் சில அறிகுறிகளும் அடையாளங்களும் ஆகும். அதுபோல், பொட்டாஸியம் அளவு அதிகமானால், தசை பலவீனம், அசாதாரணமான இதய துடிப்பு மற்றும் கடைசியில் இருதய செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.
 - PD செய்யும் நோயாளிகள் தினந்தோறும் டையாலிஸிஸ் செய்வதால், இந்த முறையில் பொட்டாஸியம் மிகத் திறமையாக வெளியேற்றப்படுகிறது. பொதுவாக, PD செய்யும் நோயாளிகள் HD செய்யும் நோயாளிகளைப் போல, மிகக் கடுமையாக பொட்டாஸியம் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை.
 - HD செய்யும் நோயாளிகளின் இரத்தத்தில் பொட்டாஸியம் அளவு மிகவும் அதிகரிக்கலாம், இது அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாகலாம். HD செய்யும் நோயாளிகள் தங்களுடைய அன்றாட உணவில் பொட்டாஸியம் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 - பழங்கள் மற்றும் காய்கறிகளில்தான் பொட்டாஸியம் அதிகமாக உள்ளது. கொட்டை பருப்புகள், உலர்ந்த விதைகள் மற்றும் பால் பொருட்களிலும் கணிசமான அளவு உள்ளது.
 - பொட்டாஸியம் அதிகமுள்ள மற்ற உணவுகள்:
- அதிகளவு பொட்டாஸியம் உள்ள பழங்களும் காய்கறிகளும்.
 - முழுதானியங்கள், பிரெட் மற்றும் பிஸ்கட்.
 - கொட்டை பருப்புகள், விதைகள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் (எ.கா. சாக்லேட், பீனட் பட்டர்).
 - தேங்காய் மற்றும் தொடர்புடைய பொருட்கள் (எ.கா. தேங்காய் பால், கயா).
 - எல்லா புதிய/டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறி சாறு, மூலிகை மருந்து பானங்கள், ஸ்ட்ராங் தேநீர்/காபி, கோகோ மற்றும் மால்ட் பானங்கள், பால், திராட்சைமது.
 - நாட்டு சர்க்கரை, வெல்லப் பாகு, மேப்பில் ஸிரப், மிட்டாய்கள், அதிமதுரம்.
 - அதிக அளவு பொட்டாஸியம் உள்ள மாற்று உப்பு, பாட்டிலில் அடைக்கப்பட்ட சாஸுகள், இறைச்சி மற்றும் காய்கறி சாறு, கோழி சாரம், சுவையூட்டுகிற கட்டி.
 
 
டிப்! காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 1 முதல் 2 மணிநேரத்துக்கு தண்ணீரில் ஊறவைத்தால், அதிலுள்ள பொட்டாஸியம் அளவைக் குறைக்கலாம்.
குறைந்தளவு சோடியம்
- சோடியம் இயற்கையாகவே எல்லா வகை உணவுகளிலும் உள்ளது, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மிக அதிகமாக உள்ளது. சோடியம் அதிகமாக உள்ள ஒரு மூலப்பொருள் உப்பு.
 - சோடியம் தாகத்தை அதிகரிக்கும், அதிகளவு நீர் அருந்த வேண்டுமென்ற உணர்வைக் கூட்டும்.
 - இதன் விளைவாக, திரவ அளவு உயர்வதால் எடை கூடுவதோடு, இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இது இருதயத்துக்கு கூடுதலாக சுமை அளிக்கும்.
 - சிறுநீரக நோய் உள்ளவர்கள் சோடியம் அளவைக் கட்டுப்படுத்துவது திரவ சமநிலையைக் காத்துக்கொள்ள உதவுகிறது.
 - சோடியம் உட்கொள்வதைக் குறைக்க உதவும் டிப்ஸ்:
- சமையலில் சேர்க்கிற உப்பு/சாஸுகள் அளவை குறைக்கவும்.
 - சுவையூட்டுகிற கட்டிகள், இறைச்சி மற்றும் காய்கறி சாறுகளைத் தவிருங்கள், உதாரணமாக, இறைச்சி சத்துப்பொருள் நீர்மம் (Bovril) மற்றும் தேறல் காடிச் சத்து (Marmite).
 - பாட்டிலில் அடைக்கப்பட்ட கோழிச் சாறுகளைத் தவிர்த்துவிடுங்கள்.
 - பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள விவரச் சீட்டை வாசியுங்கள், 100கி உணவுப் பொருட்களில் 120மிகி-க்கும் குறைவான சோடியம் உள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.
 - டின்களில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதை குறைத்துவிடுங்கள்.அவற்றைப் பயன்படுத்த தீர்மானித்தால், அதிலுள்ள உப்பு நீரை வடித்துவிடுங்கள்.
 - சமைக்கும்போது உப்பு/சாஸுகளுக்குப் பதிலாக புதிய மூலிகைகள் மற்றும் முழு மசாலா பொருட்களைப் பயன்படுத்துங்கள்.
 - உணவில் சுவை கூட்ட பிரெஷ் லைம், எலுமிச்சை சாறு, அல்லது காடியைப் பயன்படுத்துங்கள்.
 
 
மாற்று உப்புகளில் பொதுவாக அதிகளவு பொட்டாஸியம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். மருத்துவர் அல்லது டயட்டீஷியனைக் கலந்தாலோசிக்காமல் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
திரவக் கட்டுப்பாடு
- டையாலிஸிஸ் நோயாளிகளுக்கு சிறுநீரக செயல்பாடு குறைவாக இருப்பதால், சிறுநீர் வெளியேறுவதும் குறையும்.எனவே, அவர்கள் திரவக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.
 - உடலில் அதிகளவு திரவம் தங்கிவிடுவதால் மூச்சுத் திணறல், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கால்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தெரியலாம்.
 - PD மற்றும் HD நோயாளிகள் இருசாராருமே தங்களது சிறுநீர் வெளியேறும் அளவு, எஞ்சிய சிறுநீரக செயல்பாடு மற்றும் உடல் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திரவம் அருந்தும் அளவைத் தீர்மானிக்க வேண்டும்.
 - PD நோயாளிகள் ஒரு பரிமாற்றத்தில் எந்தளவு திரவம் வெளியேறுகிறது என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
 - HD நோயாளிகள் இதை அளக்க, இரண்டு டையாலிஸிஸ் செயல்முறைகளுக்கு இடையே எந்தளவு எடை கூடியிருக்கிறது என்பதைக் குறித்து வைக்கலாம்.
 - நோயாளியின் சிறுநீர் வெளியேறுவதைப் பொருத்து, நாள் ஒன்றுக்கு 500மிலி முதல் 1,000மிலி வரை என அன்றாட திரவ அளவு வேறுபடலாம்.
 - அன்றாட திரவ அளவில் சுத்தமான நீர், தேநீர், காப்பி, பால், கிரேவி, சூப் மற்றும் கூழ் ஆகியவை உட்படும்.அறை வெப்பநிலையில் நீர்மமாக இருக்கும் மற்ற திரவங்களான ஐஸ் கட்டி, ஐஸ் கிரீம், ஜெல்லி ஆகியவையும்கூட திரவங்களாக கருதப்படுகின்றன.
 
															முக்கியம்! டையாலிஸிஸ் நோயாளிகள் தங்களது நர்ஸ், டயட்டீஷியன் அல்லது மருத்துவர் வடிவமைத்த திரவ விதிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
இரத்த சோகையைத் தடுத்தல்
- இரத்த சோகை என்பது சிறுநீரக செயலிழப்பின் ஒரு கோளாறாக இருப்பதால், டையாலிஸிஸ் நோயாளிகளில் இது பொதுவாகக் காணப்படுகிறது.
 - எலும்பு மஜ்ஜையில் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கத் தூண்டும் எரித்ரோபொயட்டின் (Erythropoietin) (EPO) சிறுநீரகத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.சிறுநீரக செயல்பாடு குறையும்போது, எரித்ரோபொயட்டின் உற்பத்தியாகும் (EPO) அளவும் குறைகிறது.
 - டையாலிஸிஸ் நோயாளிகளுக்கு இரத்த சோகை வர மற்ற காரணங்கள்:
- யூரியா நச்சு தேங்கிவிடுவதால் சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள் குறைகிறது
 - ஊட்டச்சத்து குறைபாடு
 - இரும்புச் சத்து குறைவு
 - ஃபோலேட் மற்றும் பிற உயிர்சத்துக்கள் குறைவு
 - ஹீமோடையாலிஸிஸ் செய்யும்போது ஏற்படும் இரத்த இழப்பு
 
 - சோர்வு, பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், நெஞ்சு வலி, பசி குறைவு, வெளிறிய தோற்றம் ஆகியவை இரத்த சோகையின் அறிகுறிகள் ஆகும்.
 
															டிப்! புரதம், இரும்புச் சத்து, விட்டமின் C, விட்டமின் B12 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை போதுமான அளவு உட்கொள்வது இரத்த சோகையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் மிக முக்கியம், ஏனென்றால், இவை புதிய சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவும் முக்கியக் கூறுகளாகும்.
*மேலேயுள்ள தகவல்களும் பரிந்துரைகளும் பொதுவான குறிப்புகள்தான். ஒரு தனி நபருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையாக எடுக்கக் கூடாது. உடல்நல தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரையோ மருத்துவ ஆலோசகரையோ பாருங்கள்.
சிறுநீரகத்துக்கு சாதகமான உணவு வகைகள்
ஆரோக்கியம் காக்க நோயாளிகள் சரிவிகித உணவு உட்கொள்வது முக்கியம். அவர்கள் சரியான வகை உணவுகளை சரியான அளவு சாப்பிட வேண்டும். டையாலிஸிஸ் நோயாளிகள் தினந்தோறும் சரியான அளவு புரதம், கலோரிகள், திரவம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ள உணவு உட்கொள்வது மிகவும் அவசியம். கீழேயுள்ள உணவு வகைகள் டையாலிஸிஸ் நோயாளிகளுக்கு ஏற்றவை. என்ன சாப்பிட வேண்டும், எந்தளவு சாப்பிட வேண்டும் என்று உங்களுடைய தனிப்பட்ட தேவைகளை அறிய தயவுசெய்து உங்கள் டயட்டீஷியனைக் கேளுங்கள்.






								