Search
Close this search box.
Menu
Search
Close this search box.

சிகிச்சை

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

மாற்றுச் சிறுநீரகம் பெற்றவர்களுக்கான ஆரோக்கிய உணவு

சரிவிகித உணவு மிக முக்கியம்

முழு உடலின் ஆரோக்கியத்துக்கும் மாற்று சிறுநீரகம் நன்றாக வேலை செய்வதற்கும் ஆரோக்கியமான சரிவிகித உணவு மிகவும் முக்கியம். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தவர்கள் அதன் பின் சில காலத்துக்கு ஒரு பிரத்யேக உணவு முறையைப் பின்பற்ற வேண்டும்.

மாற்று சிறுநீரகம் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், தங்கள் தேவைக்கு ஏற்ப உணவுகளை எப்படித் திட்டமிட வேண்டும் என்றெல்லாம் ஒரு டயட்டீஷியன் அவர்களுக்குத் தெரிவிப்பார். ஹீமோடையாலிஸிஸ் செய்தபோது பின்பற்றிய உணவுமுறையைவிட இந்த உணவு முறை எளிதாக இருப்பதாக மாற்று சிறுநீரகம் பெற்றவர்கள் உணரலாம். ஏனென்றால், அவர்களது உடலில் பொட்டாஸியம் மற்றும் பாஸ்பரஸின் அளவைச் சீராக காத்துக்கொள்ள இந்தப் புதிய சிறுநீரகம் அவர்களுக்கு உதவும்.

உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில குறிப்புகள் இங்கே:

1.ஆரோக்கியமான உடல் எடையைக் காத்துக்கொள்ளுங்கள்

  • மாற்று சிறுநீரகம் பெற்றவர்களுக்கு எடை கூடுவது சர்வசாதாரணம்.
  • ஆரோக்கியம் மேம்பட்ட உணர்வு ஏற்படுவதாலும் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்ததாலும் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த பின் அநேகருக்கு நல்ல பசி உண்டாகிறது.
  • உடல் எடை குறியீட்டில் (BMI) 18.5-22.9கிகி/மீ2 என்ற அளவுக்குள் உங்கள் உடல் எடையை வைத்துக்கொண்டால் உயர் இரத்த அழுத்தம், இருதய கோளாறுகள், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் வருவதற்கான ஆபத்து குறையும்.
  • தவறாமல் எடை அளவைப் பாருங்கள், சுறுசுறுப்பாக இருங்கள், உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டுமானால் ஒரு டயட்டீஷியனைப் பாருங்கள்.

2. உங்களுடைய லிபிட் ப்ரோபைல் அளவைக் கட்டுப்பாட்டில் வையுங்கள்

  • டிஸ்லிபிடெமியா என்பது மாற்று சிறுநீரகம் பெற்றவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது.
  • மொத்த கொலஸ்டிரால், குறை அடர்த்தி கொழுப்புப் புரதம் (Low-density lipoprotein) (LDL) மற்றும் டிரைக்ளிசரைடுகளின் அளவுகள் அதிகரிப்பது இருதய கோளாறுகள் வருவதற்கான ஆபத்தைக் கூட்டுகிறது.
ஆரோக்கியமான இருதயத்துக்காக, உங்களுடைய இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவுகளைக் கட்டுக்குள் வைக்கிற ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுங்கள்:

3.உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வையுங்கள்

  • மாற்று சிறுநீரகம் பெற்ற பெரும்பாலான நபர்கள் சோடியம் அளவை இப்போதும் குறைக்க வேண்டும்.
  • உறுப்பு மாற்று சிகிச்சை மருந்துகள், முக்கியமாக ஸ்டீராய்டுகள், உடலின் திரவ அளவைக் கூட்டுகின்றன. அதிக அளவு சோடியம் உட்கொள்வது இந்தப் பிரச்சினையை மோசமாக்குகிறது.
  • இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது சிறுநீரகம் மாற்றுவதற்கு முன்பும் சரி, பின்பும் சரி மிக மிக முக்கியம்.
  • ஒரு நாளைக்கு 2,000மிகி-க்கும் குறைவான அளவு சோடியத்தை உட்கொள்ளுங்கள். கூடுதல் தகவலுக்கு “அதிக உப்பை உதறித் தள்ளுங்கள்” என்ற பகுதியைக் காண்க.

உப்பு உட்கொள்ளலைக் குறையுங்கள் துண்டுப்பிரதியை பதிவிறக்கம் செய்யஇங்கேக்ளிக் செய்க.

4.எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்

  • சிறுநீரகம் மாற்றி வைக்கப்பட்ட ஆரம்பக் கட்டத்தில் எலும்புத் தாது அடர்த்தி (bone mineral density) படிப்படியாகக் குறைகிறது.
  • ப்ரெட்னிசோன் மருந்து, ஹைபர்பாராதைராடிஸிம், அசாதாரண விட்டமின் D வளர்சிதை மாற்றம் ஆகியவற்றால் உடல் கால்ஷியத்தை கிரகிப்பது குறைகிறது. எலும்புகள் இன்னும் பலவீனமடைய இவையும் காரணமாகிவிடுகின்றன.
  • பெண்களுக்கு குறிப்பாக, மாதவிடாய் நின்றுவிட்டவர்களுக்கு எலும்புகள் தேய்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
  • மாற்று சிறுநீரகம் பெற்றவர்களின் எலும்பு தேய்மானம் ஆகியிருக்கிறதா என்பதை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதை ஆரோக்கியமாக வைப்பதற்கான வழிகளைப் பரிந்துரை செய்வார்கள். குறைந்த கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் யோகர்ட் போன்ற பால் பொருட்கள் உட்பட்ட ஒரு சப்ளிமெண்டை தினமும் இரண்டு தடவை உணவில் சேர்க்கச் சொல்வார்கள்.

முக்கியம்! மாற்று சிறுநீரகம் பெற்றவர்கள் எந்தவொரு சப்ளிமெண்ட்-களையும் சொந்த இஷ்டத்துக்கு தொடங்கக் கூடாது. அவர்களுடைய புதிய சிறுநீரகத்தை இது பாதிக்கலாம்.

5.இரத்த சோகையைத் தடுத்தல்

  • மாற்று சிறுநீரகம் பெற்றவர்களுக்கு இரத்த சோகை வரவும் வாய்ப்பிருக்கிறது.
  • இரும்புச் சத்து, ஃபோலேட் மற்றும்/அல்லது விட்டமின் B12 குறைவான உணவுகள் இரத்த சோகையை உண்டாக்கலாம்.
  • நல்ல ஆரோக்கியத்தைக் காக்கவும் மரணம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும் இரத்த சோகையைத் தடுப்பதோடுகூட சரிசெய்ய வேண்டியதும் முக்கியம்.

6. பாதுகாப்பான உணவுப் பழக்கங்கள்

  • உறுப்பு மாற்று சிகிச்சை பெற்றவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் இணக்கத்துக்கு உட்பட்டிருப்பதால், அவர்களுக்கு லிஸ்டெரியோசிஸ் என்ற உணவு சார்ந்த கோளாறு வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
  • பாதுகாப்பான உணவு சம்பந்தமான எச்சரிக்கைகளை அவர்கள் பின்பற்ற வேண்டும் (உதாரணமாக, சாலட், வேக வைக்காத மீன் போன்ற சமைக்காத உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும்).
  • பாதுகாப்பான உணவு பற்றி கூடுதல் அறிய ஒரு டயட்டீஷியனைப் பாருங்கள்.

பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

மாற்று சிறுநீரகம் பெற்றவர்கள், உடனேயே அதிக அளவு புரதம் உள்ள உணவு முறையைப் பின்பற்றுவது அவசியம். ஸ்டீராய்டுகள் அதிக அளவில் எடுத்ததால் உடைந்துபோன தசை திசுக்களை புதுப்பிக்க அது உதவும். என்றாலும், சிறுநீரகம் மாற்றப்பட்டு பல மாதங்களுக்குப் பின்பு ஆரோக்கியமான நபர்கள் எடுக்கும் அளவு புரதத்தை நீங்கள் எடுத்தால் போதுமானது. குணமடைய உங்களுக்கு எவ்வளவு புரதம் தேவை என உங்கள் டயட்டீஷியன் சொல்வார்.

சிறுநீரகம் மாற்றி வைக்கப்பட்டவர்கள், அது நன்றாக வேலை செய்யும் வரை பொட்டாஸியம் அளவைக் குறைக்க வேண்டியிருக்காது. என்றாலும், உறுப்பு மாற்று சிகிச்சையில் உட்பட்ட சில மருந்துகள் இரத்தத்தில் பொட்டாஸியம் அளவைக் கூட்டலாம், சில மருந்துகள் அதைக் குறைக்கலாம். அப்படி ஏற்பட்டால், உங்கள் இரத்தத்திலுள்ள பொட்டாஸியம் அளவைப் பொறுத்து உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள். தவறாமல் பரிசோதிப்பது முக்கியம்.

ஆரோக்கியமான உணவு முறை, நீரிழிவுக்கான மருந்து (தேவைப்பட்டால்) மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியம். உங்கள் உணவுப் பழக்கத்தையும் இரத்தத்தில் சர்க்கரை அளவையும் சரியான கட்டுப்பாட்டில் வைக்க உங்கள் மருத்துவரோடும் டயட்டீஷியனோடும் சேர்ந்து செயல்படுங்கள்.

திராட்சையில் ஃபுரானோகௌமரின் என்ற ரசாயனம் இருப்பதால், மாற்று சிறுநீரகம் பெற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் பலவற்றின் வளர்சிதையை மாற்றிவிடுகிறது. அதாவது சைக்ளோஸ்பொரின், டக்ரோலிமஸ், கால்ஷியம் சேனல் ப்ளாக்கர்ஸ் மற்றும் ஸ்டாட்டின் போன்றவற்றின் வளர்சிதையை மாற்றிவிடுகிறது. எனவே, சிறுநீரகம் மாற்றி வைக்கப்பட்டவர்கள் திராட்சைப் பழத்தை எந்த விதத்திலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

*மேலேயுள்ள தகவல்களும் பரிந்துரைகளும் பொதுவான குறிப்புகள்தான். ஒரு தனி நபருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையாக எடுக்கக் கூடாது. உடல்நல தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரையோ மருத்துவ ஆலோசகரையோ பாருங்கள்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top

Notice

Thank you for visiting our website.

Please be informed that our online donation portal will be temporarily unavailable on Tuesday, 17th December 2024, from 03:00 AM to 05:00 AM, and Saturday, 21st December 2024, from 11:00 PM to Monday, 23rd December 2024, 05:00 AM for maintenance.

If you have any donation inquiries during this time, please feel free to email us at lifedrops@nkfs.org.

We apologise for any inconvenience caused.