Menu

எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்

நன்கொடை திட்டங்கள்

கல்வி மற்றும் தடுப்பு முறை

மிகப் பெரிய அளவில் சமூகக் கல்விக்கு கவனம் செலுத்துவது முக்கியம், சிறுநீரக செயலிழப்பு போன்ற மோசமான பிரச்சினைகள் உருவாவதை தள்ளிப் போடவும் தடுக்கவும் அது போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம் சம்பந்தமான பேச்சுகள் கொடுக்கவும், கருத்தரங்கு மற்றும் உடல்நல ஸ்கிரீனிங்கள் நடத்தவும், டையாலிஸிஸ் மையங்களில் ஓபன் ஹவுஸ் நடத்தவும் பள்ளிகள் மற்றும் சமுதாயங்களில் சமூக சேவை திட்டங்கள் நிறுவவும் உங்கள் நன்கொடை உதவுகிறது.

லைப் ட்ராப்ஸ்

இண்டர் பேங்க் GIRO அல்லது கிரெடிட் கார்டு மூலமாக ஒரு சிறிய தொகையை மாதந்தோறும் அளிக்க நன்கொடையாளர்களுக்கு உதவுகிற மாதாந்திர நன்கொடை திட்டம். இது ஆதரவளிக்க உதவுவதோடு, எங்களுடைய திட்டங்களைத் தொடர்ச்சியாகவும் ஸ்திரமாகவும் நடத்த உறுதியளிக்கிறது. வசதி வாய்ப்பற்ற எங்களுடைய சிறுநீரக நோயாளிகள் நிறைவான வாழ்க்கை வாழ உதவுவதற்கு நீங்களும் எங்களோடு தோள் சேரலாம்.

டையாலிஸிஸ் இயந்திரங்கள்

நோயாளிகளின் உயிர்நாடியாக இருக்கிற இந்த இயந்திரங்கள் ஒன்றின் சராசரி வாழ்நாள் 7-8 வருடங்கள் ஆகும். $20,000 நன்கொடை தொகைக்கு ஒரு டையாலிஸிஸ் இயந்திரம் கிடைக்கிறது, வாரத்தில் 3 நாட்களுக்கு ஒவ்வொரு முறையும் 4-5 மணிநேரம் டையாலிஸிஸ் செய்கிற 6 நோயாளிகள் இதிலிருந்து பயனடைவார்கள்.

A.K. அளிப்பவர்

நோயாளிகள் வாரத்தில் மூன்று முறை சிகிச்சைக்கு வருவார்கள், இப்படி அவர்கள் வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டும். இந்தச் சிகிச்சைக்காக அவர்கள் ஒரு செயற்கை சிறுநீரகத்தைச் சார்ந்திருக்கிறார்கள், இது அவர்களுடைய உடலிலிருந்து கழிவுப் பொருட்களையும் அதீத திரவத்தையும் வடிகட்டுகிறது. ஒரு $25 நன்கொடை மூலமாக ஒரு நோயாளி ஒரு வாரத்துக்குப் பயனடைவார்.

பொதுநலம்

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பை சமாளிப்பதோடு எங்கள் நோயாளிகள் பலருக்கு இடைவிடாத ஊக்கமூட்டலும் முழுமையான பராமரிப்பும் தேவைப்படுகிறது. உங்களுடைய நன்கொடைகள் அவர்களது மனநலத்தையும் உடல்நலத்தையும் பேணவும், சத்தான உணவுகள் வாங்கவும், பயணச் செலவுக்குக் கைகொடுக்கவும் உதவுவதால், பணம் மற்றும் உணர்ச்சிரீதியான சுமையைக் குறைக்கிறது.

விசேஷ நாட்கள்

ஆண்டு விழா, பிறந்த நாள், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, திருமண நாள் அல்லது தாய்மார்/தந்தைமார் தினம் என எதுவாகவும் இருக்கட்டும், உங்கள் கொண்டாட்டங்களுக்குப் புதுப்பொலிவு கொடுங்கள், அதை நிஜமாகவே விசேஷமுள்ள நாளாக்குங்கள்! உங்கள் அன்புக்குரியவரின் பெயரில் நன்கொடை அளிப்பது, அவரை கௌரவப்படுத்தவோ அவருக்கு அஞ்சலி செலுத்தவோ மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. வசதிவாய்ப்பற்ற சிறுநீரக நோயாளிகளுக்கு வாழ்வும் வெளிச்சமும் கொடுங்கள், இந்த நாளை மறக்கமுடியாத, அர்த்தமுள்ள நாளாக்குங்கள்!

பொருட்கள் நன்கொடை

எங்கள் அமைப்பின் பணிக்கு ஏற்ற பொருட்களை நன்கொடையாகக் கொடுத்தால், அதை நாங்கள் மனதார ஏற்றுக்கொள்கிறோம். உதாரணமாக, நோயாளிகளின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள், எங்களுடைய நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை நீங்கள் நன்கொடையாகத் தரலாம். நோயாளிகளின் தேவையையோ நிகழ்ச்சிக்கு அவசியமானதையோ பொருத்து இது இருக்கலாம்.

எங்களுக்குத் தேவைப்படும் பொருட்களைப் பற்றி கூடுதல் அறிய தயவு செய்து lifedrops@nkfs.org -ல் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

திட்டமிட்ட நன்கொடைகள் கொடுங்கள்

இந்தத் திட்டத்தின் மூலம், உங்கள் சொத்து, CPF, சேமிப்பு அல்லது ஆயுள் காப்பீட்டை என்கேஎப் -க்கு கொடுக்க உறுதிமொழி அளிக்கலாம். இது உங்கள் மரணத்துக்குப் பிறகே அமலுக்கு வரும். சொத்துக்களை உயில் வாயிலாகவும், CPF சேமிப்புகளை CPF நாமினேஷன் வாயிலாகவும், ஆயுள் காப்பீடுகளை உங்கள் காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாகவும் எங்களுக்குத் தர உறுதிமொழி அளிக்கலாம்.

கொடுப்பதற்கு மற்ற வழிகள்

ஏழை நோயாளிகளுக்கு உதவ எண்ணற்ற வழிகள் உள்ளன. உங்களுக்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுத்து உதவுங்கள். உங்கள் தாராள குணத்தை எங்கள் நோயாளிகள் உயர்வாகக் கருதுவார்கள். (ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)

என்கேஎப் நண்பர்கள் திட்டம்

என்கேஎப் நண்பர்கள் (Friends of NKF) (FON) திட்டம் 2016 நவம்பரில் தொடங்கப்பட்டது. வருடக்கணக்காக, கருணை மனதோடும் தாராள குணத்தோடும் எங்கள் லட்சியத்தில் எங்களோடு துணை நிற்கிறவர்களுக்கு நன்றிபாராட்டும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டது.
(ஆங்கிலத்தில் எழுதப்பட்டது)

தொண்டூழியராக இருங்கள்

துயரங்களிலிருந்து மீண்டு வரவும் ஓரளவு தரமான வாழ்க்கை வாழவும் நோயாளிகளை ஊக்குவிப்பதில் தொண்டூழியர்கள் பங்களிக்கிறார்கள்.

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top

Notice

Thank you for visiting our website.

Please be informed that our online donation platform will be temporarily unavailable on Sunday, 2nd November 2025, from 10:00 AM to 8:00 PM for scheduled maintenance.

To donate, you may launch your mobile app and scan the QR code below, or select PayNow and key in our UEN: 200104750M.

If you require tax deduction for this donation, please key in your NRIC/FIN/UEN and phone number in the UEN/BILL REFERENCE NO. field.

If you have any other donation enquiries, please feel free to email us at lifedrops@nkfs.org

We apologise for any inconvenience caused.