Menu

பலவகை சிகிச்சை முறைகள்

ஹீமோடையாலிஸிஸ்

ஹீமோடையாலிஸிஸ் என்பது ஒரு டையாலிஸிஸ் இயந்திரத்தின் உதவியோடு இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களையும் கூடுதலான உப்பையும், திரவங்களையும் நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிற ஒரு வழிமுறையாகும். பொட்டாஸியம், சோடியம், குளோரைடு போன்ற ரசாயன பொருட்களின் சமநிலையைக் காத்துக்கொள்ள இது உதவுகிறது.

பெரிடோனியல் டையாலிஸிஸ் (PD) என்றால் என்ன?

வீட்டிலேயே செய்யப்படுகிற இந்தச் சிகிச்சை முறையில், உங்களுடைய பெரிடோனியத்தின் உள்ளே உள்ள சவ்வு இயற்கை வடிகட்டியாக செயல்படுகிறது. சுழற்சி முறையில் உங்களுடைய பெரிடோனியத்துக்குள்ளே செலுத்தப்பட்டு பின்பு வெளியேற்றப்படுகிற ஒரு தொற்றில்லாத கரைசல் வழியாக கழிவுகள் அகற்றப்படுகின்றன. PD-யில் 2 வகைகள் உள்ளன – தொடர்ச்சியான ஆம்புலேட்டரி பெரிடோனியல் டையாலிஸிஸ் (Continuous Ambulatory Peritoneal Dialysis) மற்றும் ஆட்டோமேட்டட் பெரிடோனியல் டையாலிஸிஸ் (Automated Peritoneal Dialysis).

சிறுநீரக மாற்று சிகிச்சை

குடும்ப அங்கத்தினராகவோ நண்பராகவோ இருக்கும் நீங்கள் ஒரு உயிருள்ள சிறுநீரக தானமளிப்பவராக இருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சிறுநீரகம் மாற்றி வைப்பதுதான் உள்ளதிலேயே மிகச் சிறந்த சிகிச்சை. ஏனென்றால், மாற்றிவைக்கப்பட்ட சிறுநீரகம் செயலிழந்த சிறுநீரகத்துக்குப் பதிலாக கிட்டத்தட்ட முழுமையாக செயல்படுகிறது, இதனால் நோயாளியால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறது.

நோயாளி | பராமரிப்பாளருக்கான துணை சேவைகள்

வளங்கள் மற்றும் பராமரிப்பு திட்டங்களை அளிப்பதன் மூலம் என்கேஎப் நோயாளிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ஆதரவுக் கரத்தை விரிவுபடுத்தியுள்ளது.

டையாலிஸிஸ் நோயாளிகளுக்கு பயனுள்ள தகவல்கள்

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top