சிறுநீரக செயலிழப்பு
- முகப்பு
- >
- மௌனக் கொலையாளியை வெல்ல 8 உத்திகள்!
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
மௌனக் கொலையாளியை வெல்ல 8 உத்திகள்!
சிறுநீரக நோய் ஒரு மௌனக் கொலையாளியாகும். அது நாள்கணக்காக உள்ளே இருந்தாலும், கடைசி கட்டம் வரை திட்டவட்டமான அறிகுறிகள் எதுவும் வெளியே காட்டுவதில்லை. சிறுநீரக நோயைத் தடுக்க ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் கைகொடுக்கும்!
சிறுநீரக நோய் வருகிற ஆபத்தைக் குறைக்க 8 உத்திகள் இதோ:
வெளியே உணவு உண்ணும்போது சர்க்கரை, சோடியம் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ள உணவைத் தேர்ந்தெடுக்க மனதார முயற்சி செய்யுங்கள்!
சோடியம் ஏன் ஆபத்தானது?
1 of 3 கிளிக் செய்கஉங்கள் சர்க்கரைஅளவைக் குறைக்கவும் – சர்க்கரை இல்லாமல் வாழ்வை சுவையாக்குங்கள்!
2 of 3 கிளிக் செய்கதீங்குவிளைவிக்கும் கொழுப்புகளுக்குப் பதிலாக ஆரோக்கியமளிக்கும் கொழுப்புகளை உணவில் எப்படிச் சேர்த்துக்கொள்வது எனக் கண்டுபிடியுங்கள்.
3 of 3ஆபத்துக்களை அறிந்திருங்கள்!
உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்து அதிகம். சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும் அளவாக உண்பதன் மூலமும் உடல் எடையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தவறாமல் உடற்பயிற்சி செய்தால் பலன்கள் ஏராளம்:
உங்கள் உடல் அமைப்பை அளவிட உதவும் ஆரோக்கியம் மற்றும் உடற்கட்டு குறித்த தகவல்கள் இதோ.
புகைப் பழக்கத்தை நிறுத்துங்கள் & மதுபானத்தைக் குறையுங்கள்
புகைப்பிடிப்பதால் உடலிலுள்ள இரத்தக் குழாய்கள் சேதமடைகின்றன. அதனால், சிறுநீரகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது, அவற்றின் இயல்பான செயல்பாட்டுத் திறனும் குறைகிறது. புகைப் பிடிப்பதால் உங்களுக்கு சிறுநீரக புற்றுநோய் வரும் ஆபத்தும் அதிகமாகிறது.
புகைப் பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிகளைப் பற்றி ஒரு மருத்துவரிடம் பேசுங்கள். தேவைப்பட்டால், நிக்கோட்டின் மாற்றீடு சிகிச்சையை (Nicotine Replacement Therapy) (NRT) எடுங்கள்.
அளவுக்கு மீறி மதுபானம் அருந்துவதால் உங்களுடைய இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். சிறுநீரக நோய் வருவதற்கு மிகப் பொதுவான ஒரு காரணம் உயர் இரத்த அழுத்தமே.
ஹெல்த் ஹப் சிங்கப்பூரின் படி, ஆண்கள் ஒரு நாளைக்கு 2 ஸ்டாண்டர்டு அளவுக்கு மேலோ, பெண்கள் ஒரு நாளைக்கு 1 ஸ்டாண்டர்டு அளவுக்கு மேலோ மது குடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒரு ஸ்டாண்டர்டு அளவு மதுபானம் என்றால்:
சாதாரண பியர் 1 கேன் (330 மிலி), 1/2 க்ளாஸ் வைன், (100 மிலி) சாராயம் 1 நிப் (30 மிலி)
உணவுக் கட்டுப்பாடு
தினமும் 2 கப் பழங்கள் + 2 கப் காய்கறிகள் ஆகியவற்றோடு முழு தானியங்களும் கொழுப்பில்லாத இறைச்சியும் சேர்த்து உட்கொள்வதே ஆரோக்கிய உணவு முறையாகும்.
முறையான உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.
வாழ்வின் எல்லா கட்டத்திலும் உடல்சார்ந்த செயல்கள் அவசியம். வயதுக்கு தகுந்தாற் போல உடல்சார்ந்த செயல்களில் ஈடுபட சில ஆலோசனைகள் இங்கே உள்ளன.
கூடுதல் அறிக
இரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவையும் கண்காணியுங்கள்
நீங்கள் நீரிழிவு நோயாளியாகவோ, உயர் இரத்த அழுத்தம் உள்ளவராகவோ இருந்தாலும்கூட, சிறுநீரக செயலிழப்பைத் தவிர்க்கலாம். அதற்கு:
- இரத்தத்தில் சர்க்கரை அளவை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்
- இரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க வேண்டும்
- இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை குறைக்க வேண்டும்
- தவறாமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்
- மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும்
உங்கள் உணவை நீங்களே தயாரியுங்கள்
வீட்டில் சமைத்து உண்பதே சிறந்தது. அப்போதுதான் உணவில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவை நம்மால் கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கிய உணவுப் பழக்கத்தில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்குக் கைகொடுக்க ஆரோக்கிய உணவு வகைகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் சமைக்க உங்களுக்கு நேரமில்லை என்றால், டென்ஷன் வேண்டாம்! தெரு விற்பனையாளர் கைடு PDF பதிவிறக்கம் செய்யுங்கள். வெளியே இருக்கையில் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதற்கான சில பரிந்துரைகள் இதில் உள்ளது.
ஆரம்பத்திலேயே கண்டறிவது முக்கியம்
சிறுநீரக செயலிழப்பைக் கண்டறிய உடல்நல ஸ்கிரீனிங் ஆரம்பத்திலேயே செய்வது முக்கியம். ஏனென்றால், சிறுநீரக நோயின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால், பிற்காலத்தில் சிறுநீரக கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு வரும் அபாயம் இருந்தால் கூடுதல் கண்டறியவும்
குறிப்பு: உங்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தாலோ டையாலிஸிஸ் செய்வதால் சில உணவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ, உணவுமுறையில் மாற்றம் செய்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரையோ டயட்டீஷியனையோ அணுகுங்கள். மேலே உள்ள தகவல்கள், தங்களது சிறுநீரகங்களைப் பாதுகாக்க விரும்புகிறவர்களுக்கும் சிறுநீரக நோய் வருவதற்கான ஆபத்து உள்ளவர்களுக்கும் உதவவே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே சிறுநீரக நோய் உள்ளவர்களுக்காக அல்ல.